அசுரத் தோழர்களுக்குப் பிரகலாதரின் உபதேசம் பிரகலாதர் தமது பள்ளித் தோழர்களுக்குச் செய்த உபதேசத்தைப் பற்றி இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பிரகலாதர், அசுரப் புத்திரர்களான தன் தோழர்களுடன் பேசும்பொழுது, ஒவ்வொரு ஜீவராசியும், குறிப்பாக மனிதர்கள் வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஆத்ம ஞானத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே, அவர்களுக்குப் பரமபுருஷர் ஒருவரே அனைவராலும் வழிபடத்தக்க மூர்த்தி என்பது கற்பிக்கப்பட வேண்டும். பௌதிக சுகத்தில் ஒருவன் அதிக நாட்டம் கொள்ளக் கூடாது; மாறாக, சுலபமாக அடையப்படக்கூடிய பௌதிக விஷயங்களைக் கொண்டு ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஒருவனது ஆயுள் மிகவும் குறுகியதாக உள்ளதால், அவன் ஒவ்வொரு நொடியையும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே செலவிட வேண்டும். “இளமையில் பௌதிக சுகபோகங்களை அனுபவிப்போம், முதுமையில் கிருஷ்ண பக்தியில் ஈடுபடலாம்” என்று ஒருவன் தவறாக நினைக்கக் கூடும். இத்தகைய பௌதிகமான சிந்தனையால் பயனில்லை. ஏனெனில், வயதான பருவத்தில் ஒருவனை ஆன்மீக வழிமுறையில் பயிற்றுவிக்க முடியாது. ஆகவே, வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஒரு...