பரம புருஷ பகவான் இங்கு எல்லா நன்மைகளுக்கும் எல்லா இன்பத்திற்கும் தேக்கிடமாக வர்ணிக்கப்படுகிறார் . நன்மையின் வழியில் அமைந்தால் ஒழிய ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிட்டாது . அதனால் , ஒருவரின் உடல் , மனம் , செயல்பாடுகள் அனைத்தும் பகவானின் தொண்டில் அமையும் பொழுது , அவர் நன்மையின் மிகவும் உயர்ந்த முழு நிலையில் இருக்கிறார் . கர்தம முனிவர் கூறுகிறார் : “ உங்களுடைய பிரபுத்துவம் எல்லாவற்றிற்கும் தேக்கிடமாகும் என்பதை நன்மையின் முறையான வழக்குச் சொல்லால் புரிந்துகொள்ள முடியும் , உங்களை நேருக்குநேர் , கண்ணோடு கண் பார்க்கும் அனுபவத்தின் மூலம் பார்வையின் முழுமை அடையப் பெற்றது .” இந்தக் கூற்றுகள் தூய பக்தியான நிலையாகும் ; ஒரு பக்தனுக்கு , புலன்களின் முழுமை என்பது பகவானின் தொண்டில் ஈடுபடலாகும் . பார்க்கும் ஆற்றல் பகவானின் அழகைப் பார்ப்பதில் ஈடுபடும்பொழுது முழுமையடைகிறது ; கேட்கும் ஆற்றல் , பகவானின் புகழைக் கேட்கும்பொழுது முழுமையடைகிறது ; சுவைக்கும் ஆற்றல் , பிரஸாதம் உண்பதில் மகிழும்போது முழுமையடைகிறது . எல்லாப் புலன்களும் ...