நெருப்பையும் அதன் எரிபொருளையும், ஆத்மாவிற்கும் உடலுக்கும் ஒப்பிடும் உவமையைப் பொறுத்தவரை, நெருப்பானது ஓரளவிற்கு அதன் எரிபொருளையே சார்ந்துள்ளது. என்றும், எரிபொருளின்றி நெருப்பின் இருப்பை நம்மால் உணர முடியாது என்பதால் ஜீவனால் உடலின்றி தனித்து வாழ்வதும், உடலால் மறைக்கப்படுவதும், இறுதியில் அதிலிருந்து விடுபடுவதும் எப்படி சாத்தியமாகும் என்று இன்னமும் ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும். பரமபுருஷரைப் பற்றிய அறிவாற்றலால் (வித்யா) மட்டுமே ஜீவனின் இயற்கையை ஒருவனால் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். உண்மை அறிவினால் (வித்யா) பௌதிக இருப்பைத் துண்டித்து, இப்பிறவியிலேயே ஆன்மீக உண்மையை ஒருவனால் உணரமுடியும். ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரரின் கருத்துப்படி, நம்முடைய இந்த பௌதிக வாழ்வு நம்மீதான ஒரு செயற்கையான திணிப்பாகும். அறியாமை எனப்படும் பகவானின் நினைத்தற்கரிய ஆற்றலினால், ஸ்தூல மற்றும் சூட்சுமமான பௌதிக ரூபங்களின் குணங்கள் மனோ தத்துவ ரீதியாக ஜீவராசியின் மீது சுமத்தப்படுகின்றன. தவறான இந்த தேகாபிமானத்தின் காரணத்தினால் மாயையான செயல்களின் ஒரு தொடரை ஜீவராசி தொடங்குகிறான். முந்திய அத்தியாயத...