Skip to main content

Posts

Showing posts from April 24, 2026

அசுரத் தோழர்களுக்குபிரகலாதரின் உபதேசம்

  அசுரத் தோழர்களுக்குப் பிரகலாதரின் உபதேசம் பிரகலாதர் தமது பள்ளித் தோழர்களுக்குச் செய்த உபதேசத்தைப் பற்றி இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பிரகலாதர், அசுரப் புத்திரர்களான தன் தோழர்களுடன் பேசும்பொழுது, ஒவ்வொரு ஜீவராசியும், குறிப்பாக மனிதர்கள் வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஆத்ம ஞானத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மனிதர்கள் குழந்தைகளாக இருக்கும்பொழுதே, அவர்களுக்குப் பரமபுருஷர் ஒருவரே அனைவராலும் வழிபடத்தக்க மூர்த்தி என்பது கற்பிக்கப்பட வேண்டும். பௌதிக சுகத்தில் ஒருவன் அதிக நாட்டம் கொள்ளக் கூடாது; மாறாக, சுலபமாக அடையப்படக்கூடிய பௌதிக விஷயங்களைக் கொண்டு ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஒருவனது ஆயுள் மிகவும் குறுகியதாக உள்ளதால், அவன் ஒவ்வொரு நொடியையும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவே செலவிட வேண்டும். “இளமையில் பௌதிக சுகபோகங்களை அனுபவிப்போம், முதுமையில் கிருஷ்ண பக்தியில் ஈடுபடலாம்” என்று ஒருவன் தவறாக நினைக்கக் கூடும். இத்தகைய பௌதிகமான சிந்தனையால் பயனில்லை. ஏனெனில், வயதான பருவத்தில் ஒருவனை ஆன்மீக வழிமுறையில் பயிற்றுவிக்க முடியாது. ஆகவே, வாழ்வின் துவக்கத்திலிருந்தே ஒரு...

இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல்

    இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல் இரண்யகசிபு கடுந்தவங்களினால் பிரம்மதேவரை மகிழ்வித்து தான் விரும்பிய வரங்களைப் பெற்றான். இந்த வரங்களைப் பெற்ற பின், கிட்டத்தட்ட முழுமையாக அரிக்கப்பட்டிருந்த அவனது உடல், முழு அழகும், தங்கத்தைப் போன்ற பளபளப்பும் கொண்ட ஓருடலாகப் புதுப்பிக்கப்பட்டது. ஆயினும், தன் சகோதரனைக் கொன்ற பகவான் விஷ்ணுவை மறக்கமுடியாமல் தொடர்ந்து அவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இரண்யகசிபு பத்துத் திசைகளையும் மூவுலகங்களையும் வென்று, தேவர்கள், அசுரர்கள் ஆகிய அனைத்து ஜீவராசிகளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான். இந்திரனின் இருப்பிடம் உட்பட எல்லா இடங்களுக்கும் அதிபதியாக மாறிய அவன், மிகவும் ஆடம்பரமாக வாழ்வை அனுபவிக்கத் துவங்கி வெறிபிடித்தவனானான். பகவான் விஷ்ணு, பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் ஆகியோரைத் தவிர மற்றெல்லா தேவர்களும் அவனது கட்டுப்பாட்டிற்கு அடிபணிந்து அவனுக்கு சேவை செய்யத் துவங்கினர். ஆனால் இவ்வளவு பௌதிக சக்தியை அவன் பெற்றிருந்த போதிலும், எப்பொழுதும் வேத விதிகளை மீறுவதில் பெருமை கொண்டு திமிர் பிடித்தவனாக இருந்ததால் அவன் திருப்தியடையாதவனாகவே இருந்...

அசுரராஜன், இரண்யகசிபு (நரசிம்ம அவதாரம் பாகம் 1)

அசுரராஜன், இரண்யகசிபு பரமபுருஷர் வராக மூர்த்தியாகத் தோன்றி இரண்யகசிபுவின் தமயனான இரண்யாக்ஷனைக் கொன்றபொழுது, இரண்யகசிபு மிகவும் வருத்தமடைந்தான். பரமபுருஷர் அவரது பக்தர்களிடம் பாரபட்சம் உடையவர் என்று கோபத்துடன் குற்றம் சாட்டிய அவன், தன் சகோதரனைக் கொல்வதற்காக வராக மூர்த்தியாகத் தோன்றிய பகவானை ஏளனம் செய்தான். அவன் எல்லா அசுரர்களையும், இராட்சஸர்களையும் கிளர்ந்தெழச் செய்து, அமைதிமிக்க முனிவர்களின் மற்றும் பிற மண்ணுலக வாசிகளின் வேதக் கிரியைகளுக்கு இடையூறு விளைவித்தான். யாகங்கள் நின்றுவிட்ட காரணத்தால் தேவர்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் மண்ணுலகில் சஞ்சரிக்கத் துவங்கின ர். தன் சகோதரனின் ஈமக்கிரியைகளை முடித்தபின் இரண்யகசிபு தன் மருமகன்களிடம் வாழ்வின் உண்மையைப் பற்றி சாஸ்திரங்களிலிருந்து எடுத்துக்கூறத் தொடங்கினான். அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பின்வருமாறு அவன் பேசினான்: “அன்புள்ள மருமகன்களே! வீரர்களுக்குப் பகைவர்களின் முன்னிலையில் மடிவது புகழ் சேர்ப்பதாகும். வெவ்வேறு கருமங்களுக்கேற்ப ஜீவராசிகள் இந்த ஜட உலகினுள் ஒன்று சேர்ந்து, இயற்கைச் சட்டங்களினால் மீண்டும் பிரிக்கப்படுகின்றனர். ஆனால்...