நெருப்பையும் அதன் எரிபொருளையும், ஆத்மாவிற்கும்
உடலுக்கும் ஒப்பிடும் உவமையைப் பொறுத்தவரை, நெருப்பானது ஓரளவிற்கு அதன் எரிபொருளையே
சார்ந்துள்ளது. என்றும், எரிபொருளின்றி நெருப்பின் இருப்பை நம்மால் உணர முடியாது என்பதால்
ஜீவனால் உடலின்றி தனித்து வாழ்வதும், உடலால் மறைக்கப்படுவதும், இறுதியில் அதிலிருந்து
விடுபடுவதும் எப்படி சாத்தியமாகும் என்று இன்னமும் ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும். பரமபுருஷரைப்
பற்றிய அறிவாற்றலால் (வித்யா) மட்டுமே ஜீவனின் இயற்கையை ஒருவனால் தெளிவாகப் புரிந்துகொள்ள
இயலும். உண்மை அறிவினால் (வித்யா) பௌதிக இருப்பைத் துண்டித்து, இப்பிறவியிலேயே ஆன்மீக
உண்மையை ஒருவனால் உணரமுடியும். ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரரின் கருத்துப்படி,
நம்முடைய இந்த பௌதிக வாழ்வு நம்மீதான ஒரு செயற்கையான திணிப்பாகும். அறியாமை எனப்படும்
பகவானின் நினைத்தற்கரிய ஆற்றலினால், ஸ்தூல மற்றும் சூட்சுமமான பௌதிக ரூபங்களின் குணங்கள்
மனோ தத்துவ ரீதியாக ஜீவராசியின் மீது சுமத்தப்படுகின்றன. தவறான இந்த தேகாபிமானத்தின்
காரணத்தினால் மாயையான செயல்களின் ஒரு தொடரை ஜீவராசி தொடங்குகிறான். முந்திய அத்தியாயத்தில்
விவரிக்கப்பட்டது போல், தற்போதுள்ள இந்த ஜட உடலானது, அடுத்த உடலுக்கான கர்ம விதையை
உண்டாக்குகின்ற ஒரு மரத்தைப் போன்றதாகும். ஆனால் அறியாமையெனும், இச்சுழற்சியை பகவானால்
விவரிக்கப்பட்ட உன்னத அறிவினால் வெட்டித்தள்ள இயலும்.
துரதிர்ஷ்டவசமாக, பரமபுருஷரிடம் பகைமை கொண்டுள்ள காரணத்தால், பகவானால் கூறப்பட்ட பூரண ஞானத்தை பந்தப்பட்ட ஆத்மாக்கள் ஏற்பதில்லை. மாறாக அவர்கள் ஸ்தூல மற்றும் சூட்சுமமான மாயையிலிருந்து மூழ்கிக் கிடக்கின்றனர். ஆனால் பகவானைப் பற்றிய அறிவை ஜீவராசி ஏற்றுக்கொள்வானாயின், அவனுடைய நிலை முழுமையாக சீர்திருத்தப்படும். பிறகு பகவானுடனான நேரடியான சகவாசத்திலுள்ள நித்தியமான, ஆனந்தமான அறிவுமயமான தனது உண்மையான வாழ்வு நிலைக்க அவனால் திரும்பிச் செல்ல இயலும்.
( ஶ்ரீமத் பாகவதம் 11.10.10 / பொருளுரை வழங்கியவர் ஶ்ரீல பிரபுபாதர் )
முக்கியக் கருத்துக்கள்:
1. நெருப்பு மற்றும் எரிபொருள் உவமை
நெருப்பு எரிபொருளைச் சார்ந்து இருப்பது போலத் தோன்றினாலும், நெருப்பு என்பது தனித்த ஒரு தத்துவம்.
எரிபொருள் (உடல்) இல்லாமல் நெருப்பை (ஆத்மா) நம்மால் காண முடியாது என்பதால், ஆத்மா தனித்து இயங்க முடியாது என்று எண்ணுவது தவறு.
நெருப்பு எரிபொருளில் மறைந்திருப்பது போல, ஆத்மா உடலில் மறைந்துள்ளது. ஆனால், எரிபொருள் தீர்ந்த பின்பும் நெருப்பின் தத்துவம் (வெப்பம்/சக்தி) பிரபஞ்சத்தில் நீடிப்பது போல, ஆத்மாவும் அழியாதது.
2. அறியாமையும் (அவித்யா) உடல் திணிப்பும்
ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரரின் கூற்றுப்படி, இந்த பௌதிக வாழ்வு ஆத்மாவின் மீது திணிக்கப்பட்ட ஒரு செயற்கையான சுமை.
பகவானின் மாயா சக்தியால், ஸ்தூல (தூல) மற்றும் சூட்சும (நுண்ணிய) உடல் குணங்கள் ஆத்மாவின் மீது சுமத்தப்படுகின்றன. இதனால் ஆத்மா தன்னை உடல் என்று தவறாக எண்ணுகிறது (தேகாபிமானம்).
3. கர்ம வினை எனும் மரம்
தற்போதைய உடல் என்பது ஒரு மரத்தைப் போன்றது. இது அடுத்த பிறவிக்கான கர்ம வினைகளை விதைகளாக உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது.
இந்தச் சுழற்சியானது அறியாமையினால் (Ignorance) தொடர்ந்து நடைபெறுகிறது.
4. அறிவின் வலிமை (வித்யா)
வித்யா எனப்படும் உன்னத அறிவாற்றலால் மட்டுமே இந்த பௌதிகத் தளையை வெட்ட முடியும்.
உண்மை அறிவைப் பெறுவதன் மூலம், இப்பிறவியிலேயே ஒருவன் ஆன்மீக உண்மையை உணர முடியும்.
பகவான் வழங்கிய இந்த ஞானம், பௌதிக இருப்பைத் துண்டிக்கும் ஒரு கூர்மையான ஆயுதம் போன்றது.
5. விடுதலையின் தர்க்கம்
பகவானிடம் பகைமை கொண்டுள்ள பந்தப்பட்ட ஆத்மாக்கள் இந்த ஞானத்தை ஏற்பதில்லை; எனவே அவர்கள் மாயையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
ஆனால், யார் ஒருவர் பகவானைப் பற்றிய அறிவை ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் தனது உண்மையான நிலைக்குத் திரும்புகிறார்.
விடுதலை என்பது வெறும் அழிவல்ல; அது பகவானுடனான நேரடித் தொடர்பில் கிடைக்கும் நித்தியமான, ஆனந்தமான, அறிவுமயமான வாழ்வாகும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Comments
Post a Comment