ஒருவர் பகவானின் அறிவார்ந்த பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது, அவர், ஒரு தனிப்பட்ட ஆத்மா எனும் முறையில் வாசுதேவராகிய பரமாத்மாவின் நிலையான ஊழியனாய் இருத்தல் வேண்டும் என்று அறிகிறார். தன்னை உணர்தல் என்பது, பரமாத்மாவும் தனிப்பட்ட ஆத்மாவும் இரண்டு ஆத்மாக்கள் என்பதால் அவை மதிப்பில் சமமானவை என்று பொருளல்ல. தனிப்பட்ட ஆத்மா கட்டுப்பாட்டுக்கு ஆளாகக்கூடியது. பரமாத்மா ஒருபோதும் கட்டுப்படுத்தப்படாதது. கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா, தான் பரமாத்மாவுக்கு கீழுள்ளது என்பதை உணரும் பொழுது, அவர் நிலை லப்தாத்மா, தன்னை உணர்தல் அல்லது முக்த பந்தன, ஜடவுலக மாசிலிருந்து விடுதலை என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் தன்னை பகவான் போன்ற நல்லவராகவும் அல்லது அவருக்குச் சமமாகவும் நினைக்கும் வரை உலகத்தின் மாசு தொடரும். இந்த நிலை மாயையின் கடைசி சூழ்ச்சி ஆகும். மாயை எப்பொழுதும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைப் பாதிக்கும் நிறைய தியானம் மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகும் ஒருவர் தானும் பகவானும் ஒன்று என்று தொடர்ந்து நினைத்தால், அவர் இன்னும் மாயையின் சூழ்ச்சியில் இருக்கிறார் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
பரேண எனும் சொல்லில் பர என்றால் “அறிவார்ந்த, ஜடவுலக மாசினால் சிறிதும் கலக்கப்படாத” என்று பொருளாகும். முழு உணர்வு நிலையில் ஒருவர் பகவானின் நிலைத்த தொண்டர் எனில் அது பராபக்தி எனப்படும். ஒருவர் தன்னை உலகியல் பொருள்களுடன் அடையாளம் கண்டு, அவற்றின் பயனை அடைய பக்தித் தொண்டு புரிந்தால், அது வித்தா பக்தி, மாசடைந்த பக்தி ஆகும். ஒருவர் உண்மையில் பராபக்தியைச் செயல்படுத்துவதன் மூலம் விடுதலை பெறலாம்.
இங்கு குறிக்கப்படும் மற்றொரு சொல் ஸர்வக்ஞே ஆகும். மனதிற்குள் அமர்ந்திருக்கும் பரமாத்மா எல்லாம் அறிந்தவர். அவர் அறிவார். உடலின் மாற்றத்தால் முன்பு செய்த செயல்களை நான் மறக்கலாம். ஆனால் பகவான் பரமாத்மாவாக என்னிடம் அமர்ந்திருப்பதால், அவர் எல்லாம் அறிவார்; அதனால் என் பழைய கர்மாவின் அல்லது பழைய செயல்களின் விளைவு எனக்குப் பரிசாக அளிக்கப்படுகிறது. நான் மறக்கலாம், ஆனால் அவர் எனக்குத் துன்பம் அல்லது இன்பத்தை, என் பழைய வாழ்வின் தீய செயல்கள் அல்லது நல்ல செயல்களுக்காகப் பரிசு அளிக்கிறார். ஒருவர் தன் பழைய வாழ்வின் செயல்களை மறந்திருப்பதால், அவர் எதிர்ச் செயலிலிருந்து விடுபட்டார் என்று நினைக்கக் கூடாது, எதிர்ச் செயல்கள் இடம் பெறும். என்ன மாதிரியான எதிர்ச் செயல்கள் என்பது அனைத்தும் அறிந்த பரமாத்மாவினால் தீர்மானிக்கப்படும்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.24.45 / பொருளுரை வழங்கியவர்
ஶ்ரீல பிரபுபாதர் )
பக்தித் தொண்டு மற்றும் ஆத்ம ஞானம்.
உண்மையான ஆத்ம உணர்வு: அறிவார்ந்த பக்தித் தொண்டில் ஈடுபடும் ஒருவர், தான் ஒரு தனிப்பட்ட ஆத்மா என்பதையும், வாசுதேவராகிய பரமாத்மாவின் நித்தியமான ஊழியன் என்பதையும் உணர்கிறார்.
சமமற்ற நிலை: பரமாத்மாவும் தனிப்பட்ட ஆத்மாவும் ஆத்மாக்கள் என்ற ரீதியில் ஒன்றாகத் தெரிந்தாலும், மதிப்பீட்டில் சமமானவர்கள் அல்ல. தனிப்பட்ட ஆத்மா எந்நேரமும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது; ஆனால் பரமாத்மா ஒருபோதும் யாராலும் கட்டுப்படுத்தப்படாதவர்.
விடுதலை (முக்தி): தான் பரமாத்மாவுக்குக் கீழ் உள்ளவன் என்பதை ஆத்மா உணரும் நிலையே 'லப்தாத்மா' (தன்னை உணர்தல்) அல்லது 'முக்த பந்தன' (ஜடவுலகத் தளையிலிருந்து விடுதலை) எனப்படுகிறது.
மாயையின் கடைசிச் சூழ்ச்சி: தன்னை பகவானுக்குச் சமமானவராகவோ அல்லது பகவானே தான் என்று நினைப்பதோ மாயையின் இறுதிச் சூழ்ச்சியாகும். தியானம் மற்றும் சிந்தனைக்குப் பிறகும் ஒருவன் "நானே பகவான்" என்று கருதினால், அவன் இன்னும் மாயையின் பிடியிலேயே இருக்கிறான் என்று பொருள்.
பராபக்தி vs வித்தா பக்தி:
பராபக்தி: முழு உணர்வு நிலையில், தன்னை பகவானின் நித்தியத் தொண்டனாக உணர்ந்து செய்யும் கலப்பற்ற தொண்டு. இதுவே விடுதலைக்கு வழிவகுக்கும்.
வித்தா பக்தி: உலகியல் ஆதாயங்களுக்காகவும், புலன் இன்பத்திற்காகவும் செய்யப்படும் மாசடைந்த பக்தி.
பரமாத்மாவின் சர்வக்ஞ நிலை: 'ஸர்வக்ஞே' என்பது பகவானின் அனைத்தையும் அறிந்த தன்மையைக் குறிக்கும். நாம் உடல் மாற்றத்தினால் கடந்த காலச் செயல்களை மறக்கலாம், ஆனால் நமக்குள் இருக்கும் பரமாத்மா அனைத்தையும் நினைவில் வைத்துள்ளார்.
கர்ம வினைப் பயன்கள்: நாம் செய்த பழைய செயல்களை நாம் மறந்திருந்தாலும், அதன் விளைவுகளிலிருந்து நாம் தப்ப முடியாது. நமது முந்தைய நற்செயல்கள் அல்லது தீய செயல்களுக்கான இன்ப துன்பங்களை, எல்லாம் அறிந்த பரமாத்மாவே தகுந்த நேரத்தில் பரிசாக அளிக்கிறார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Comments
Post a Comment