Skip to main content

Posts

Showing posts from May 22, 2021

மோஹினி ஏகாதசி

  மோஹினி ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரா பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ ஜனார்த்தனா வைகாசி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் மற்றும் அந்த ஏகாதசியை கடை பிடிப்பது எப்படி? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப்பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஸ்டமுனிவர் பகவான் இராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள்.  நீண்ட காலத்திற்கு முன் ஒரு சமயம் பகவான் இராமச்சந்திரர் வசிஸ்டமுனிவரிடம் கேட்டார். ஓ மரியாதைக்குரிய முனிவரே நான் ஜனகராஜரின் மகளான சீதையை விட்டு பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவு செய்து ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு கூறுங்கள். இராமச்சந்திரரின் ஆன்மீக குருவான பெரும் முனிவர் வசிஸ்டர் கூறினார். எனதன்பு இராமா, உன்னுடைய புத்திக்கூர்மை நம்பிக்கையுடன் கலந்திருக்கின்றனது. உன்னுடைய கேள்வி எல்லா மனித சமுதாயத்திற்கும் பயனுள்ளது. உன்னுடைய மங்களகரமான திவ்ய நாமங்களை ஜெபிப்பதா...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...