கௌமோதகீம் பகவதோ தயிதாம் ஸ்மரேததிக்தாமராதிபடசோணிதகர்தமேன மாலாம் மதுவ்ரதவரூதகிரோபகுஷ்டாம் சைத்யஸ்ய தத்வமமலம் மணிமஸ்ய கண்டே மொழிபெயர்ப்பு யோகி அவருக்கு மிகவும் அன்பான, கௌமோதகீ எனப் பெயருடைய அவருடைய கதாயுதத்தைத் தியானிக்க வேண்டும். இந்தக் கதை, பகைமையுடைய வீரர்களான அரக்கர்களைத் தகர்த்து அவர்களின் குருதியால் பூசப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள அழகிய மாலையின் மேல் கவனம் செலுத்த வேண்டும், அந்த மாலை எப்போதும் ரீங்காரமிடும் வண்டுகளால் சூழப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள முத்தாரத்தைத் தியானிக்க வேண்டும், அது எப்போதும் அவரது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள தூய உயிரினங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பொருளுரை யோகி பகவானுடைய தெய்வீக உடலின் பல்வேறுபட்ட உறுப்புகளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உயிரினங்களின் உடலமைப்பு நிலை புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இங்கு உயிரினங்களில் இரண்டு வகைகள் குறிக்கப்பட்டுள்ளன. ஒன்று அராதி எனப்படுகிறது. அவை பரம புருஷ பகவானின் லீலைகளைப் புரிந்துகொள்வதை வெறுக்கின்றன. பகவான் தன் கையில், எப்போதும் அசுரர்களைக் கொன...