பகவானும் அவரது சகாக்களும், அவரது விருப்பப்படியே
தோன்றி மறைகின்றனர். ஜட இயற்கையின் சட்டங்களுக்கு அவர்கள் உட்பட்டவர்கள் அல்ல. இயற்கைச்
சட்டங்களின்படி, பகவானின் குடும்பத்தினரை கொல்லக் கூடியவர்களும் இல்லை. இயற்கையான மரணத்தை
அவர்கள் அடைவதும் சாத்தியமில்லை. எனவே குடிபோதையினால் தங்களுக்கிடையில் சண்டை செய்வதுபோல்
காட்டிக்கொண்டு, பூமியிலிருந்து மறைவதுதான் ஒரே வழி. பெயரளவேயான இச்சண்டையும் பகவானின்
விருப்பப்படிதான் நிகழும். இல்லையெனில் அவர்களுக்கிடையில் சண்டை நிகழ்வதற்கும் காரணமில்லை.
அர்ஜுனன் கொண்டிருந்த குடும்பப் பாசத்தினால், மாயையில் புகுத்தப்பட்ட அவரிடம், பகவானால்
பகவத்கீதை பேசப்பட்டது போலவே, பகவானின் விருப்பப்படியே யது வம்சத்தினரும் குடியால்
போதை ஏறும்படிச் செய்யப்பட்டனர். பகவத் பக்தர்களும், சகாக்களும் பகவானிடம் பூரண சரணாகதியடைந்த
ஆத்மாக்களாவர். இவ்வாறாக பகவானின் கரங்களில் உன்னத ஆயுதங்களாக உள்ள அவர்களை பகவானால்
தமது விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ள முடியும். பகவானின் மகிழ்ச்சியைக்
காண விரும்புவதால், தூய பக்தர்களும்கூட பகவானின் இத்தகைய லீலைகளை அனுபவிக்கின்றனர்.
பகவத் பக்தர்கள் தங்களுடைய சுதந்திரத்தை ஒருபோதும் வலியுறுத்துவதில்லை; மாறாக, பகவானின்
விருப்பப்படியே தங்களுடைய சுதந்திரத்தை அவர்கள் உபயோகிக்கின்றனர். பகவானுடன் இவ்வாறு
ஒத்துழைப்பதால், பக்தர்கள் பகவானின் லீலைகள் சிறப்புடையதாகச் செய்கின்றனர்.
யது வம்சத்தின் மறைவு: ஒரு தெய்வீக லீலை
சுதந்திரமான தோற்றமும் மறைவும்: பகவானும் அவருடைய சகாக்களும் ஜட இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் தங்கள் விருப்பப்படியே இவ்வுலகில் தோன்றி, தங்கள் விருப்பப்படியே மறைக்கின்றனர்.
இயற்கை சட்டங்களுக்கு அப்பாற்பட்ட நிலை: ஜட இயற்கையின் விதிகளால் பகவானின் குடும்பத்தினரை (யது வம்சத்தினர்) அழிக்க முடியாது; அவர்களுக்கு இயற்கை மரணம் என்பதும் சாத்தியமற்ற ஒன்று.
மறைவிற்கான ஒரு காரணம்: அவர்கள் பூமியிலிருந்து மறைவதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டதால், பகவானின் விருப்பப்படி "குடிபோதையால் சண்டையிடுவது போன்ற" ஒரு லீலை உருவாக்கப்பட்டது.
பகவானின் சங்கல்பம்: அர்ஜுனனுக்கு பகவத்கீதையை உபதேசிக்க அவர் எப்படி மாயையினால் குடும்பப் பாசத்தில் ஆழ்த்தப்பட்டாரோ, அதேபோல் யது வம்சத்தினரும் பகவானின் விருப்பப்படியே மது அருந்தி போதையில் இருப்பது போல் மாற்றப்பட்டனர்.
உன்னதக் கருவிகள்: பகவானின் பக்தர்கள் மற்றும் சகாக்கள் அவரிடம் முழுமையாகச் சரணடைந்த ஆத்மாக்கள். பகவான் அவர்களைத் தனது விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பக்தர்களின் ஒத்துழைப்பு: தூய பக்தர்கள் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை வலியுறுத்துவதில்லை. பகவானின் மகிழ்ச்சிக்காக, அவருடைய லீலைகள் சிறப்பாக நடைபெற அவரோடு முழுமையாக ஒத்துழைக்கின்றனர்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Comments
Post a Comment