பகவானும் அவரது சகாக்களும், அவரது விருப்பப்படியே தோன்றி மறைகின்றனர். ஜட இயற்கையின் சட்டங்களுக்கு அவர்கள் உட்பட்டவர்கள் அல்ல. இயற்கைச் சட்டங்களின்படி, பகவானின் குடும்பத்தினரை கொல்லக் கூடியவர்களும் இல்லை. இயற்கையான மரணத்தை அவர்கள் அடைவதும் சாத்தியமில்லை. எனவே குடிபோதையினால் தங்களுக்கிடையில் சண்டை செய்வதுபோல் காட்டிக்கொண்டு, பூமியிலிருந்து மறைவதுதான் ஒரே வழி. பெயரளவேயான இச்சண்டையும் பகவானின் விருப்பப்படிதான் நிகழும். இல்லையெனில் அவர்களுக்கிடையில் சண்டை நிகழ்வதற்கும் காரணமில்லை. அர்ஜுனன் கொண்டிருந்த குடும்பப் பாசத்தினால், மாயையில் புகுத்தப்பட்ட அவரிடம், பகவானால் பகவத்கீதை பேசப்பட்டது போலவே, பகவானின் விருப்பப்படியே யது வம்சத்தினரும் குடியால் போதை ஏறும்படிச் செய்யப்பட்டனர். பகவத் பக்தர்களும், சகாக்களும் பகவானிடம் பூரண சரணாகதியடைந்த ஆத்மாக்களாவர். இவ்வாறாக பகவானின் கரங்களில் உன்னத ஆயுதங்களாக உள்ள அவர்களை பகவானால் தமது விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ள முடியும். பகவானின் மகிழ்ச்சியைக் காண விரும்புவதால், தூய பக்தர்களும்கூட பகவானின் இத்தகைய லீலைகளை அனுபவிக்கின்றனர். பகவத் பக்த...