யாரால் கிருஷ்ண உணர்வை புரிந்துகொள்ள முடியாது ?

 


    பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத்தகுதி இல்லாதவர்கள். பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது. மேலும், உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர். அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது. மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு. பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது. சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு, ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று, பாலைவனத்தில் விடப்படுகிறார்கள். உண்மையில், கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந்து கொள்வதற்கான கற்பிக்கும் முறையாகும். இந்த இயக்கத்தில் யாரும் தப்பெண்ணம் இன்றிச் சேரலாம். ஆனால் துரதிஷ்டவசமாக, வேறு மாதிரி உணர்பவர்களும் இருக்கின்றனர். அதனால், அந்த மனிதர்களுக்கு கிருஷ்ண உணர்வின் உண்மையினை அறிவுறுத்தாமல் இருப்பது நல்லது.

பொதுவாக, உலோகாயதவாதிகள் பெயர், புகழ் உலகப் பயன் இவற்றின் பின் செல்பவர்கள் அதனால் இந்தக் காரணங்களுக்காக, கிருஷ்ண உணர்வு நிலையை ஒருவர் மேற்கொண்டால், அவரால் இந்தத் தத்துவத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள இயலாது. அந்த மனதிர்கள் மதக் கோட்பாடுகளைச் சமூக அலங்காரமாக எடுத்துக் கொள்கிறார்கள். சிறப்பாக இந்தக் காலத்தில், அவர்கள் தங்களைச் சில பண்பாட்டு நிறுவனத்தில் பெயருக்காக மட்டும் சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த மனிதர்களாலும் கிருஷ்ண உணர்வு நிலைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள இயலாது. ஒருவர் உலக உடைமைகளுக்காகப் பேராசைப் படாவிட்டாலும், குடும்ப வாழ்வில் அதிகப் பற்றுள்ளவரானால், அவராலும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது. மேலோட்டமாகப் பார்ப்பதால், அவர்கள் உலக உடைமைகளுக்காக மிகவும் பேராசைப்படுவதில்லை. ஆனால் அவர்கள் மனைவி குழந்தைகள் மற்றும் குடும்ப முன்னேற்றத்தில் அதிகப் பற்றுடையவர்கள். ஒருவர் மேலே குறிப்பிட்ட தவறுகளால் மாசு அடையாத பொழுதும், இறுதியில் பரம புருஷ பகவானின் தொண்டில் ஆர்வம் கொள்ளவில்லை என்றால் அல்லது அவர் பக்தர் இல்லையென்றால், அவராலும் கிருஷ்ண உணர்வு நிலைத்தத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியாது.



கிருஷ்ண உணர்வை புரிந்துகொள்ள இயலாதவர்கள்


  1. பிற உயிரினங்களுக்கு துன்பம் செய்ய நினைப்பவர்கள்

    • வன்முறையான மனநிலையுடன் இருப்பவர்கள்.

    • பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டில் நுழைய முடியாது.

  2. செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள்

    • வெளிப்படையாக பணிவு காட்டினாலும், உள்ளுக்குள் உண்மையான அர்ப்பணிப்பு இல்லாதவர்கள்.

    • அவர்களால் பக்தி தொண்டை புரிந்துகொள்ள இயலாது.

  3. குறிப்பிட்ட மதப் பிரிவின் புறச் சாய்வில் இருப்பவர்கள்

    • பரம புருஷ பகவானை அணுகுவதற்கான பொது மேடையான பக்தித் தொண்டை ஏற்காதவர்கள்.

    • நம்மோடு சிறிது காலம் இருந்தும், பிறகு விட்டு விலகிச் செல்வார்கள்.

  4. கிருஷ்ண உணர்வை மதக்கிளைப்பிரிவாக எண்ணுபவர்கள்

    • உண்மையில் இது ஒரு பிரிவு அல்ல; பகவானுடனான நமது உறவை உணர்த்தும் கற்பிக்கும் முறை.

    • தவறாகப் புரிந்து கொள்பவர்கள் உண்மையை அறிய முடியாது.

  5. உலோகாயதவாதிகள் (பெயர், புகழ், உலகப் பயன் தேடுபவர்கள்)

    • மதத்தை சமூக அலங்காரமாக மட்டுமே பார்க்கிறார்கள்.

    • பண்பாட்டு நிறுவனங்களில் பெயருக்காக மட்டும் இணைவார்கள்.

    • இவர்களாலும் கிருஷ்ண உணர்வு நிலை புரியாது.

  6. குடும்ப பற்று அதிகமுள்ளவர்கள்

    • உலக உடைமைகளுக்குப் பேராசை இல்லாதபோதிலும்,

    • மனைவி, குழந்தைகள், குடும்ப முன்னேற்றத்தில் அதிகமாக பற்றுபட்டிருந்தால்,

    • இவர்களாலும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது.

  7. பரம புருஷ பகவானின் தொண்டில் ஆர்வமில்லாதவர்கள்

    • மேலே கூறிய தவறுகள் இல்லாவிட்டாலும்,

    • பகவானின் தூய பக்தர் அல்லாதவர்களுக்கும் கிருஷ்ண உணர்வை உணர இயலாது.


👉 சுருக்கமாக:

  • வன்முறை உள்ளவர்கள்,

  • செயற்கை அடக்கம் உடையவர்கள்,

  • மதக் கிளைப்பிரிவு சார்ந்தவர்கள்,

  • பெயர், புகழ் தேடுபவர்கள்,

  • குடும்பத்தில் மிகுந்த பற்று கொண்டவர்கள்,

  • பகவானின் தொண்டில் உண்மையான ஆர்வம் இல்லாதவர்கள் –



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.







Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more