ப்ரஸங்கம் அஜரம் பாசம் ஆத்மன: கவயோ விது:
ஸ ஏவ ஸாதுஷூ க்ருதோ மோக்ஷ த்வாரம் அபாவ்ருதம்
மொழிபெயர்ப்பு
ஒவ்வொரு படித்த மனிதனும் ஜடப் பொருளின் மீது கொண்டுள்ள பற்றானது, ஆன்மாவுக்கு எதிரான மிகப்பொரிய சிக்கல் ஆகும் என்று நன்கு அறிந்திருக்கிறான். ஆனால், அதே பற்று தன்னை அறிந்த பக்தர்களிடம் இருக்கும் பொழுது, அது வீடுபேற்றுக்கான கதவைத் திறக்கிறது.
பொருளுரை
ஒருவர் ஒரு பொருள் மீது கொண்ட பற்றே கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வின் பந்தத்திற்கு காரணம் ஆகும். அதே பற்றை பிறவற்றின் மேல் செலுத்தினால், அது வீடு பேற்றுக்கு வழிவகுக்கிறது என்று இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பற்று கொல்லப்பட இயலாதது; அது மாற்றப்பட வேண்டியதாகும். ஜடவுலகப் பொருளுக்கான பற்று உலகியல் உணர்வு நிலை என்றும், கிருஷ்ணர் அல்லது அவர் பக்தருக்கான பற்று கிருஷ்ண உணர்வு நிலை என்றும் அழைக்கப்படும். அதனால் உணர்வு நிலை பற்றுதலின் தளமாகும். நாம் உலக உணர்விலிருந்து கிருஷ்ண உணர்வு நிலைக்கு, உணர்வு நிலையைத் தூய்மைப்படுத்தும் பொழுது, விடுதலை அடைகிறோம் என்று இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் பற்றை விட்டுவிட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பினும், ஆசையின்மை என்பது உயிர்களுக்கு சாத்தியமானது அல்ல. உயிரினம், அமைப்பினால் சிலவற்றைச் சார்ந்து இருக்கும் மனப்பாங்கு உடையது. சிலருக்குப் பற்றுக் கொள்ள பொருள் இல்லை என்றால், அவருக்குக் குழந்தைகள் இல்லையென்றால், அவர் தன் பற்றை பூனை, நாய்களிடம் மாற்றுவார். இது பற்றுக்கான மனப்பாங்கு நிறுத்தப்பட இயலாதது என்பதைக் குறிக்கிறது; அது சிறந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஜடவுலகப் பொருளுக்கான நம் பற்று, நம் கட்டுப்பட்ட நிலையை நீடிக்கச் செய்கிறது. ஆனால் அதே பற்று, பரம புருஷ பகவானிடம் அல்லது அவர் பக்தரிடம் மாற்றப்படும் பொழுது, அது வீடுபேற்றிற்குரிய ஆதாரம் ஆகும்.
பற்று தன்னையறிந்த பக்தர்களாகிய ஸாதுக்களிடம் மாற்றுப்பட வேண்டும் என்று இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஸாது என்பவர் யார்? ஸாது என்பவர் காவி உடை அல்லது நீண்ட தாடி கொண்ட சாதாரண மனிதர் இல்லை. ஸாது என்பவர் தயக்கமின்றி பக்தித் தொண்டில் ஈடுபடுவர் என்று பகவத் கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஒருவர் பக்தித் தொண்டின் விதிகள், ஒழுங்குமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றாமல் இருந்தாலும், அவர் தயக்கமின்றி பரமனாகிய கிருஷ்ணரிடம் முழு நம்பிக்கை வைத்தால், அவர் ஸாது என்று புரிந்துகொள்ளப்படுகிறார். ஸாது ஏவ ஸ மந்தவ்ய: ஸாது என்பவர் பக்தித் தொண்டைக் கண்டிப்புடன் பின்பற்றுபவர். ஒருவர் பிரம்மன் அல்லது ஆன்மீகத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள விரும்பினால், அவருடைய பற்று ஸாதுவிடம் அல்லது பக்தரிடம் மாற்றப்பட வேண்டும் என்பது இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. பகவான் சைதன்யரும் இதை உறுதிப்படுத்தினார். லவ மாத்ர ஸாது ஸங்கே ஸர்வ ஸித்தி ஹய: ஸாதுவுடன் ஒரு கணநேரத் தொடர்புகொள்வதால், ஒருவர் முழுமை அடைய முடியும்.
