Skip to main content

Posts

Showing posts with the label Attitude /மனப்பான்மை (Articles)

யாரால் கிருஷ்ண உணர்வை புரிந்துகொள்ள முடியாது ?

       பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத்தகுதி இல்லாதவர்கள் . பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது . மேலும் , உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர் . அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது . மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு . பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது . சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு , ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று , பாலைவனத்தில் விடப்படுகிறார்கள் . உண்மையில் , கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை ; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந...

பகவானின் திருநாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் உண்டாகும் உத்தம லக்ஷணங்கள்

  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது சிக்ஷாஷ்டகத்தில் பிரார்த்தனை செய்கிறார்: யுகா யிதம் நிமேஷேண சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம் ஷூன்யாயிதம் ஐகத் ஸர்வம் கோவிந்த -விரஹேண மே 'கோவிந்தரே! உம்முடைய பிரிவு ஒரு கணம் என்றாலும் அதனை நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உணர்கின்றேன்.கண்களில் கண்ணீர் பெருகி மழைபோல பொழிகிறது, தாங்களின்றி இந்த உலகையே நான் சூன்யமாகக் கருதுகின்றேன்." தனது கண்களில் கண்ணீர் நிரம்பி, குரல் தழுதழுத்து,இதயத்துடிப்பு அதிகமான நிலையில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்க வேண்டும் என்பது ஒரு பக்தனின் ஏக்கமாகும். பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதில் இவை நல்ல அறிகுறிகளாகும். பரவசத்தின் காரணத்தினால், கோவிந்தர் இல்லாத முழுவுலகையும் வெற்றிடமானதாக ஒருவன் கருத வேண்டும். இதுவே கோவிந்தருடைய பிரிவின் அறிகுறியாகும். ஜடவுலகில் நாம் அனைவரும் கோவிந்தரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம், பௌதிகப் புலனுகர்ச்சியில் மூழ்கியுள்ளோம். எனவே, ஒருவன் ஆன்மீகத் தளத்தில் அறிவொளி பெறும்போது, அவன் கோவிந்தரைச் சந்திப்பதற்குப் பேராவல்கொள்கிறான், கோவிந்தரின்றி முழுவுலகமும் வெற்றிடமாவதை உணர்கிறான். (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ர...

கிருஷ்ணருக்கு இடையறாது சேவை செய்யும் மனப்பான்மை

க்ரிஷ்ண நாம-மஹா-மந்த்ரேர ஏஇ த' ஸ்வபாவ  ஜேஇ ஜபே, தார க்ரிஷ்ணே உபஜயே பாவ மொழிபெயர்ப்பு "'ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபிப்பவர் உடனடியாக கிருஷ்ணருக்கான அன்புப் பரவசத்தினை வளர்த்துக்கொள்கிறார். இதுவே அந்த மஹா மந்திரத்தின் சுபாவமாகும். பொருளுரை: ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பவன் பாவ அல்லது பரவசம் எனப்படும் நிலையை வளர்த்துக்கொள்வதாக இந்த ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில்தான் கிருஷ்ணர் தம்மை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். இஃது ஒருவனது உண்மையான கிருஷ்ண பிரேமையை வளர்ப்பதன் ஆரம்பநிலையாகும். பகவான் கிருஷ்ணர் இந்த பாவ நிலையினை பகவத் கீதையில் (10.8) குறிப்பிடுகிறார்:  அஹம் ஸர்வஸ்ய ப்ரப வோ மத்த: ஸர்வம்' ப்ரவர்ததே  இதி மத்வா பஜந்தே மாம்' புதா பாவ-ஸமன்விதா: "ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு இதயபூர்வமாக என்னை வழிபடுகின்றனர்." ஓர் ஆரம்பநிலை சீடன், ஸ்ரவணம், கீர்த்தனம், பக்தர்களின் சங்கம், விதிமுறைகளைப் பயிற்சி செய்தல் என பக்தித் தொண்டினைத் தொடங்குகிறான்; இ...