பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமித் திருநாள் ‘கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாள் ‘ஸ்ரீராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதிராதா ராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விருப்பம் கொண்டார். எனவே கிருஷ்ணர் பிறந்த ஸ்தலத்திற்கு அருகே ஓடிய யமுனை நதியில் ‘தங்கத் தாமரையில் ஒரு பெண் குழந்தையாக அவதரித்தார். அந்நகர மன்னர் ‘விருஷபானு என்பவர் யமுனைக்கு நீராடச் சென்ற போது ஜொலிக்கும் அந்தத் தாமரையைக் கண்டு அதிசயத்தார். பிறகு அருகே சென்ற போது அத் தாமரையில் இருந்த தெய்வீகமான பெண் குழந்தையை பார்த்ததும் தன் அரண்மனைக்கு கொண்டு வந்தார். பெரியாழ்வாருக்கு, தாயார் ஆண்டாள் தேவி தெய்வப் புதல்வியாக பிறந்தது போல் இந்த மன்னருக்கும் இங்ஙனம் ஸ்ரீமதி ராதாரணி அருள்புரிந்தார். ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருஸ்தலமான ‘ராவல் கிராமத்தில் தவழும் குழந்தையாக வீற்றிருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த மதுராவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ராவல் கிராமம். சாஸ்திரங்கள், உயர்ந்த ஆச்சார்யர்...