Skip to main content

""ஸ்ரீமதி ராதாராணியின் முக்கியமான இருபத்தைந்து தெய்வீக குணங்கள்



 அத, வ்ருந்தா, வனேஷ்வர்யா: கீர்த்யந்தே ப்ரவரா குணா

மது ரேயம் நவ - வயாஷ் சலாபாங்கோஜ்ஜ்வல-ஸ்மிதா

சாரு-ஸௌபாக்ய-ரேகாட்டியா கந்தோன்மாதி,த-மாதவா

 

ஸங்கீத- ப்ரஸராபிஜ்ஞா ரம்ய-வாங் நர்ம- பண்டி,தா

வினீதா கருணா - பூர்ணா விதக்தா, பாடவான்விதா

 

லஜ்ஜா - ஷீலா ஸு-மர்யாதா தைர்ய-காம்பீர்ய-ஷாலினீ

ஸு- விலாஸா மஹாபாவ- பரமோத்கர்ஷ- தர்ஷிணீ

 

கோகுல-ப்ரேம - வஸதிர் ஜகச்-ச்ரேணீ- லஸத்- யஷா:

குர்வ் -அர்பித-குரு-ஸ்நேஹா ஸகீ,-ப்ரணயிதா- வஷா

 

க்ருஷ்ண- ப்ரியாவலீ- முக்யா ஸந்ததாஷ்ரவ- கேஷவா

பஹுனா கிம் குணாஸ் தஸ்யா: ஸங்க்யாதீதா ஹரேர் இவ


(1) மதுரா - மிகவும் இனிமையானவள்

(2) நவ-வயா - என்றும் இளமையானவள்,

(3) சல-அபாங்கா - சஞ்சலமான கண்களைக் கொண்டவள்

(4) உஜ்ஜ்வல-ஸ்மிதா - பிரகாசமாகச் சிரிப்பவள்

(5) சாரு -ஸௌபாக்ய-ரேக-ஆட்யா - மிகவும் அழகான மங்கல ரேகைகளை உடையவள்

(6) கந்த உன்மாதி -மாதவா - தனது திருமேனியின் நறுமணத்தினால் கிருஷ்ணரை மகிழ்விப்பவள்

(7) ஸங்கீத ப்ரஸர - அபிஜ்ஞா - சங்கீதத்தை விரிவாக அறிந்தவள்

(8) ரம்ய-வாக் - ரம்மியமாகப் பேசுபவள்

(9) நர்ம-பண்டிதா இனிமையாகப் பேசி நகைச்சுவை புரிவதில் திறமையானவள்

(10) வினீதா - மிகுந்த பணிவும் அடக்கமும் உடையவள்

(11) கருணா பூர்ணா - கருணை நிறைந்தவள்

(12) விதக்தா - சாமர்த்தியமானவள்

(13) பாடவான்விதா - தனது கடமைகளை நிறைவேற்றுவதில் திறமைசாலி

(14) லஜ்ஜா – ஷீலா - வெட்கமுடையவள்

(15) ஸு-மர்யாதா - மரியாதைக்குரியவள்

(16) தைர்ய - அமைதியானவள்

(17) காம்பீர்ய-ஷாலினீ - கம்பீரமானவள்

(18) ஸு- விலாஸா - வாழ்வை அனுபவிப்பதில் திறமைசாலி

(19) மஹாபாவ - பிரேமையின் மிகவுயர்ந்த நிலையில் அமையப் பெற்றவள்

(20) பரமோத்கர்ஷ- தர்ஷிணீ கோகுல-ப்ரேம  - கோகுல பிரேமையின் இருப்பிடம்

(21) ஜகச்-ச்ரேணீ- யஷா பணிவான பக்தர்களில் மிகவும் பிரபலமானவள்

(22) குரு-ஸ்நேஹா - பெரியவர்களிடம் பெரிதும் பாசம் கொண்டவள்

(23) ஸகீ,-ப்ரணயிதா- வஷா  - தனது ஸகிகளின் அன்பிற்கு வசப்பட்டவள்

(24) க்ருஷ்ண- ப்ரியாவலீ- முக்யா  - கிருஷ்ணருக்கு பிரியமானவர்களில் முதன்மையானவள் (கோபியர்களில் முதன்மையானவள்)

(25) ஆஷ்ரவ-கேஷவா - கிருஷ்ணரை எப்போதும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவள்.

 சுருக்கமாகக் கூறினால், அவள் பகவான் கிருஷ்ணரைப் போலவே எண்ணற்ற தெய்வீக குணங்களை உடையவள்.


உஜ்ஜ்வல-நீலமணி (ஸ்ரீ-ராதா - ப்ரகரண 11-15)


ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 23.86



Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more