Skip to main content

அதீந்திரியன் / மாதவன் மாண்புகள் (பகுதி 2)

 


மாதவன் மாண்புகள் (பகுதி 2)

அதீந்திரியன்

ஜடப்புலன்களுக்கு அப்பாற்பட்டவன்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

நமோ குண-ப்ரதீபாய குணாத்மச்-சாதனாய  

குண-வ்ருத்தி-உபவக்ஷ்யாய குண-த்ரஷ்ட்ரே ஸ்வ-ஸம்விதே


மொழிபெயர்ப்பு


பல்வேறு வகையான பௌதீக மற்றும் ஆன்மீக குணங்களை வெளிப்படுத்தும் பகவானே! உமக்கு எமது வந்தனங்கள். நீர் உம்மைப் பௌதீகக் குணங்களினுள் மறைத்துக் கொள்கின்றீர்; இருந்தும் அதே குணங்களின் செயல்பாடானது இறுதியில் உமது இருப்பினை அறிவிக்கின்றது. அத்தகு குணங்களுக்கு அப்பால் ஒரு சாட்சியாக நீர் நிற்கின்றீர். மேலும் நீர் உமது பக்தர்களால் மட்டுமே முற்றிலும் அறியக்கூடியவராக இருக்கின்றீர்.


பொருளுரை

'குண' என்னும் சொல், ஜட இயற்கையின் அடிப்படைக் குணங்களான சத்துவ, ரஜோ, தமோ குணங்களையும், புண்ணியச் செயல்கள் மற்றும் ஆன்மீகப் பேற்றின் காரணமாக ஒருவன் வெளிப்படுத்தும் மேன்மைக் குணங்களையும், அதுபோல் அகப்புலன்களான மனம், புத்தி என்பன போன்ற பல்வேறு குணங்களைக் குறிப்பிடுகின்றது. 'ப்ரதீபாய' என்னும் சொல்லுக்கு "வெளிப்படுகின்றவருக்கு அல்லது ஒளிர்கின்றவருக்கு" என்று பொருளாகும்.

இவ்வாறு இங்கே நாகபத்தினிகள் பரமபுருஷ பகவானை, "அனைத்துப் பௌதீக மற்றும் ஆன்மீகக் குணங்களை வெளிப்படுத்துபவரே, உயிர்கள் உணர்வு பெறுவதற்குக் காரணமாக இருப்பவரே" என்று அழைக்கின்றனர். ஜட இயற்கையின் திரைக்கு அப்பால் சென்று ஒருவனால் பகவானைக் காண முடியும். அதனாலேயே அவர் "குணாத்மச்-சாதனாய" என்று அழைக்கப்படுகிறார். முறையாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒருவன் பௌதீகக் குணங்களின் செயல்பாட்டினை ஆராய்ந்தானென்றால், இறுதியில் அவன் முழுமுதற் கடவுள் என்று ஒருவர் இருப்பதையும், தம்மைச் சரணடையாதவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த அவர் தமது மாயாசக்தியினை வெளிப்படுத்துகிறார் என்பதையும் அறிந்து கொள்வான்.

ஜட இயற்கைக் குணங்களின் சாட்சியாக இருப்பதினால் பகவான் ஒருபோதும் அத்தகு குணங்களினால் பாதிக்கப்படுவதில்லை. அதனால் அவர் 'குண த்ரஷ்ட்ரே' என்று அழைக்கப்படுகின்றார். 'ஸ்வ' என்னும் வார்த்தை "தனது" என்னும் பொருளுடையதாகும். அதனால் 'ஸ்வ ஸம்விதே' என்பது, பகவான் கிருஷ்ணர் தமது சுய பக்தர்களால் மட்டுமே அறியப்படுகிறார் என்றும், இறுதியில் பகவானால் மட்டுமே அவரைப் பரிபூரணமாக அறிய முடியுமென்றும் குறிப்பிடுகின்றது.

ஆகையினால், நாம் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் அருளியுள்ள உபதேசங்களைப் பின்பற்றி, அவரது தாமரைத் திருவடிகளை முற்றிலும் சரணடைதல் என்னும் சரியான முடிவிற்கு உடனே வருதல் வேண்டும். இவ்வாறு நாம் நாகபத்தினிகளின் உதாரணத்தைப் பின்பற்றி பகவானைப் பணிவுடன் போற்றுதல் வேண்டும்.


 (ஸ்ரீமத் பாகவதம் 10.16.46)


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more