கேள்வி: “நான் எவ்வளவு முயற்சி செய்து ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்தபோதிலும், என் மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது. ஏன்? நான் என்ன செய்தால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்?” பதில்: ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபம் செய்யும்போது, மனதின் எண்ணங்களைப் பொருட்படுத்தாமல், பகவானுடைய திருநாமத்தின் ஒலி அதிர்வை மட்டுமே கவனமாகக் கேட்கப் பழக வேண்டும். மனம் எத்தகைய தேவையில்லாத எண்ணங்களை உருவாக்கினாலும் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஹரே கிருஷ்ண மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு எழுத்தின் ஒலி அதிர்வையும் முழுமையாகக் கேட்பது மட்டுமே நமது ஒரே நோக்கம். மந்திரத்தைக் கேட்பதை விட்டுவிட்டு மனதின் எண்ணங்களைக் கவனிக்கத் தொடங்கிவிட்டோம் என்பதை உணரும் அந்தக் கணத்திலேயே, மனதை மீண்டும் மந்திரத்தின் ஒலிக்குத் திருப்ப வேண்டும். கடந்த பல லட்சக்கணக்கான பிறவிகளாக நாம் மனதின் பேச்சைக் கேட்டு, அதற்கு அடிமையாகவே சேவை செய்து பழகிவிட்டோம். எனவே, இப்போது திடீரென்று அதை அலட்சியப்படுத்திவிட்டு மந்திரத்தின் ஒலியில் மட்டும் கவனம் செலுத்துவது சற்றே கடினமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், ஒரு தாய்...