பரம புருஷ பகவான் இங்கு எல்லா நன்மைகளுக்கும் எல்லா இன்பத்திற்கும் தேக்கிடமாக வர்ணிக்கப்படுகிறார். நன்மையின் வழியில் அமைந்தால் ஒழிய ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அதனால், ஒருவரின் உடல், மனம், செயல்பாடுகள் அனைத்தும் பகவானின் தொண்டில் அமையும் பொழுது, அவர் நன்மையின் மிகவும் உயர்ந்த முழு நிலையில் இருக்கிறார். கர்தம முனிவர் கூறுகிறார்: “உங்களுடைய பிரபுத்துவம் எல்லாவற்றிற்கும் தேக்கிடமாகும் என்பதை நன்மையின் முறையான வழக்குச் சொல்லால் புரிந்துகொள்ள முடியும், உங்களை நேருக்குநேர், கண்ணோடு கண் பார்க்கும் அனுபவத்தின் மூலம் பார்வையின் முழுமை அடையப் பெற்றது.” இந்தக் கூற்றுகள் தூய பக்தியான நிலையாகும்; ஒரு பக்தனுக்கு, புலன்களின் முழுமை என்பது பகவானின் தொண்டில் ஈடுபடலாகும். பார்க்கும் ஆற்றல் பகவானின் அழகைப் பார்ப்பதில் ஈடுபடும்பொழுது முழுமையடைகிறது; கேட்கும் ஆற்றல், பகவானின் புகழைக் கேட்கும்பொழுது முழுமையடைகிறது; சுவைக்கும் ஆற்றல், பிரஸாதம் உண்பதில் மகிழும்போது முழுமையடைகிறது. எல்லாப் புலன்களும் பரம புருஷ பகவானுடன் உறவுகொள்ளும் போது, ஒருவரின் முழுமையான வழக்காற்றில் பக்தி யோகம் எனப்படும். இது ஜடவுலக ஈடுபாட்டிலிருந்து புலன்களை விடுவித்து, பகவானின் தொண்டில் அவற்றை ஈடுபடுத்தும். ஒருவர் குறிப்பிட்ட பந்தப்பட்ட வாழ்விலிருந்து விடுதலையடைந்து, பகவானின தொண்டில் முழுமையாக ஈடுபட்டால், அவரின் தொண்டு பக்தி யோகம் எனப்படும். கர்தம முனிவர், பகவானைப் பக்தி யோகத்தில் பார்ப்பது பார்வையின் பூரணம் என்று ஒப்புக் கொள்கிறார். பகவானைப் பார்க்கும் உயர்ந்த பூரண நிலைமை கர்தம முனிவரால் மிகைப்படுத்தப்பட்டதல்ல. யோகத்தில் உண்மையாக உயர்த்தப்பட்டு, ஒவ்வொரு பிறவியிலும் பரம புருஷ பகவானின் இந்த வடிவத்தைக் காண விரும்புபவர்களைச் சான்று காட்டுகிறார். அவர் போலியான யோகி அல்லர். யார் உண்மையில் முன்னேறிய பாதையில் இருக்கிறாரோ, அவர் பகவானின் அழிவற்ற வடிவைக் காண மட்டுமே விரும்புவார்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.21.13 / பொருளுரை )
முக்கியக் கருத்துக்கள்
பார்வையின் பூரணம் மற்றும் பக்தி யோகம்: முக்கியக் குறிப்புகள்
இன்பத்தின் ஊற்றுக்கண்: பரம புருஷ பகவான் அனைத்து நன்மைகளுக்கும், உண்மையான மகிழ்ச்சிக்கும் இருப்பிடமாக விளங்குகிறார். ஒருவரது வாழ்வு நன்மையின் பாதையில் (பகவானின் பாதையில்) அமையும் போது மட்டுமே அவருக்கு நிலையான மகிழ்ச்சி கிடைக்கிறது.
பார்வையின் முழுமை: பகவானை நேருக்கு நேர், கண்ணோடு கண் சந்திப்பதே ஒருவரின் பார்க்கும் திறனுக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த முழுமையாகும் என்று கர்தம முனிவர் குறிப்பிடுகிறார்.
புலன்களின் ஆன்மீகப் பயன்பாடு: புலன்கள் அவற்றின் இயல்பான செயல்களில் இருந்து விலகி, பகவானின் சேவையில் ஈடுபடும்போது அவை புனிதமடைகின்றன:
கண்கள்: பகவானின் அழகிய திருவுருவத்தைக் காண்பதில் முழுமையடைகிறது.
காதுகள்: பகவானின் புகழையும் லீலைகளையும் கேட்பதில் முழுமையடைகிறது.
நாக்கு: பகவானுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தைச் சுவைப்பதில் முழுமையடைகிறது.
பக்தி யோகத்தின் வரையறை: ஜடவுலக ஆசைகளில் இருந்து புலன்களை விடுவித்து, அவற்றை பரம புருஷ பகவானுடன் உறவு கொள்ளச் செய்யும் செயல்பாடே "பக்தி யோகம்" எனப்படுகிறது. இது பந்தப்பட்ட வாழ்விலிருந்து ஒருவருக்கு விடுதலையை அளிக்கிறது.
உண்மையான யோகியின் இலக்கு: ஒரு போலியான யோகிக்கும் உண்மையான யோகிக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், உண்மையான யோகி ஒவ்வொரு பிறவியிலும் பகவானின் அழிவற்ற அந்த திவ்யமான வடிவத்தைக் காண மட்டுமே விரும்புவார்.
முழுமையான நிலை: உடல், மனம், செயல்பாடுகள் என அனைத்தும் பகவானின் தொண்டில் அர்ப்பணிக்கப்படும்போது, ஒரு மனிதன் நன்மையின் மிக உயரிய நிலையை அடைகிறான்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

.jpg)
Comments
Post a Comment