நாகரிகமடைந்த மனிதன், மனித வாழ்வை வெற்றிகரமாக முடித்துக் கொள்வதற்குரிய பயிற்சியைப் பெறுவதற்காகவே வர்ணாஸ்ரம தர்மம் நியமிக்கப்பட்டு உள்ளது. உண்ணுதல், உறங்குதல், தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் இனவிருத்தி செய்தல் ஆகிய காரியங்களில் மட்டும் ஈடுபட்டுள்ள தாழ்ந்த மிருகங்களின் வாழ்விலிருந்து, தன்னுணர்வைப் பெறும் வாழ்வு வேறுபட்டதாகும். மனிதனுக்கு ஒன்பது தகுதிகள் தேவை என்று பீஷ்மதேவர் அறிவுறுத்துகிறார். அவை
(1) கோபப்படாதிருத்தல்,
(2) பொய் சொல்லாமை,
(3) செல்வத்தை சமமாக விநியோகித்தல்,
(4) மன்னித்தல்,
(5) சட்டபூர்வமான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல்,
(6) மனத் தூய்மையுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல்,
(7) யாருடனும் விரோதம் கொள்ளாத்திருத்தல்,
(8) எளிமையாக இருத்தல், மற்றும்
(9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்திருப்பவர்களை ஆதரித்தல் என்பவையாகும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பெறாதவனை நாகரிகம் அடைந்தவனென்று அழைக்க முடியாது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

Comments
Post a Comment