பக்தி மார்க்கத்தின் ஆழமான உண்மை என்னவென்றால் — பகவானை அடையப் பெரும் யாகங்கள், பெரும் தானங்கள் தேவையில்லை; ஒரு துளசி இலையும் ஒரு துளி நீரும், உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அவை அவரை அளவில்லாமல் திருப்திப்படுத்தும். “துலஸீ-தல-மாத்ரேண ஜலஸ்ய சுலுகேன வா…” என்று தொடங்கும் இந்த ஸ்லோகம் கௌதமீய தந்திர நூலிலிருந்து வந்தது. இதில், பக்தர்களிடம் அளவற்ற பாசம் கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துளசி இலைக்கும் சிறிதளவு நீருக்கும் தம்மையே அர்ப்பணிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்லோகத்தை ஆழமாக சிந்தித்த ஆச்சாரியர், “இவ்வளவு சிறிய அர்ப்பணிப்புக்கும் கடன் பட்டவனாக இருப்பதாக பகவான் நினைக்கிறார்” என்பதை உணர்ந்தார். அந்த உணர்வின் பேரில், அவர் துளசி இலையும் கங்கை நீரையும் தொடர்ந்து சமர்ப்பித்து, பரமபுருஷனான கிருஷ்ணரை இவ்வுலகில் அவதரிக்க அழைத்தார்.
இந்த நிகழ்வுகள் நமக்கு ஒரு நிலையான உண்மையை நினைவூட்டுகின்றன — பகவானை அடைய பொருள் தேவையில்லை; பக்தி, உண்மை, அன்பு மட்டுமே போதும். பக்தனின் இதயத்திலிருந்து எழும் சுத்தமான அர்ப்பணிப்பால், அனந்தமான பகவானும் அவன் பாசத்தில் வசப்படுகிறார்
ஸ்ரீ சைதன்ய சரிதாமிர்தம் / ஆதி லீலை / அத்தியாயம் 3
ஸ்லோகம் 104
துலஸீ
- தல- மாத்ரேண ஜலஸ்ய சுலுகேன வா
விக்ரீணீதே
ஸ்வம் ஆத்மானம் பக்தேப்யோ பக்த-வத்ஸல:
"பக்தர்களிடம் மிகுந்த
பாசம் கொண்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணர், துளசி
இலையையும் கையளவு நீரையும் அர்ப்பணிக்கும் பக்தனிடம் தம்மை முழுமையாக விற்றுவிடுகிறார்."
பொருளுரை:
இது கௌதமீய-தந்த்ர நூலிலிருந்து வரும் ஸ்லோகமாகும்.
ஸ்லோகம்
105-106
ஏஇ
ஷ்லோகார்த ஆசார்ஜ கரேன விசாரண
க்ரிஷ்ணகே துலஸீ-ஜல தேய ஜே இ ஜன்
தார
ரிண ஷோதிதே க்ரிஷ்ண கரேன சிந்தன-
ஜல்-துலஸீர ஸம் கிசு கரே
நாஹி தன்
இந்த
ஸ்லோகத்தின் பின்வருமாறு யோசித்தார்: "துளசி இலையையும் நீரையும் தமக்கு
பொருளை
அத்வைத ஆச்சாரியர் அர்ப்பணிப்பவனுக்கு தாம் பட்டுள்ள கடனைத்
திருப்பிச் செலுத்த வழிதெரியாமல், ‘துளசி இலைக்கும் நீருக்கும் சமமான செல்வம் என்னிடம் இல்லை,' என்று பகவான் கிருஷ்ணர் நினைக்கின்றார்.
ஸ்லோகம்
107
தபே
ஆத்மா வேசி கேரே ரிணோ
ஷோதன
எத
பாவி ஆசார்ஜ கரேன் ஆராதன
"இதனால் பகவான்
தம்மையே தமது பக்தனுக்கு அர்ப்பணித்து
கடனை அடைக்கிறார்." இவ்வாறு யோசித்த ஆச்சாரியர் பகவானை வழிபடத் தொடங்கினார்.
பொருளுரை:
பக்தித்
தொண்டின் மூலமாக, ஒருவன் பகவான் கிருஷ்ணரை துளசிச் செடியின் இலையைக் கொண்டும் சிறிதளவு நீரைக் கொண்டும் எளிதில் திருப்திப்படுத்தலாம். பகவான் பகவத் கீதையில் (9.26) கூறுவதுபோல, இலையோ பூவோ பழமோ நீரோ
(பத்ரம் புஷ்பம்' பலம் தோயம்) பக்தியுடன்
அர்ப்பணிக்கப்படும்போது.
அஃது அவரை மிகவும் திருப்திப்படுத்துகிறது.
அவர் தம்முடைய பக்தனின் சேவையை முற்றிலுமாக ஏற்கின்றார். மிகமிக ஏழ்மை நிலையில் உள்ள பக்தர்கள்கூட, உலகின்
எந்தப் பகுதியிலிருந்தும், சிறிய பூ, பழம், இலை,
அல்லது சிறிதளவு நீரைச் சேகரிக்க முடியும்; அதிலும் குறிப்பாக, துளசி இலையையும் கங்கை நீரையும் பக்தியுடன் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தால், அவர் மிகவும் திருப்தியடைகிறார்.
தமது பக்தனின் அந்த பக்தித் தொண்டிற்குக்
கைமாறாக பகவான் கிருஷ்ணர் தம்மையே அர்ப்பணிக்கும் அளவிற்கு, பக்தித் தொண்டு அவரை திருப்திப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.இந்த
உண்மையை அத்வைத் ஆச்சாரியர் அறிந்திருந்த காரணத்தினால், அவர் புருஷோத்தமரான முழுமுதற்
கடவுள் கிருஷ்ணரை துளசி இலையையும் கங்கை நீரையும் கொண்டு வழிபட்டு, இவ்வுலகில் அவதரிக்க அழைக்கலாம் என்று முடிவு செய்தார்.
ஸ்லோகம்
108
கபூங்கா
ஜல் துலஸீ-மஞ்ஜரீ அனுக்ஷண்
க்ரிஷ்ண-பாத, பத்ம பாவி
கேரே ஸமர்பண
ஸ்ரீ
கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளை நினைத்தவண்ணம், அவர் கங்கை நீரையும்
துளசி மஞ்சரியையும் தொடர்ந்து சமர்ப்பித்தார்.
ஸ்லோகம்
109
க்ரி'ஷ்ணேர ஆஹ்வான கரே கரியா ஹுங்கார
ஏ-மதே க்ரி'ஷ்ணேரே கராஇல அவதார
அவர்
ஸ்ரீ கிருஷ்ணரைக் கூக்குரலிட்டு அழைத்து, கிருஷ்ணரின் அவதாரத்தை சாத்தியமாக்கினார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment