ஒரு சாதுவின் இரண்டாம் நிலைப் பண்புகள்
மொழிபெயர்ப்பு
ஸாதுவின் அடையாளங்கள் என்னவென்றால், அவர் எல்லா வாழும் உயிரினங்களிடம் கொள்ளும் சகிப்புத் தன்மை, கருணை, தோழமை ஆகும். அவருக்கு எதிரிகள் இல்லை, அவர் அமைதியானவர், புனித நூல்களைப் பின்பற்றுபவர். அவரின் எல்லா தனிப் பண்புகளும் விழுமியவை.
மேலே வர்ணிக்கப்பட்டதுபோல, ஸாது என்பவர் பகவானின் பக்தராவார். அதனால், அவருடைய அக்கறை பகவானிடம் பக்தித் தொண்டு செய்வது பற்றிய அறிவொளியை மக்களிடம் ஏற்படுத்துவதே ஆகும். அதுவே அவர் கருணையாகும். பகவானுக்குப் பக்தித் தொண்டு புரியாத மனித வாழ்வு பாழ் என்று அவர் அறிவார். ஒரு பக்தர் நாடு முழுவதும் பயணம் செய்து, வீடு வீடாகச் சென்று, “கிருஷ்ண உணர்வு கொள், பகவான் கிருஷ்ணரின் பக்தராக இருங்கள். உங்கள் மிருக மனப்பாங்கை நிறைவு செய்வதால் உங்கள் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள். மனித வாழ்வு என்பது தன்னை உணர்தலுக்காக அல்லது கிருஷ்ண உணர்வு கொள்வதற்காக உள்ளது” என்று பிரச்சாரம் செய்கிறார். இவையே ஒரு ஸாதுவின் பிரச்சாரம் ஆகும். அவர் தன் தனிப்பட்ட வீடுபேறு பற்றித் திருப்தி அடைவதில்லை. அவர் எப்போதும் மற்றவர்கள் பற்றியே நினைக்கிறார். அவர் பாபம் செய்த அனைத்து ஆத்மாக்களின் மேல் மிகவும் அன்பான மனிதர். அதனால், அவருடைய தகுதிகளில் ஒன்று காருணிகா: கீழே விழுந்த ஆத்மாக்களிடம் கருணை கொள்ளுதலாகும். பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது, அவர் பல்வேறு எதிர்ப்புச் சக்திகளைச் சந்திக்க வேண்டி வரும், அதனால் ஸாது அல்லது பகவானின் பக்தர், சகிப்புத் தன்மை உடையவராய் இருத்தல் வேண்டும். சிலர் அவரைக் கொடுமைப்படுத்தலாம். ஏனென்றால், கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்கள் பக்தித் தொண்டின் தெய்வீக அறிவைப் பெறத் தயாராக இல்லை. அவர்கள் அதை விரும்பவில்லை; அது அவர்கள் நோய். ஸாது, பக்தித் தொண்டின் முக்கியத்துவத்தை அவர்களிடம் பதியச் செய்யும் நன்றிக்கு அப்பாற்பட்ட வேலையை மேற்கொள்கிறார். சில சமயம் பக்தர்கள் வன்முறையால் பாதிக்கப்படுகிறார். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்; ஹரிதாஸ தாகூர் 22 அங்காடி இடங்களில் அடிக்கப்பட்டார்; சைதன்யப் மஹாபிரபுவின் தலைமை உதவியாளர் நித்யாநந்தா, ஜகாய் மற்றும் மாதாய் என்பவர்களால் வன்முறையாகத் தாக்கப்பட்டார். ஆனால் அவர்கள் அக்கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்டனர். ஏனென்றால், அவர்களின் சமயப் பணியே பாபம் செய்த ஆத்மாக்களைக் கடைத்தேற்றுவதாகும். ஸாதுவின் தகுதிகளில் ஒன்று என்னவென்றால், அவர் சகிப்புத் தன்மை உள்ளவர். பாபம் செய்த ஆத்மாக்களிடம் கருணை உள்ளவர். அவர் கருணை படைத்தவர். ஏனென்றால், அவர் வாழும் உயிரினங்களின் நலனை விரும்புகிறவர். அவர் மனித சமுதாயத்திற்கு மட்டுமின்றி விலங்கு