Skip to main content

Posts

Showing posts with the label Devotional Service / பக்தி தொண்டு (Articles)

பக்தித் தொண்டின் உன்னதம்

  யமாதிபிர் யோக-பதை: காம-லோப-ஹதோ முஹு: முகுந்த-ஸேவயா யத்வத் ததாத்மாத்த ந ஸாம்யதி மொழிபெயர்ப்பு   யோக முறையைக் கொண்டு புலனடக்கத்தைப் பயில்வதால், ஒருவர் ஆசை மற்றும் காமம் ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து விடுபடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் ஆத்மாவை திருப்திப்படுத்துவதற்கு இது போதுமானதல்ல. ஏனெனில் இது (திருப்தி) பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டினால் மட்டுமே அடையப்படுவதாகும்.   பொருளுரை யோகம் புலன்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமர்தல், சிந்தித்தல், உணர்தல், விரும்புதல், மனதைக் குவித்தல், தியானம் செய்தல், இறுதியாக தெய்வீகத்தில் ஐக்கியமாகி விடுதல் ஆகிய தேகாப்பியாசங்களைக் கொண்ட யோக முறையைப் பயில்வதால், புலன்களைக் கட்டுப்படுத்த முடியும். புலன்கள் விஷமுள்ள பாம்புகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை அடக்குவதற்காகவே யோக முறை உள்ளது. மாறாக புலன்களை அடக்கும் மற்றொரு முறையை நாரதர் சிபாரிசு செய்கிறார். இது பரம புருஷ பகவானாகிய முகுந்தனின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடும் முறையாகும். புலன்களை செயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதைவிட பகவானின் பக்தித் தொண்டு முறை நடைமு...

பக்தித் தொண்டு மற்றும் ஆத்ம ஞானம்.

  ஒருவர் பகவானின் அறிவார்ந்த பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது , அவர் , ஒரு தனிப்பட்ட ஆத்மா எனும் முறையில் வாசுதேவராகிய பரமாத்மாவின் நிலையான ஊழியனாய் இருத்தல் வேண்டும் என்று அறிகிறார் . தன்னை உணர்தல் என்பது , பரமாத்மாவும் தனிப்பட்ட ஆத்மாவும் இரண்டு ஆத்மாக்கள் என்பதால் அவை மதிப்பில் சமமானவை என்று பொருளல்ல . தனிப்பட்ட ஆத்மா கட்டுப்பாட்டுக்கு ஆளாகக்கூடியது . பரமாத்மா ஒருபோதும் கட்டுப்படுத்தப்படாதது . கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா , தான் பரமாத்மாவுக்கு கீழுள்ளது என்பதை உணரும் பொழுது , அவர் நிலை லப்தாத்மா , தன்னை உணர்தல் அல்லது முக்த பந்தன , ஜடவுலக மாசிலிருந்து விடுதலை என்று அழைக்கப்படுகிறது . ஒருவர் தன்னை பகவான் போன்ற நல்லவராகவும் அல்லது அவருக்குச் சமமாகவும் நினைக்கும் வரை உலகத்தின் மாசு தொடரும் . இந்த நிலை மாயையின் கடைசி சூழ்ச்சி ஆகும் . மாயை எப்பொழுதும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைப் பாதிக்கும் நிறைய தியானம் மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகும் ஒருவர் தானும் பகவானும் ஒன்று என்று தொடர்ந்து நினைத்தால் , அவர்...

பாரத வர்ஷம் - புண்ணிய பூமி

       பாரத - வர்ஷம் என்று அழைக்கப்படும் இந்தியாவில், பக்தித்தொண்டு செய்வதற்கு ஏராளமான வசதிகள் இருக்கின்றன. பாரத - வர்ஷத்தில் அனைத்து ஆச்சாரியர்களும் தங்கள் அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்கின்றனர். ஆன்மீக வாழ்வில் எவ்வாறு வளர்ச்சி பெறுவது, பகவானது பக்தித் தொண்டில் எவ்வாறு நிலைபெறுவது என்பதை பாரத - வர்ஷத்தில் உள்ள மக்களுக்கு உபதேசிப்பதற்காக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தனிப்பட்ட முறையில் அங்கு எழுந்தருளினார். பக்தித் தொண்டின் வழிமுறைகளை மிகவும் எளிதில் அறிந்து கொள்வதற்கும், அதனை மேற்கொள்வதின் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும் பாரத - வர்ஷம் விசேஷத் தன்மை வாய்ந்த நிலமாகும். ஒருவன் பக்தித் தொண்டில் தனது வாழ்க்கையை வெற்றிகரமாக்கிக் கொண்டு, பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பக்தித் தொண்டினை உபதேசிப்பானென்றால், உலகம் உண்மையில் நலம்பெறும். இவ்வுண்மைகள் சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி 9.41) மேலும் விளக்கப்படுகின்றன: பாரத - பூமிதே ஹைல மனுஷ்ய - ஜன்ம யார ஜன்ம ஸார்தக கரி’ கர பர - உபகார      “இந்திய (பாரத - வர்ஷம்) நிலப்பகுதியில் மனிதனாகப் பிறந்திருக்கும் ஒருவன் தனத...