Skip to main content

மனதைக் கட்டுப்படுத்த எளிய வழி: மூச்சுப் பயிற்சியா அல்லது ஶ்ரீ கிருஷ்ண நாம ஜபமா?



ப்ராணஸ்ய சோதயேந்மார்கம் பூரகும்பகரேசகை: 

ப்ரதிகூலேன வா சித்தம் யதா ஸ்திரமசஞ்சலம்


மொழிபெயர்ப்பு

யோகி பின்வரும் முறையில் சுவாசித்து உயிர் நிலைக் காற்றின் வழியைச் சுத்தமாக்க வேண்டும். முதலில் அவர் மிக ஆழ்ந்து உள்ளிழுக்க வேண்டும், பின்னர் மூச்சைத் தக்க வைக்க வேண்டும், இறுதியாக வெளிவிட வேண்டும். அல்லது அந்த முறையை நேர்மாறாக்கலாம், யோகி முதலில் வெளிவிட்டு, பின்னர் மூச்சை வெளியில் தக்க வைத்து, இறுதியாக உள்ளிழுக்க முடியும். இவ்வாறு செய்யப்படும் போது மனம் உறுதி கொண்டு, வெளிப்புறத் தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது.

பொருளுரை

இத்தகைய சுவாசிக்கும் பயிற்சிகள் மனதைக் கட்டுப்படுத்தவும் அதைப் பரம புருஷ பகவான் மேல் ஈடுபடுத்தவும் செய்யப்படுகின்றன. ஸ வை மன: க்ருஷ்ண பதாரவிந்தயோ: பக்தராகிய அம்பரீஷ மஹாராஜா தன் மனதை ஒரு நாளின் 24 மணி நேரமும் கிருஷ்ணரின் பாத கமலங்களில் ஈடுபடுத்தி இருந்தார். கிருஷ்ண உணர்வு முறை என்பது ஹரே கிருஷ்ண என்பதை உச்சரிப்பதும் கவனமாக அந்த ஒலியைக் கேட்பதுமாகும். இதனால் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதாகக் கூறமுடியாத கிருஷ்ணருடைய பெயரினை உச்சரிக்கும் ஒலி அதிர்வின் மீது நம் மனமானது நிறுத்தப்படுகிறது. ஒருவர் தன் மனதை நேரடியாக கிருஷ்ணரின் பாத கமலங்களில் பதித்தால் உயிர்க் காற்றின் வழியைத் தூய்மைப்படுத்துவதற்கென விதிக்கப்பட்ட முறையால் மனதைக் கட்டுப்படுத்தும் உண்மையான நோக்கம், உடனே அடையப் பெறுகிறது. ஹட யோக முறை அல்லது சுவாசிக்கும் முறை, உடலைப் பற்றிய கருத்தில் மிகவும் ஆழ்ந்திருப்பவருக்குச் சிறப்பாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ஹரே கிருஷ்ணாவை உச்சரிக்கும் எளிய முறையை நிகழ்த்துபவரோ மிகவும் எளிதாக கிருஷ்ண உணர்வில் மனதைப் பதிய வைக்க முடியும்.

உயிர் மூச்சின் வழியைத் தெளிவுபடுத்த மூன்று வேறுபட்ட செயல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன: பூரக, கும்பக மற்றும் ரேசக. மூச்சை உள்ளிழுப்பது பூரக எனப்படும், அதை உள்ளே தக்க வைத்துக் கொள்வது கும்பக எனப்படும், இறுதியாக அதை வெளியிடுவது ரேசக எனப்படும். பரிந்துரைக்கப்பட்ட இந்த முறைகளை தலைகீழான முறையிலும் நிகழ்த்தலாம். வெளியிட்ட பிறகு, ஒருவர் காற்றைச் சிறிது நேரத்திற்கு வெளியில் வைத்து, பின்னர் உள் இழுக்கலாம். உள்ளிழுத்தல் மற்றும் வெளியிடுதலுக்குக் காரணமான நரம்புகள் அறிவியல் நோக்கில் இடா என்றும் பிங்கலா என்றும் அழைக்கப்படுகின்றன. இடா மற்றும் பிங்கலா வழிகளைத் தூய்மைப்படுத்துவதன் நோக்கம் என்னவென்றால் மனதை உலக இன்பத்திலிருந்து திருப்புவதற்காகும்.

பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல, ஒருவர் மனமே அவரது பகைவனாகும், ஒருவர் மனமே அவருக்குத் தோழனுமாகும்; அதன் நிலையானது உயிரினத்தின் வேறுபட்ட செயல் தொடர்புகளுக்கு ஏற்றபடி வேறுபடுகிறது. நமது மனதை நாம் உலக இன்பத்திற்கான எண்ணங்களில் திசை திருப்பினால், பின்னர் நமது மனம் ஒரு எதிரியாகிறது, நாம் நமது மனத்தை கிருஷ்ணரின் பாத கமலங்களில் ஒருமுகப்படுத்தினால், பின்னர் நம் மனம் ஒரு நண்பனாகும். யோக முறைகளான பூரக, கும்பக மற்றும் ரேசக இவற்றால் அல்லது கிருஷ்ணர் எனும் பெயரின் ஒலி அதிர்வின் மீது மனதை நேரடியாக்கி நிறுத்துதல் மூலம் அல்லது கிருஷ்ணரின் மேல் நிறுத்துவதன் மூலம், அதே நோக்கம் நிறைவேறுகிறது.

ஒவ்வொருவரும் சுவாசப் பயிற்சியினைச் செய்ய வேண்டும் (அப்யாஸ யோக யுக்தேன) என்று பகவத் கீதையில் (8.8) கூறப்பட்டுள்ளது. இந்த முறைகளுக்கான கட்டுப்பாட்டின் தன்மையால், மனம் வெளிப்புற நினைவுகளில் (சேதஸா நாந்ய காமினா), அலைபாய இயலாது. இவ்வாறு ஒருவர் தன் மனதை நிலையாக பரம புருஷ பகவானின் மீது நிறுத்தவும், அவரை அடையவும் (யாதி) முடியும்.

இக்காலத்தில் யோக முறையின் பயிற்சியையும், மூச்சுக் கட்டுப்பாட்டையும் செய்வது மிகவும் கடினமானது. அதனால் சைதன்ய பிரபு கீர்தனீய: ஸதா ஹரி: என்று பரிந்துரைத்தார். ஒருவர் எப்போதும் பரம புருஷ பகவானாகிய கிருஷ்ணரின் புனிதப் பெயரை உச்சரிக்க வேண்டும். ஏனென்றால், கிருஷ்ணர் என்பதே பரம புருஷ பகவானுக்கு மிகவும் பொருத்தமான பெயராகும். கிருஷ்ணர் என்ற பெயரும் பரமனாகிய கிருஷ்ணரும் வேறுபட்டது அல்ல. அதனால், ஒருவர் தன் மனதை ஹரே கிருஷ்ணாவை உச்சரிப்பதிலும் கேட்பதிலும் ஒருமுகப்படுத்தினால், அதே பயன் கிட்டுகிறது.


 (ஸ்ரீமத் பாகவதம் 3.28.9)


ஸ்லோகத்தின் முக்கிய குறிப்புகள்:


  • சுவாச முறையும் தூய்மையும்: யோகி பூரக, கும்பக, ரேசக முறைகளில் சுவாசித்து, தன் உயிர் நிலைக் காற்றின் (பிராணன்) வழியைச் சுத்தமாக்க வேண்டும்.

  • பிராணாயாமத்தின் இரு வழிகள்:

    • நேர் வழி: முதலில் மிக ஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும் (பூரக), பின்னர் மூச்சை உள்ளே தக்க வைக்க வேண்டும் (கும்பக), இறுதியாக மூச்சை வெளிவிட வேண்டும் (ரேசக).

    • தலைகீழ் வழி: முதலில் மூச்சை வெளிவிட்டு, பின்னர் மூச்சை வெளியில் தக்க வைத்து, இறுதியாக உள்ளிழுக்க வேண்டும்.

  • பயிற்சியின் நோக்கம்: இம்முறையால் மனம் உறுதி கொண்டு, வெளிப்புறத் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, பரம புருஷ பகவான் மீது நிலைபெறுகிறது.

