Skip to main content

Posts

Showing posts with the label Sadachar / நல்லொழுக்கம்(Articles)

கல்லாலான ஒரு படகு

  தேஷாம் குபத - தேஷ்ட்ரூணாம் பததாம் தமஸி ஹி அத: யே ஸ்ரத்தத்யுர் வசஸ் வை மஜ்ஜந்தி அஸ்ம-ப்லவா இவ மொழிபெயர்ப்பு (முந்திய சுலோகத்தில் விவரிக்கப்பட்டதுபோல்) அறியாமையில் விழுந்துவிட்டவர்களும், மக்களை அழிவுப் பாதையில் தவறாக வழிநடத்திச் செல்பவர்களுமான தலைவர்களும், குருட்டுத்தனமாக அவர்களைப் பின்பற்றுபவர்களும், உண்மையில் கல்லினால் செய்யப்பட்ட ஒரு படகில் ஏறிக் கொள்பவர்களைப் போன்றவர்களாவர். கல்லாலான ஒரு படகு மிதக்க முடியாமல் அதிலுள்ள பயணிகளுடன் நீரில் மூழ்கிவிடும். அதுபோலவே, மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வோரும் நரகத்திற்கே செல்வார்கள். பொருளுரை ஸ்ரீமத் பாகவதம் (11.20.17) பின்வருமாறு குறிப்பிடுகிறது: ந்ரு-தேஹம் ஆத்யம் ஸுலபம் ஸுதுர்லபம் ப்லவம் ஸுகல்பம் குரு-கர்ண-தாரம் பந்தப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் அறியாமை எனும் கடலில் விழுந்துவிட்டோம். ஆயினும் ஒரு சிறந்த படகைப் போன்றுள்ள இந்த மனித உடலானது, அறியாமை எனும் இக்கடலைக் கடப்பதற்குச் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது, கப்பல் தலைவனைப்போல் செயற்படும் ஓர் ஆன்மீக குருவினால் வழிநடத்தப்படு...

பீஷ்மரின் உபதேசங்கள் மனித வாழ்வை உயர்த்தும் ஒன்பது குணங்கள்

நாகரிகமடைந்த மனிதன், மனித வாழ்வை வெற்றிகரமாக முடித்துக் கொள்வதற்குரிய பயிற்சியைப் பெறுவதற்காகவே வர்ணாஸ்ரம தர்மம் நியமிக்கப்பட்டு உள்ளது. உண்ணுதல், உறங்குதல், தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் இனவிருத்தி செய்தல் ஆகிய காரியங்களில் மட்டும் ஈடுபட்டுள்ள தாழ்ந்த மிருகங்களின் வாழ்விலிருந்து, தன்னுணர்வைப் பெறும் வாழ்வு வேறுபட்டதாகும். மனிதனுக்கு ஒன்பது தகுதிகள் தேவை என்று பீஷ்மதேவர் அறிவுறுத்துகிறார். அவை  (1) கோபப்படாதிருத்தல்,  (2) பொய் சொல்லாமை,  (3) செல்வத்தை சமமாக விநியோகித்தல்,  (4) மன்னித்தல்,  (5) சட்டபூர்வமான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல்,  (6) மனத் தூய்மையுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல்,  (7) யாருடனும் விரோதம் கொள்ளாத்திருத்தல்,  (8) எளிமையாக இருத்தல், மற்றும்  (9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்திருப்பவர்களை ஆதரித்தல் என்பவையாகும்.  மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பெறாதவனை நாகரிகம் அடைந்தவனென்று அழைக்க முடியாது.  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁...

துன்பகரமான இப்பௌதீக உலகை கடவுள் ஏன் படைத்தார்

  அரசாங்கத்தில் ஒரு சிறைக் கூடத்தை உண்டாக்கியதற்காக மன்னரை ஒருவன் குறை கூறக் கூடாது . அதைப் போலவே , துன்பகரமான இவ்வுலகைப் படைத்ததற்காக பரமபுருஷரை ஓருவன் கண்டனம் செய்யக் கூடாது . சிறைக் கூடம் தேவையான ஒரு ஸ்தாபனமாகும் . இது அரசாங்கத்தின் சட்டங்களை மீறுபவர் களுக்காக உள்ளது . அதைப் போலவே , துன்பங்கள் நிறைந்த இந்த ஜட உலகம் பகவானால் படைக்கப்பட்ட தற்காலிகமான ஒரு ஏற்பாடாகும் . இது , பகவானை மறந்து , பொய்யான இத்தோற்றத்தை அடக்கியாள முயல்பவர்களுக்கென உள்ளதாகும் . ஆனால் பகவான் , வீழ்ந்த ஆத்மாக்களைத் தமது இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்ல மிகவும் ஆவலுடன் இருக்கிறார் . இக்காரணத்திற்காக அவர் அதிகாரப் பூர்வமான சாஸ்திரங்கள் , அவரது பிரதிநிதிகள் , மற்றும் சொந்த அவதாரங்கள் ஆகியவற்றின் மூலமாக பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு பல சந்தர்ப்பங்களை அளித்துள்ளார் . அவருக்கு இந்த ஜட உலகில் நேரடியான பற்று இல்லையாகையால் , அதன் சிருஷ்டிக்காக அவரை நிந்திக்கக் கூடாது . ஶ்ரீமத் பாகவதம் 2.7.50 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  க...

விதியை மதியால் வெல்ல முடியாது

சில நேரங்களில் மகான்களும், மாமுனிவர்களும் கூட வாழ்க்கையில் நேர்மாறான விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை விதியின் செயலாக எடுத்துக்கொள்ள வேண்டும். மகிழ்ச்சியற்ற நிலைக்குப் போதுமான காரணங்கள் இருந்தாலும் அந் நேர்மாறான செயல்களை நிமிர்த்த வேண்டும் என்று எண்ணக் கூடாது, எத்தனைக்கெத்தனை இதனை நாம் சரி செய்ய முனைகின்றோமோ அத்தனைக்கத்தனை கவலையின் அடர்ந்த இருளினுள் அமிழ வேண்டியதிருக்கும். பகவான் கிருஷ்ணரும் இது தொடர்பாக நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றார். மனக்கொந்தளிப்பிற்கு இடங்கொடாது வருபவற்றைத் தாங்குகின்ற இதயம் பெறுதல் வேண்டும். ஶ்ரீமத் பாகவதம் 4.19.34 / பொருளுரை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁 மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.      சுத்த   பக்தி   வாட்ஸப்   க்ரூப்   சுத்த   பக்தி   டெலிகிராம்   க்ரூப்   உத்வேக   கதைகள் டெலிகிராம் க்ரூப்   சுத...

ஸ்தித–ப்ரக்ஞன்

  ஆபூர்யமாணம் அசல – ப்ரதிஷ்ட ம் ஸமுத் ரம் ஆப : ப்ரவிஷ ந்தி யத் வத் தத் வத் காமா யம் ப்ரவிஷ ந்தி ஸர்வே ஸ ஷா ந்திம் ஆப்னோதி ந காம – காமீ நதிகள் கடலில் வந்து கலந்தாலும் , கடல் மாறுவதில்லை . அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும் . அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல . பொருளுரை :  பெருங்கடலில் எப்போதும் நீர் நிரம்பியிருந்தாலும் , மழைக்காலத்தில் குறிப்பாக மேன்மேலும் நீரால் நிரம்புகின்றது . ஆயினும் கடல் எப்போதும் போல நிலையாக உள்ளது ; கிளர்ச்சியடைவதோ , தனது கரையைத் தாண்டுவதோ இல்லை . கிருஷ்ண உணர்வில் நிலை பெற்றவனின் விஷயத்திலும் இஃது உண்மையாகிறது . ஜடவுடல் இருக்கும் வரை புலனுகர்ச்சிக்கான ஆசைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் . தனது பூரண நிலையால் , பக்தன் இத்தகு ஆசைகளால் பாதிக்கப்படுவ தில்லை . கிருஷ்ண பக்தனுக்கு எதுவும் தேவையில்லை ; ஏனெனில் , அவனது எல்லா பௌதிகத் தேவைகளையும் இறைவனே பூர்த்தி செய்கிறார் . எனவே , அவன் தன்னில் முழுமையுடைய கடலைப் போன்றவன் . கட...