யஜ்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர வோகோ அரயம் கர்ம - பந்தன; முழுமுதற் கடவுளுக்குத் திருப்தியளிப்பதற்காகவே நாம் செயல் செய்ய வேண்டும்.
ஒரு வேள்விச் சடங்கானது முழுமுதற் கடவுளை மகிழ்விப்பதற்கென்றே செய்யப்படுகிறது. ஸ்ரீமத் - பாகவதம் முதல்காண்டம் இரண்டாம் அத்தியாயம் ஒவ்வொருவரும் தமது செயலினால் முழுமுதற் கடவுள் திருப்தியுற்றிருக்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதாவது நமது செயலின் நோக்கம் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கானதாகவே இருத்தல் வேண்டும். எவ்வாறு ஒரு பணியாளன் தன் அலுவலகத்தில் தனது முதலாளி அல்லது உயர் அதிகாரி திருப்தியடைந்திருக்கிறாரா என்று கவனிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறானோ அதுபோல் முழுமுதற் கடவுள் தனது செயலினால் திருப்தியுற்றிருக்கிறாரா என்று பார்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கான செயல்கள் எவையென்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அச்செயல்களின் நிறைவேற்றமே வேள்வி அல்லது யக்ஞம் என்றழைக்கப்படுகிறது. வேறொரு முறையில் முழுமுதற் கடவுளின் சார்பாகச் செயல்படுவதே வேள்வியாகும் என்றும் கூறலாம். வேள்வியினைத் தவிர வேறெச் செயலும் உலகப் பிடிப்பிற்குக் காரணமாகும் என்பதை ஒருவன் மிக நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். பகவத்கீதையிலும் (3.9) ...