யஜ்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர வோகோ அரயம் கர்ம - பந்தன; முழுமுதற் கடவுளுக்குத் திருப்தியளிப்பதற்காகவே நாம் செயல் செய்ய வேண்டும்.
ஒரு வேள்விச் சடங்கானது முழுமுதற் கடவுளை மகிழ்விப்பதற்கென்றே
செய்யப்படுகிறது. ஸ்ரீமத் - பாகவதம் முதல்காண்டம் இரண்டாம் அத்தியாயம் ஒவ்வொருவரும்
தமது செயலினால் முழுமுதற் கடவுள் திருப்தியுற்றிருக்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதாவது நமது செயலின் நோக்கம் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கானதாகவே
இருத்தல் வேண்டும். எவ்வாறு ஒரு பணியாளன் தன் அலுவலகத்தில் தனது முதலாளி அல்லது உயர்
அதிகாரி திருப்தியடைந்திருக்கிறாரா என்று கவனிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறானோ
அதுபோல் முழுமுதற் கடவுள் தனது செயலினால் திருப்தியுற்றிருக்கிறாரா என்று பார்ப்பது
ஒவ்வொருவரின் கடமையாகும். முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கான செயல்கள் எவையென்று
வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அச்செயல்களின் நிறைவேற்றமே வேள்வி அல்லது யக்ஞம்
என்றழைக்கப்படுகிறது. வேறொரு முறையில் முழுமுதற் கடவுளின் சார்பாகச் செயல்படுவதே வேள்வியாகும்
என்றும் கூறலாம். வேள்வியினைத் தவிர வேறெச் செயலும் உலகப் பிடிப்பிற்குக் காரணமாகும்
என்பதை ஒருவன் மிக நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். பகவத்கீதையிலும் (3.9) இது விளக்கப்பட்டிருக்கிறது:
யஜ்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர வோகோ அரயம் கர்ம - பந்தன; இதன்பொருள் முழுமுதற் கடவுளுக்குத்
திருப்தியளிப்பதற்காகவே நாம் செயல் செய்ய வேண்டும். அவ்வாறல்லாத நமது பிற செயல்கள்
நம்மை உலகியலில் பிணித்து விடும். ஒருவன் தனது சுய புலன் நுகர்ச்சிக்காகச் செயல் புரியக்
கூடாது. ஒவ்வொருவரும் முழுமுதற் கடவுளின் திருப்திக்காகச் செயல் புரிதல் வேண்டும் அப்படிச்
செய்தால் அது வேள்வியாகும்.
தக்கனால் வேள்வி மேற்கொள்ளப்பட்டவுடன் அதில்
விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படும் தெய்வ உணவினைப் பெற வேண்டும் என்று தேவர்கள் அனைவரும்
விரும்பினர். சிவபெருமானும் ஒரு தேவர் ஆதலினால் அவரும் இயற்கையாகத் தனது தெய்வ உணவினை
எதிர்பார்த்தார். ஆனால் தக்கன் வேள்வியில் கலந்து கொள்ளுமாறு சிவபெருமானை அழைக்காததோடு
அவருக்குரிய தெய்வ உணவினையும், வேள்விப்பொருளையும் அளிக்கவில்லை. அதன் காரணமாகவே சிவபெருமானின்
வீரர்கள் வேள்விச் சாலையினையே அழித்தனர். இதை நன்கறிந்த பிரம்மதேவன் சிவபெருமானை அமைதிப்படுத்தும்
முகத்தான் அவ்வேள்வியில் அவருக்குரிய வேள்விப்பொருள் கண்டிப்பாக அளிக்கப்படும் என்று
உறுதி கூறுகிறார். இவ்வாறு சிவபெருமானின் வீரர்களினால் அழிக்கப்பட்டவற்றை எல்லாம் சரிசெய்யும்படி
பிரம்மதேவன் சிவபெருமானை வேண்டுகிறார்.
பகவத் கீதையில் (3.11) ஒருவன் செய்யும் வேள்வியினால்
அனைத்துத் தேவர்களும் திருப்தியடைகின்றனர் என்று கூறப்பட்டிருக்கிறது. வேள்வியின் தெய்வ
உணவினை தேவர்கள் எதிர்பார்ப்பதனால் வேள்விகள் செய்யப்படவேண்டும். புலனுகர்ச்சி மற்றும்
பௌதீகச் செயல்களிடத்து தன்னை ஈடுபடுத்துபவர் கண்டிப்பாக வேள்விகளைச் செய்தல் வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் சிக்கிக் கொள்வர். மனிதகுலத்தின் மூதாதையாக விளங்கிய தக்கன் செய்த
வேள்வியிலும் இவ்வாறே சிவபெருமான் அழைக்கப்படாததினால் அதில் தடை ஏற்பட்டது. பிரம்மதேவனின்
சமாதான முயற்சியினால் இப்போது எல்லாம் நிறைவாகவே முடிந்துள்ளது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment