Skip to main content

Posts

Showing posts from April 20, 2026

இரன்யகசிபுவின் கேள்விகளுக்கு பிரகலாதனின் பதில்கள்

  இரண்யகசிபு  :- மூடனே பிரகலாதா, நான் கோபப்படும்பொழுது மூவுலகங்களும் அவற்றின் அதிபதிகளும் நடுங்குகின்றனர் என்பதை நீ அறிவாய். யாருடைய பலத்தினால் அயோக்கியனான நீ, பயமற்றவனாகி என் அதிகாரத்தையும் மீறும் அளவிற்கு இவ்வளவு புத்தியற்றவன் ஆனாய்? பிரகலாத மகாராஜன் கூறினார்:- அரசே, என்னுடைய பலத்திற்கு மூலம் எதுவோ, அதுவே தங்களுடைய பலத்திற்கும் மூலமாகும். உண்மையில், எல்லா வகையான பலத்திற்கும் ஆதிமூலம் ஒன்றுதான். அவரே எனக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும், மற்றுமுள்ள எல்லா பலசாலிகளுக்கும் ஒரே பலமாக விளங்குகிறார். அவரன்றி எவராலும் எந்த சக்தியையும் பெற முடியாது. பிரம்மதேவர் உட்பட, அசைவன, அசையாதன. உயர்ந்தவர், தாழ்ந்தவர் ஆகிய அனைவருமே பரமபுருஷரின் பலத்தினால்தான் ஆளப்படுகின்றனர். எவர் பரம ஆளுனராகவும், கால சொரூபமாகவும் இருக்கிறாரோ, அந்த பரமபுருஷரே இந்திரிய சக்தியாவும், மனோபலமாகவும், சரீர பலமாகவும், புலன்களின் உயிர்ச்சக்தியாகவும் இருக்கிறார். அவருடைய செல்வாக்கு எல்லையற்றதாகும். அவரே அனைத்து ஜீவராசிகளிலும் மிகச் சிறந்தவரும், ஜட இயற்கையின் முக்குணங்களை ஆள்பவருமாவார். அவர் தமது சொந்த சக்திகளால் இப்பிரபஞ்ச த...

குழந்தை பிரகலாதருக்கு உயர்ந்த ஞானம் எவ்வாறு கிடைத்தது?

அசுரன் ஹிரண்யகசிபுவின் மகனாகப் பிறந்த பிரகலாதர் சிறு வயதிலேயே மாபெரும் ஞானத்துடன் திகழ்ந்தார். இஃது அனைவருக்கும் தெரிந்த கதை. அந்த ஞானம் பிரகலாதருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தெரியாத துணுக்கு. ஹிரண்யகசிபு தன் ராஜ்ஜியத்தை விட்டு, கடுந்தவம் புரிவதற்காக மந்தராசல மலைக்குச் சென்றான். அப்பொழுது அவனது மனைவியான கயாது கர்ப்பவதியாக இருந்தாள். அவள் இன்னுமோர் அசுரனைக் கருவில் சுமந்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணிய தேவர்கள் அவளைச் சிறைப்பிடித்தனர். குழந்தைப் பிறந்தவுடன் அதைக் கொன்று விட வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அவர்கள் கயாதுவை ஸ்வர்க லோகத்திற்குக் கொண்டுச் சென்றபொழுது, வழியில் அவர்களைத் தடுத்து நிறுத்திய நாரத முனிவர், கருவில் இருப்பது மாபெரும் பக்தர்,” என்று கூறி, ஹிரண்யகசிபு திரும்பி வரும்வரை அவளைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு, அவளைத் தமது ஆஷ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார். ஆஷ்ரமத்தை அடைந்த கயாது, கர்ப்பத்திலுள்ள தன் குழந்தைக்குப் பாதுகாப்பளிக்கும்படி நாரதரிடம் வேண்டினாள், தன் கணவர் தவத்திலிருந்து திரும்பி வந்த பின்னரே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்பினாள். நாரதரும் அதற்கு ...