Skip to main content

Posts

Showing posts from June, 2026

பகவானின் கதையும் கண்டாபரணமும்: அசுர சிக்ஷையும் பக்த ரக்ஷையும்

கௌமோதகீம் பகவதோ தயிதாம் ஸ்மரேததிக்தாமராதிபடசோணிதகர்தமேன மாலாம் மதுவ்ரதவரூதகிரோபகுஷ்டாம்  சைத்யஸ்ய தத்வமமலம் மணிமஸ்ய கண்டே மொழிபெயர்ப்பு   யோகி அவருக்கு மிகவும் அன்பான, கௌமோதகீ எனப் பெயருடைய அவருடைய கதாயுதத்தைத் தியானிக்க வேண்டும். இந்தக் கதை, பகைமையுடைய வீரர்களான அரக்கர்களைத் தகர்த்து அவர்களின் குருதியால் பூசப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள அழகிய மாலையின் மேல் கவனம் செலுத்த வேண்டும், அந்த மாலை எப்போதும் ரீங்காரமிடும் வண்டுகளால் சூழப்பட்டுள்ளது. ஒருவர் பகவானின் கழுத்திலுள்ள முத்தாரத்தைத் தியானிக்க வேண்டும், அது எப்போதும் அவரது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள தூய உயிரினங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பொருளுரை   யோகி பகவானுடைய தெய்வீக உடலின் பல்வேறுபட்ட உறுப்புகளை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உயிரினங்களின் உடலமைப்பு நிலை புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்று இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இங்கு உயிரினங்களில் இரண்டு வகைகள் குறிக்கப்பட்டுள்ளன. ஒன்று அராதி எனப்படுகிறது. அவை பரம புருஷ பகவானின் லீலைகளைப் புரிந்துகொள்வதை வெறுக்கின்றன. பகவான் தன் கையில், எப்போதும் அசுரர்களைக் கொன...

பகவத் கடாக்ஷம்: பக்தர்களின் துன்பங்களை முற்றிலும் நீக்கும் துக்க நிவாரணி

தஸ்யாவலோகமதிகம் க்ருபயாதிகோர தாபத்ரயோபசமனாய நிஸ்ருஷ்டமக்ஷ்ணோ:   ஸ்நிக்தஸ்மிதாநுகுணிதம் விபுலப்ரஸாதம் த்யாயேச்சிரம்விபுலபாவனயா குஹாயாம் மொழிபெயர்ப்பு யோகிகள் முழு பக்தியுடன் பகவானின் கண்களிலிருந்து அடிக்கடி வீசும் அன்புப் பார்வைகளை ஆழ்ந்து நினைக்க வேண்டும். ஏனெனில், அவரது பக்தர்களின் அச்சம் தரத்தக்க மூன்று வித வேதனைகளுக்கு அவை ஆறுதல் அளிக்கின்றன. இனிய புன்சிரிப்பினைத் தொடர்ந்துவரும் அவரது பார்வைகள் அதிகமான அருள் நிறைந்தவை. பொருளுரை ஒருவர் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வில், இந்த ஜடவுடலில் இருக்கும் வரை அவர் கவலைகள், வேதனைகளால் துன்பப்படுதல் இயற்கையானது. ஒருவர் உன்னதமான இருப்பிடத்தில் இருந்தபோதிலும், அவர் ஜட சக்தியின் பாதிப்பைத் தவிர்க்க முடியாது சில சமயம் தொல்லைகள் வருகின்றன. ஆனால் பக்தர்களின் கவலைகளும் வேதனைகளும், அவர்கள் பரம புருஷ பகவானை அவருடைய அழகிய வடிவத்தில் அல்லது பகவானின் சிரித்த முகத்தை நினைக்கும் பொழுது உடனே தணிக்கப்படுகின்றன. பகவான் தன் பக்தர்களுக்கு எண்ணற்ற உதவிகளை அளிக்கிறார். அவர் அருளின் மிகச்சிறந்த வெளிப்பாடு, அவரது பக்தர்களுக்கான கருணை நிறைந்த புன்சிரிப்பு நிறைந்த முகமாக...

பக்தவத்சலன்

  ந ஸாதயதி மாம் யோகோ ந ஸாங்க்யம் தர்ம உத்தவ ந ஸ்வாத்யாயஸ் தபஸ் த்யாகோ யதா பக்திர் மமோர்ஜிதா மொழிபெயர்ப்பு உத்தவா, எனது பக்தர்களால் எனக்கு ஆற்றப்படும் கலப்படமற்ற தூய பக்தித் தொண்டானது என்னை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிறது. ஆனால் அஷ்டாங்க யோகம், சாங்க்யத்துவம், புண்ணியச் செயல், வேதக் கல்வி, தவம் அல்லது துறவு ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பவர்களால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. பொருளுரை ஒருவன் ஶ்ரீ கிருஷ்ணரையே அஷ்டாங்க யோகம், சாங்க்ய தத்துவம் போன்ற முறைகளின் இலக்காகக் கொண்டிருக்கக்கூடும்; எனினும் பகவானைப் பற்றி கேட்டல், பாடுதல் மற்றும் அவரது நோக்கத்தை நிறைவேற்றுதல் ஆகியவற்றினால் பகவானின் நேரடியான அன்புத் தொண்டில் ஈடுபடுவது எந்த அளவுக்கு பகவானைத் திருப்திப்படுத்துமோ, அந்த அளவுக்கு மற்ற சமய முறைகள் திருப்திப்படுத்துவதில்லை. ஶ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ஞான-கர்மாதி-அனாவ்ருதம் : ஒரு பக்தன் ஶ்ரீ கிருஷ்ணரை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். அவன் தனது அன்புத்தொண்டை கர்மத்திலோ, மனோ தத்துவ ஊகத்திலோ சிக்கவைக்கக்கூடாது. பிருந்தாவன வாசிகள் எப்பொழுதும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரையே...