Skip to main content

பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்

 



உபாக்யானே உபதேசம்


அருளியவர் :- ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி )


மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்


பகவத் கீதைக்காக ஒரு குடும்பம் 


ஒரு முறை, ஒரு ஆன்மீக குரு தன்னுடைய சந்நியாச சீடனுக்கு பகவத் கீதையை கொடுத்து, அதை தினமும் இடைவிடாமல் படிக்குமாறு அறிவுறுத்தினார். குருவின் கட்டளையை ஏற்ற சந்நியாச சீடன், விந்திய மழையின் ஒரு குகையில் அமர்ந்து, பகவத் கீதையை தினமும் படிக்க ஆரம்பித்தார். 


அந்த குகையில் இருந்த ஒரு சிறிய எலி, பகவத் கீதையை கொஞ்சம் கொஞ்சமாக கொறித்து தின்ன ஆரம்பித்தது. எலியுடைய இந்த சேட்டையை பார்த்த அந்த சீடர், அருகிலிருந்த கிராமத்திலிருந்து ஒரு பூனையை கொண்டு வந்தார். 


அடுத்த பிரச்சனை வந்தது.  பூனையை பராமரிக்க பால் தேவை என்பதை உணர்ந்தார். இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு பசுவை தேடினார். பகவானின் கருணையால் ஒரு அன்புள்ளம் கொண்டவர், இந்த சீடருக்கு பசுவை தானமாக வழங்கினார். மிகவும் மகிழ்ந்த சீடர், தனது இருப்பிடத்திற்கு வந்தார். 


 அடுத்த பிரச்சனை வந்தது.  பசு குகைக்குள் இருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதற்கு ஒரு தொழுவத்தை கட்ட முடிவு செய்தார். தானே வனத்திற்குள் சென்று மரங்களை சேகரித்து மிகவும் சிரமேற்கொண்டு ஒரு கொட்டகையை அவரே கட்டி முடித்தார்.


 அடுத்த பிரச்சனை வந்தது. மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்வது, பால் கறப்பது, மாடு மேய்ப்பது -  என்று அவருக்கு வேலை கூடிக்கொண்டே போயிற்று. தன்னுடைய ஆன்மீக கடமைகளை செய்ய முடியவில்லையே என்று வருந்திய அவர், பசுவை பராமரிக்க ஒரு இடையனை பணியமர்த்த முடிவு செய்தார். அதன்படியே செய்தார். 


அடுத்த பிரச்சனை வந்தது. இடையனுக்கு உணவளிப்பது மற்றும் இதர வேலைகளை செய்வது யார் என்ற பிரச்சனை? இறுதியாக தான் சந்நியாசம் மேற்கொண்டதையே மறந்து ஒரு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். திருமணம் செய்து கொண்ட பிறகு குடும்பம் பெரிதானது. அவருடைய செல்வமும் பெருகியது. கடமைகளும் கூடின. ஒரு முழு குடும்பஸ்தனாக மாறிய அவர், பகவத் கீதையை படிப்பதையே மறந்து விட்டார்.


சில காலம் கழித்து தன்னுடைய சீடரை தேடி வந்த ஆன்மீக குரு, அந்த சீடரின் செல்வ செழிப்பையும் குடும்பத்தையும் பார்த்து, மிகுந்த கோபத்தோடு "என்ன இதெல்லாம்??", என்று கேட்டார். அந்த சீடர், கூப்பிய கரங்களோடு குருவிடம், "நீங்கள் கொடுத்த பகவத் கீதையை பாதுகாக்க நான் செய்த ஏற்பாடு இது" என்று கூறினான். 


நீதி

"யுக்த வைராக்கியம்" என்ற பெயரில், ஒரு கிருஷ்ண பக்தர் எப்போதும் தன்னுடைய தேவைகளை பெருக்கிக்கொள்ள கூடாது. பக்தி தொண்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு பக்தர் தன்னை ஒருபோதும் ஒரு முக்தி அடைந்த ஆன்மாவோடு ஒப்பிடக்கூடாது. சந்நியாசியாக இருந்தாலும் சரி, க்ரிஹஸ்தராக இருந்தாலும் சரி, ஒரு பக்தர் எப்போதும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதை பின்பற்ற வேண்டும். சாஸ்த்திரத்தில், "யவன்னிற்வஹ பிரதிகிரஹ" - "பகவான் ஸ்ரீ ஹரியின் வழிபாட்டில் ஈடுபடுவதற்கு எவ்வளவு செல்வம் வேண்டுமோ, அவ்வளவு செல்வம் மட்டுமே ஒருவர் ஈட்ட பாடுபட வேண்டும்", என்று கூறப்பட்டுள்ளது. ஒருவன் தேவைக்கு அதிகமாக செல்வம் திரட்டுவது அல்லது கடமைகள் எதுவும் செய்யாமல் இருப்பது - இந்த இரண்டுமே ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும். 


ஒருவர் ப்ரஹ்மச்சாரி, வானப்ரஸ்தா மற்றும் சந்நியாசம் - ஆகிய மூன்று ஆசிரமங்களில் இருக்கிறார் என்றால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையேல் இந்த கதையில் உள்ளபடி பந்தங்களில் சிக்கி கொள்ள நேரிடும். அந்தந்த ஆசிரமத்திற்குரிய நியமங்களை கடைபிடிக்காமல் பெயரளவிற்கு 'பிரமச்சாரி', 'சந்நியாசி' என்று கூறுவது பலனளிக்காது.


பகவான் ஹரியின் பக்தி தொண்டில் ஈடுபடும்போது மாயாவிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒரு மனிதன் எந்த ஆசிரமத்தில் இருந்தாலும், அவனுடைய புலன்கள் எப்போதும் இன்பத்தையே தேடும். 


பகவானிடம் சரணடைந்த ஆன்மீக குருவிடமிருந்து நாம் அறிவுரைகளை ஏற்று அதை பின்பற்றுவது போல தோன்றலாம். ஆனால் குரூரமான நம்முடைய மனது எப்போதும் புலனின்பத்தையே நாடும். மேலும்,  இந்த தேவை (புலனின்பம்) ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும்", என்று நம்முடைய மனம் நம்மையே ஏமாற்றும். க்ரிஹஸ்தர்கள் பெரும்பாலும் "நான் கிருஷ்ண பக்தியில் இருக்கிறேன்" என்று கூறுவார்கள். அனால் உண்மையில், தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் தொழில், பதவி மீது  அதீத அக்கறை செலுத்துவார்கள். இது தான் யுக்த வைராக்கியம் என்று நினைக்கின்றனர். 


ஒரு சந்நியாச பக்தர், தனக்கு பேரும் புகழும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இது முழுமையான ஆன்மீக அழிவிற்கு வழிவகுக்கும். 


ஆகையால் நாம் தூய கிருஷ்ண பக்தியில் ஈடுபட நாம் செய்யவேண்டியவை: 

பகவான் மற்றும் தூய பக்தர்களின் கருணையை ஈட்ட வேண்டும்;  

பகவானிடம் சரணடைந்த தூய பக்தர்களோடு மட்டுமே சங்கம் வைத்துக்கொள்ள வேண்டும்; 

பகவான் மற்றும் ஆன்மீக குருவிடம் செய்து கொடுத்த வாக்குறுதிகளை என்றும் மறக்கவோ மீறவோ கூடாது; 

நாம் செய்த தவறுகளை ஒளிவு மறைவு இன்றி குருவிடம் தெரிவித்து அதற்கான மன்னிப்பு கோர வேண்டும். 


இவை அனைத்தையும் பின்பற்றினால் பகவானுடைய தூய பக்தியை அடைய குருவின் கருணை நிச்சயம் கிடைக்கும்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...