மஹாத்மா
என்பது
ஸாதுவின்
ஒரு
பொருட்
பன்மொழி
ஆகும். மஹாத்மாவிடம்
அல்லது
பகவானின்
உயர்ந்த
பக்தரிடம்
செய்யும்
தொண்டு, த்வாரம்
ஆஹுர்
விமுக்தே: விடுதலைக்கான
ராஜ
வழியாகும்
என்று
கூறப்படுகிறது. மஹத்
ஸேவாம்
த்வாரம்
ஆஹுர்
விமுக்தேஸ்
தமோ
த்வாரம்
யோஷிதாம்
ஸங்கி
ஸங்கம் (பாக. 5.5.2), ஜடவுலகத்தாருக்குச்
செய்யும்
தொண்டு
எதிர்
விளைவைத்
தரும். யாரேனும்
ஒரு
முழுமையான
ஜடவுலகத்தாருக்கு
அல்லது
புலன்
இன்பத்தில்
ஈடுபட்டவருக்குத்
தொண்டு
செய்தால், பின்னர்
அம்மாதிரியானவருடன்
கொள்ளும்
தொடர்பால், நரகத்தின்
கதவு
திறக்கப்படுகிறது. அதே
கொள்கை
இங்கு
உறுதி
செய்யப்படுகிறது. பக்தரிடம்
உள்ள
பற்று, பகவானின்
தொண்டிற்கான
பற்றாகும். ஏனெனில், ஒருவர்
ஸாதுவிடம்
தொடர்புகொண்டால, முடிவு
என்னவெனில், ஸாது
அவருக்கு
எவ்வாறு
பகவானின்
பக்தராக, வழிபாடு
செய்பவராக, உண்மை
ஊழியராக
ஆகலாம்
என்று
கற்றுத்
தருவார். இவையே
ஸாதுவின்
பரிசுகளாகும். நாம்
ஸாதுவுடன்
தொடர்புகொள்ள
விரும்பினால், அவர்
நம்
ஜடவுலக
நிலையை
எவ்வாறு
முன்னேற்ற
வேண்டும்
என்று
அறிவுரை
தருவார்
என்று
நாம்
எதிர்பார்க்க
முடியாது, ஆனால்
ஜடவுலகக்
கவர்ச்சியாகிற
மாசின்
முடிச்சை
எவ்வாறு
அறுக்க
வேண்டும்
என்றும்
அறிவுரைகள்
தருவார். அதுவே
ஸாதுவுடன்
கொள்ளும்
தொடர்பின்
விளைவு
ஆகும். முதலில்
கபில
முனிவர், வீடு
பேற்றுக்கான
வழி
அத்தகைய
தொடர்புடன்
தொடங்குகிறது
என்று
அறிவுறுத்துகிறார்.
( ஶ்ரீமத் பாகவதம் 3.25.20 / பொருளுரை )
முக்கியக் கருத்துக்கள்:
பற்றுதலும் அதன் விளைவுகளும்
பற்றின் அடிப்படை: ஒரு பொருள் மீது மனிதன் கொள்ளும் பற்றே அவனது பந்தப்பட்ட (கட்டுப்படுத்தப்பட்ட) வாழ்விற்கு மூலக்காரணமாகும்.
மாற்றப்பட வேண்டிய பற்று: பற்றை முழுமையாக அழிப்பது என்பது உயிரினங்களுக்குச் சாத்தியமற்றது; ஆனால், அந்தப் பற்றை ஜடப்பொருள்களிடமிருந்து ஆன்மீகத்தின் பக்கம் மாற்றியமைக்க வேண்டும்.
உணர்வு நிலை: ஜடப்பொருட்கள் மீதான பற்று "உலகியல் உணர்வு" என்றும், கிருஷ்ணர் அல்லது அவரது பக்தர்கள் மீதான பற்று "கிருஷ்ண உணர்வு" என்றும் அழைக்கப்படுகிறது. உணர்வு நிலையைத் தூய்மைப்படுத்துவதே விடுதலையின் திறவுகோலாகும்.
இயல்பான மனப்பாங்கு: உயிரினம் இயல்பிலேயே ஒன்றைச் சார்ந்து இருக்கும் தன்மை கொண்டது. பற்று வைக்க ஆள் இல்லையெனில், மனிதன் தன் பற்றை மிருகங்கள் (பூனை, நாய்) மீது காட்டத் தொடங்குவான். எனவே, இந்தப் பற்றினை உயர்ந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும்.
ஸாதுவின் இலக்கணம்
ஸாது என்பவர் யார்?: ஸாது என்பது காவி உடை அல்லது நீண்ட தாடி போன்ற வெளித்தோற்றத்தை மட்டும் குறிப்பதல்ல. எவ்விதத் தயக்கமுமின்றி பகவானின் பக்தித் தொண்டில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவரே ஸாது ஆவார்.
பக்தித் தொண்டு: ஒருவர் பக்தித் தொண்டின் விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதில் சில குறைகள் இருந்தாலும், கிருஷ்ணரிடம் முழு நம்பிக்கை வைத்திருந்தால் அவர் ஸாதுவாகக் கருதப்படுகிறார்.
ஆன்மீக உயர்வு: ஒருவர் ஆன்மீகத்தை முழுமையாக உணர விரும்பினால், அவரது பற்று ஒரு ஸாதுவிடம் மாற்றப்பட வேண்டும். ஸாதுவுடன் ஒரு கணநேரம் தொடர்பு கொள்வது கூட ஒருவரை முழுமை நிலைக்குக் கொண்டு செல்லும்.
தொடர்பும் அதன் விளைவுகளும் (ஸாது சங்கம்)
விடுதலைக்கான வழி: மஹாத்மா அல்லது ஸாதுக்களுக்குச் செய்யும் தொண்டு விடுதலையின் "ராஜவழி" (மஹத்ஸேவாம் த்வாரம் ஆஹுர் விமுக்தே:) என்று போற்றப்படுகிறது.
எச்சரிக்கை: ஜடவுலகப் பற்றுடையவர்களுக்கோ அல்லது புலன் இன்பத்தில் மூழ்கியவர்களுக்கோ செய்யும் தொண்டு நரகத்தின் கதவைத் திறப்பதற்கு ஒப்பானது.
ஸாதுவின் பரிசு: ஸாதுவுடன் தொடர்பு கொள்வதன் நோக்கம் ஜடவுலக முன்னேற்றம் அல்ல; மாறாக, பகவானுக்கு எவ்வாறு உண்மையான ஊழியராகத் தொண்டு செய்வது என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்வதே ஆகும்.
முடிவு: ஜடவுலகக் கவர்ச்சி என்னும் மாசின் முடிச்சை அறுக்க ஸாதுவின் அறிவுரைகள் உதவுகின்றன. வீடுபேற்றிற்கான முதல் படியே அத்தகைய தூய பக்தர்களின் தொடர்புதான் என்று கபில முனிவர் அறிவுறுத்துகிறார்.

.jpg)
Comments
Post a Comment