சமுதாயத்திற்கும் நலம் விரும்பி ஆவார். ஸர்வ தேஹினாம் என்பது ஜடவுலக உடல்களை ஏற்றுக் கொண்ட எல்லா உயிரினங்களையும் குறிக்கிறது என்று இங்கு கூறப்படுகிறது. மனித உயிரினம் மட்டுமே அல்லாமல், பூனைகள், நாய்கள் போன்ற பிற வாழும் உயிரினங்களும் ஜடவுலக உடல்களைப் பெற்றுள்ளன. பகவானின் பக்தர் எல்லாரிடமும் பூனைகள், நாய்கள், மரங்கள் முதலியன, கருணை கொண்டவர், அவர் எல்லா வாழும் உயிரினமும் இறுதியாக இந்த ஜடவுலகக் கட்டிலிருந்து விடுபட்ட முக்தி பெறும் விதத்தில் அவர்களை நடத்துகிறார். சைதன்யப் பிரபுவின் சீடர்களில் ஒருவரான சிவானந்த சேனா, ஆன்மீக நிலையில் ஒரு நாயை நடத்தியன் மூலம் அந்த நாய்க்கு வீடுபேறு அளித்தார். ஒரு ஸாதுடன் கொண்ட தொடர்பினால் ஒரு நாய் முக்தி அடைந்தது போன்ற பல நிகழ்ச்சிகள் உள்ளன. ஏனென்றால், ஒரு ஸாது எல்லா வாழும் உயிரினங்களின் நன்மைக்காக உயர்ந்த இரக்கமுள்ள செயல்களில் ஈடுபடுகிறார். ஒரு ஸாது யாருக்கும் பகைவராக இல்லாதபோதிலும், இந்த உலகம் நன்றியில்லாததாக இருப்பதால், ஸாதுவுக்கும் பகைவர்கள் உண்டு.
ஒரு எதிரிக்கும் நண்பருக்கும் உள்ள வேறுபாடு என்ன? வேறுபாடு நடத்தையில் உள்ளது. ஒரு ஸாது எல்லா கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களுடன், அவர்கள் இந்த உலகக் கட்டிலிருந்து இறுதியாக விடுதலை பெறும்படி நடந்து கொள்கிறார். அதனால், ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவை விடுவிப்பதில் ஒரு ஸாதுவை விட யாரும் அதிக நட்புடன் இருக்க முடியாது. ஸாது அமைதியானவர், அவர் மௌனமாக, அமைதியாக, புனித நூல்களின் கோட்பாடுகளைப் பின்பற்றுவார். ஸாது என்றால் புனித நூல்களின் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர். அதே சமயம் பகவானின் பக்தர் என்று பொருள். புனித நூல்களின் கோட்பாடுகளை உண்மையாகப் பின்பற்றுபவர், பகவானின் பக்தராக இருக்க வேண்டும். ஏனென்றால், எல்லா சாஸ்திரங்களும் பரம புருஷ பகவானின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. அதனால், ஸாது என்றால் புனித நூலின் ஆணைகளைப் பின்பற்றுபவர் என்றும் பகவானின் பக்தர் என்றும் பொருள். இந்த எல்லாத் தனித்த பண்புகள் ஒரு பக்தனிடம் மேலோங்கியிருக்கும். ஒரு பக்தர் தேவர்களின் எல்லா நல்ல குணங்களையும் வளர்ப்பார், ஆயினும் ஒரு பக்தரல்லாதார், நன்கு கல்வி கற்ற தகுதி பெற்றிருப்பினும், தெய்வீக உணர்தலின் தகுதியின்படி உண்மையான நல்ல தகுதிகள் அல்லது நல்ல தனித்த பண்புகள் இல்லாதவர்.
( ஶ்ரீமத் பாகவதம் 3.25.21 / பொருளுரை )
ஒரு சாதுவின் இரண்டாம் நிலைப் பண்புகள்
ஸாதுவின் அடையாளங்கள் மற்றும் இயல்புகள்
அடிப்படைப் பண்புகள்: ஒரு ஸாது என்பவர் எல்லா உயிரினங்களிடமும் சகிப்புத்தன்மை, கருணை மற்றும் தோழமை கொண்டவர். அவருக்கு என்று தனிப்பட்ட எதிரிகள் எவரும் இல்லை; அவர் அமைதியானவர் மற்றும் புனித நூல்களை (சாஸ்திரங்களை) வழுவாது பின்பற்றுபவர்.
