யமாதிபிர் யோக-பதை: காம-லோப-ஹதோ முஹு: முகுந்த-ஸேவயா யத்வத் ததாத்மாத்த ந ஸாம்யதி மொழிபெயர்ப்பு யோக முறையைக் கொண்டு புலனடக்கத்தைப் பயில்வதால், ஒருவர் ஆசை மற்றும் காமம் ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து விடுபடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் ஆத்மாவை திருப்திப்படுத்துவதற்கு இது போதுமானதல்ல. ஏனெனில் இது (திருப்தி) பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டினால் மட்டுமே அடையப்படுவதாகும். பொருளுரை யோகம் புலன்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமர்தல், சிந்தித்தல், உணர்தல், விரும்புதல், மனதைக் குவித்தல், தியானம் செய்தல், இறுதியாக தெய்வீகத்தில் ஐக்கியமாகி விடுதல் ஆகிய தேகாப்பியாசங்களைக் கொண்ட யோக முறையைப் பயில்வதால், புலன்களைக் கட்டுப்படுத்த முடியும். புலன்கள் விஷமுள்ள பாம்புகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை அடக்குவதற்காகவே யோக முறை உள்ளது. மாறாக புலன்களை அடக்கும் மற்றொரு முறையை நாரதர் சிபாரிசு செய்கிறார். இது பரம புருஷ பகவானாகிய முகுந்தனின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடும் முறையாகும். புலன்களை செயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதைவிட பகவானின் பக்தித் தொண்டு முறை நடைமு...