Skip to main content

Posts

Showing posts with the label Hearing / ஸ்ரவணம் (பகவானைப் பற்றி கேட்டல்)(Articles)

பக்தியால் முக்தி பெற்ற மான் : ஒரு தெய்வீகக் கதை

  பக்தியால் முக்தி பெற்ற மான்: ஒரு தெய்வீகக் கதை 🌟 ஒரு காலத்தில், புன்ய நதிக்கரை அருகே, தெய்வீகமான வனமொன்று அமைந்திருந்தது. அங்கே, மிகவும் சாந்த குணமுடைய ஒரு மான் வாழ்ந்து வந்தது. இந்த மான் மற்ற சாதாரண மான்களைப் போல இல்லாமல், அருகிலிருந்த முனிவர்களின் ஆசிரமத்தின் ஆன்மீகச் சூழலால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தது. பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் மீது பக்தி தினமும் அதிகாலையில், முனிவர்கள் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் திருநாமங்களையும் வேத மந்திரங்களையும் ஓதுவதை மான் மிகுந்த கவனத்துடன் கேட்கும். அந்தத் தெய்வீக ஒலிகளின் பலனாக நாளடைவில் விஷ்ணுவின் நாமத்தின் மீது மாபெரும் ஈர்ப்பு ஈர்ப்பு  ஏற்பட்டது, அது மெல்ல மெல்ல வளர்ந்தது. பகவான் ஶ்ரீமன் நாராயணனின் ரூபங்களும் லீலைகளும் அதன் மனதிற்குள் ஆழமாகப் பதிந்தன. மானின் அமைதியான மற்றும் சாந்தமான நடத்தையைக் கண்ட முனிவர்கள், அதனை அங்கேயே, பாதுகாப்பாக இருக்க அனுமதித்தனர். அருகில் இருந்த ஆலயத்தின் மணியோசை கேட்கும் போதும், தீபாராதனை காட்டப்படும் போதும், அந்த மான் மிகுந்த மரியாதையுடன் தலை வணங்கியது. அது மற்ற விலங்குகளைப் போல் பிரசாதத்திற்காக ஒருபோதும் ஆவலுடன் நிற்கவ...

எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை

  யத் - கீர்தனம் யத் - ஸ்மரணம் யத் - ஈக்ஷணம் யத் - வந்தனம் யச் - ச்ரவணம் யத் - அர்ஹணம் லோகஸ்ய ஸத்யோ விதுனோதி கல்மஷம் தஸ்மை ஸுபத்ர - ஸ்ரவஸே நமோ நம : மொழிபெயர்ப்பு சர்வ மங்களம் பொருந்திய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய பெருமைகள் , நினைவுகள் , அவரது தரிசனம் , பிரார்த்தனைகள் , அவரைப் பற்றி கேட்ட மற்றும் அவரது வழிபாடு ஆகியவை சாதகனின் பாவ விளைவுகளை எல்லாம் உடனே தூய்மை செய்துவிடக் கூடியவையாகும் . அவருக்கு எனது வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன் . பொருளுரை எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் தன்னை ஒருவன் விடுவித்துக் கொள்வதற்குரிய மிகச் சிறந்த முறை மிகப் பெரிய அதிகாரியான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமியால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது . நினைவில் கொள்ளுதல் , ஆலயத்திற்குச் சென்று விக்கிரகத்தை தரிசித்தல் , பகவான் முன்னிலையில் பிரார்த்தனைகள் செய்தல் , மற்றும் பகவானின் புகழ் பாடப்படுவதைக் கேட்டல் ஆகியவற்றை ஸ்ரீமத் பாகவதத்திலும் , பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளவாறு , கீர்த்தனமாகவும் வேறு முறைகளிலும் நிறைவேற்ற முடியும் . இன்னிசைகளுடன...

உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ண பிரேமையை எழுப்புவதற்குன்டான சிறந்த வழி

  ஜீவன்கள் பகவானின் நுண்ணிய அணுவைப் போன்ற அம்சங்களாக இருப்பதால், பக்தித் தொண்டானது அவர்களில் ஏற்கனவே உள்ளது, ஆனால் செயலற்ற நிலையில் உள்ளது. ஸ்ரவணம், கீர்த்தனம் (செவியுறுதல், உரைத்தல்) முதலியவற்றுடன் பக்தித் தொண்டு தொடங்குகின்றது. ஒரு மனிதன் உறங்கிக் கொண்டிருக்கையில், அவனை சப்தத்தினால் எழுப்ப முடியும்; எனவே, தூய வைஷ்ணவரால் உச்சரிக்கப்பட்ட ஹரே கிருஷ்ண மந்திரத்தினைக் கேட்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு கட்டுண்ட ஆத்மாவிற்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கேட்பவன் ஆன்மீக உணர்வு அல்லது கிருஷ்ண உணர்விற்கு எழுப்பப்படுகிறான். இவ்விதமாக ஒருவனின் மனம் படிப்படியாகத் தூய்மையடைகிறது என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார் (சேதோ-த ர்பண-மார்ஜனம்). மனம் தூய்மையடையும்போது புலன்களும் தூய்மையடைகின்றன. புலன்களைப் புலனுகர்ச்சியில் உபயோகிப்பதற்கு பதிலாக, கிருஷ்ண உணர்வை எழுப்பிய பக்தன் தனது புலன்களை பகவானின் தெய்வீக அன்புத் தொண்டில் ஈடுபடுத்துகிறான். உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ண பிரேமையை எழுப்புவதற்கு இதுவே வழிமுறையாகும். ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் . மத்திய லீலை 22.105 / பொருளுரை முக்கிய...