பகவானின் பக்தர்: ஸாதுவின் மிக முக்கியமான அடையாளம் அவர் பகவானின் பக்தராக இருப்பதே ஆகும். அவரது அனைத்து உயரிய பண்புகளும் இந்த பக்தித் தொண்டிலிருந்தே உருவாகின்றன.
கருணை மற்றும் பிரச்சாரத்தின் நோக்கம்
அறிவொளி வழங்குதல்: பகவானைப் பற்றியும் பக்தித் தொண்டின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஸாதுவின் உண்மையான கருணையாகும்.
மக்கள் நலம்: கிருஷ்ண உணர்வு இல்லாத வாழ்வு வீணானது என்பதை அறிந்தவர் ஸாது. எனவே, மக்கள் வெறும் மிருக உணர்ச்சிகளில் (உண்ணுதல், உறங்குதல் போன்றவை) வாழ்வை வீணாக்காமல், தன்னை உணர்தலுக்காக வாழ வேண்டும் என்று வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார்.
சுயநலமின்மை: அவர் தனது சொந்த விடுதலையைப் (முக்தி) பற்றி மட்டும் கவலைப்படாமல், பாவம் செய்த ஆத்மாக்களையும் தட்டியெழுப்பி அவர்களைக் கரைசேர்க்க நினைக்கிறார்.
சகிப்புத்தன்மை மற்றும் சவால்கள்
எதிர்ப்புகளை எதிர்கொள்ளுதல்: பக்தித் தொண்டை ஏற்கத் தயங்கும் மக்கள் அல்லது அதை விரும்பாதவர்களால் ஸாதுக்களுக்கு இன்னல்கள் ஏற்படலாம். இருப்பினும், ஒரு ஸாது அக்கொடுமைகளைச் சகித்துக் கொள்கிறார்.
வரலாற்றுச் சான்றுகள்: இயேசு கிறிஸ்து, ஹரிதாஸ தாகூர், மற்றும் நித்யாநந்தா பிரபு போன்றோர் தங்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறைகளையும் கொடுமைகளையும் மற்றவர்களின் நன்மையை முன்னிட்டு சகித்துக் கொண்டதை கட்டுரை உதாரணமாகக் காட்டுகிறது.
அனைத்து உயிர்களிடமும் அன்பு (ஸர்வ தேஹினாம்)
பாகுபாடற்ற கருணை: ஸாதுவின் கருணை மனிதர்களுக்கு மட்டும் உரியதல்ல; அது பூனைகள், நாய்கள் மற்றும் மரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்குமானது.
முன்மாதிரி: சிவானந்த சேனா ஒரு நாய்க்கு ஆன்மீக வழிகாட்டி அதற்கு வீடுபேறு அளித்த நிகழ்வு, ஒரு ஸாதுவின் தொடர்பால் ஒரு விலங்கு கூட முக்தி அடைய முடியும் என்பதை விளக்குகிறது.
உண்மையான நண்பன்: கட்டுண்ட ஆன்மாக்களைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுவிக்க முயற்சிப்பதால், ஸாதுவை விடச் சிறந்த நண்பன் வேறு யாரும் இருக்க முடியாது.
சாஸ்திரப் பின்பற்றுதலும் தகுதிகளும்
சாஸ்திர விசுவாசம்: ஸாது என்பவர் புனித நூல்களின் (சாஸ்திரங்கள்) கட்டளைகளை உண்மையாகப் பின்பற்றுபவர். சாஸ்திரங்களின் அடிப்படை நோக்கமே பகவானுக்குக் கீழ்ப்படிவது என்பதால், ஒரு ஸாது இயல்பாகவே சிறந்த பக்தராக இருக்கிறார்.
நல்ல பண்புகளின் உறைவிடம்: ஒரு பக்தரிடம் தேவர்களுக்குரிய அனைத்து நற்குணங்களும் தாமாகவே வளரும். மாறாக, எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும் பக்தி உணர்வு இல்லாத ஒருவரிடம் உண்மையான தெய்வீகப் பண்புகள் இருப்பதில்லை.
.jpg)
Comments
Post a Comment