  • அம்பரீஷ மஹாராஜாவின் முன்மாதிரி: தூய்மையான பக்திக்கு உதாரணமான அம்பரீஷ மஹாராஜா, தன் மனதை ஒரு நாளின் 24 மணி நேரமும் ஶ்ரீ கிருஷ்ணரின் பாத கமலங்களில் நேரடியாக ஈடுபடுத்தி இருந்தார்.

  • கிருஷ்ண உணர்வின் எளிமை: ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதும், கவனமாகக் கேட்பதுமே கிருஷ்ண உணர்வு முறையாகும். ஶ்ரீ கிருஷ்ணரின் திருநாம ஒலி அதிர்வு அவரிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால், இம்முறையில் மனம் நேரடியாக ஶ்ரீ கிருஷ்ணரின் பாத கமலங்களில் நிலைபெற்று, பிராணாயாமத்தின் உண்மையான நோக்கம் உடனே அடையப் பெறுகிறது.

  • பரிந்துரைக்கப்படும் தகுதி: ஹட யோக அல்லது சுவாச முறையானது உடலைப் பற்றிய கருத்தில் மிகவும் ஆழ்ந்திருப்பவருக்கு (தேஹாத்ம புத்தி உடையவருக்கு) சிறப்பாகப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், ஹரே கிருஷ்ண நாமத்தை உச்சரிக்கும் எளிய முறையைப் பின்பற்றுபவர் மிக எளிதாக ஶ்ரீ கிருஷ்ண உணர்வில் மனதைப் பதிய வைக்க முடியும்.

  • இடா மற்றும் பிங்கலா நரம்புகள்: உள்ளிழுத்தல் மற்றும் வெளியிடுதலுக்குக் காரணமான நரம்புகள் அறிவியல் நோக்கில் இடா மற்றும் பிங்கலா எனப்படும். இந்த வழிகளைத் தூய்மைப்படுத்துவதன் நோக்கம் மனதை உலக இன்பத்திலிருந்து திருப்புவதற்கே ஆகும்.

  • மனமே நண்பன், மனமே எதிரி: பகவத் கீதையில் குறிப்பிட்டுள்ளபடி, மனம் உலக இன்பங்களில் திசை திரும்பினால் அது எதிரியாகிறது; அதே மனம் ஶ்ரீ கிருஷ்ணரின் பாத கமலங்களில் ஒருமுகப்படுத்தப்பட்டால் அதுவே நமக்கு நண்பனாகிறது.

  • அப்யாஸ யோகம் (பகவத் கீதை 8.8): ஒவ்வொருவரும் சுவாசப் பயிற்சியினைச் செய்ய வேண்டும் என்று பகவத் கீதை கூறுகிறது. இக்கட்டுப்பாட்டால் மனம் வெளிப்புற நினைவுகளில் அலைபாயாமல், நிலையாக பரம புருஷ பகவானை அடைந்து அவரை அடைய (யாதி) முடியும்.

  • கலியுகப் பரிந்துரை: இக்காலத்தில் (கலியுகத்தில்) யோகப் பயிற்சியையும், மூச்சுக் கட்டுப்பாட்டையும் செய்வது மிகவும் கடினமானது. எனவேதான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபு, "கீர்தனீய: ஸதா ஹரி:" — அதாவது எப்போதும் பரம புருஷ பகவானாகிய ஶ்ரீ கிருஷ்ணரின் புனிதப் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

  • நாம-நாமியினுடைய அபேதம்: ஶ்ரீ கிருஷ்ணர் என்ற பெயரும், பரமனாகிய ஶ்ரீ கிருஷ்ணரும் வேறுபட்டது அல்ல. எனவே, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதிலும் கேட்பதிலும் மனதை ஒருமுகப்படுத்தினால், கடினமான யோக முறைகளால் கிடைக்கும் அதே பயன் மிக எளிதாகக் கிட்டுகிறது.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

  1. Hare krishna hare krishna krishna krishna hare hare hare rama hare rama rama rama hare hare

    ReplyDelete

Post a Comment

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more