Skip to main content

Posts

Showing posts with the label Ignorance / தமோ குணம் (அறியாமை) (Articles)

மனிதர்கள் அறியாமையால் செய்யும் செயல்கள், அவனை பல்வேறு வகையான உடல்களை ஏற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துகின்றது

எல்லாப் பக்கங்களிலும் தன்னைச் சுற்றி ஆபத்து சூழ்ந்திருந்த போதிலும் அதனை அறியாது அம்மான் ஓர் அழகிய நந்தவனத்தில் புல்லை மேய்ந்த கொண்டிருந்தது . மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் குடும்பவாழ்க்கையின் நடுவில் தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தான் எண்ணிக் கொண்டிருக்கின்றனர் . ஒரு நந்தவனத்தில் தும்பிகளின் இனிய ஒசையினைக் கேட்டுக் கொண்டு வாழ்வது , குடும்பத்திற்கு எழில்சேர்க்கும் மனைவியுடன் ஒவ்வொருவரும் வாழ்வது போன்றதாகும . தும்பிகளின் இனிய இசை குழந்தைகளின் மழலைமொழியோடு ஒப்பிடக் கூடியது . மானைப் போன்ற மனிதன் தன் முன்னே காலம் என்னும் புவி தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதை அறியாமல் இல்லற வாழ்வில் மகிழ்ந்து கொண்டிருக்கிறான் . உயிர்ப்பொருள்கள் செய்யும் செயல்கள் மற்றொருவகையான ஆபத்தினை உருவாக்கி அவனைப் பல்வேறு வகையான உடல்களை ஏற்றுக் கொள்ளும்படிக் கட்டாயப்படுத்துகின்றது . பாலை வனத்தில் ஒன்றல்ல . சிற்றின்பத்திலும் மானுக்குத் தீராத மோகமுண்டு . இதன் முடிவு என்னவென்றால் மானைப் போல் வாழ்பவன் உரிய காலத்தில் கொல்லப்படுவான் . அதனா...

தமோ குணத்தில் செய்யப்படும் பக்தித்தொண்டு

  அபிஸந்தாய யோ ஹிம்ஸாம் தம்பம் மாத்ஸர்யமேவ வா ஸம்ரம்பீ பிந்நத்ருக் பாவம் மயி குர்யாத்ஸ தாமஸ : மொழிபெயர்ப்பு பொறாமை , தற்பெருமை , வன்முறை மற்றும் கோபம் இவை உள்ள ஒருவரால் நிறைவேற்றப்படும் பக்தித் தொண்டு இருட்டாகிய ( தமோ ) குணத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது . பொருளுரை மிகவுயர்ந்த , மிகவும் புகழ்வாய்ந்த மதம் என்பது காரணம் அற்ற , செயல் நோக்கமற்ற பக்தித் தொண்டைச் செய்தலாகும் என்று ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டம் இரண்டாம் அத்தியாயத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது . தூய பக்தித் தொண்டில் , பரம புருஷ பகவானை மகிழ்விப்பது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் . அது உண்மையில் நோக்கமல்ல ; அது உயிரினத்தின் தூய நிலையாகும் . கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் , ஒருவர் பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது , முழுச் சரணாகதியில் உண்மை ஆன்மீக குருவின் உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும் . ஆன்மீக குருவானவர் பகவானின் பிரத்யட்ச பிரதிநிதி ஆவார் . ஏனெனில் , அவர் சீட மரபால் , பகவானின் உபதேசங்களை உள்ளவாறே தாம் பெறுவார் ; பிறருக்கும் கொடுப்பார...

சிந்தனை, விருப்பம், செயல் , உயர்வு

  சிந்தனை, விருப்பம், செயல் , உயர்வு 💐💐💐💐💐💐💐💐💐 ஏதத் தி ஆதுர-சித்தானாம் மாத்ரா-ஸ்பர்சேச்சயா முஹு: பவ-ஸிந்து-பிலவோ த்ருஷ்டோ ஹரி-சர்யானுவர்ணனம் மொழிபெயர்ப்பு **************** இந்த்ரிய போகங்களை அனுபவிக்க வேண்டுமென்ற இடைறாத ஆசைகளில் மூழ்கியிருப்பவர்களால், பரம புருஷரின் உன்னதமான செயல்களை இடைவிடாமல் பாடுவதன் மூலம் அறியாமை எனும் கடலைக் கடந்துவிட முடியும் என்பதை எனது சொந்த அனுபவத்தினால் நான் உணர்ந்து கொண்டேன். பொருளுரை ************* ஜீவராசியால் சிறிது நேரம்கூட அமைதியாக இருக்க முடியாது. அவன் எதையாவது செய்து கொண்டோ, நினைத்துக் கொண்டோ அல்லது எதைப் பற்றியாவது பேசிக்கொண்டோதான் இருப்பான். பௌதிகவாதிகள் பொதுவாக தங்களது புலன்களை திருப்திப்படுத்தும் விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பார்கள். ஆனால் இவ்விஷயங்கள் மாயா சக்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இவை எவ்வித திருப்தியையும் அளிப்பதில்லை. எனவே அவர்கள் கவலைகளும், ஆவல்களும் நிறைந்தவர்களாக மாறிவிடுகின்றனர். இது மாயா அல்லது பொய்த் தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. திருப்தி அளிக்காத பொருளை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இ...

"அறியாமை" ஓரு காரணமாக ஏற்றுக்கொள்ள படுவதில்லை

  "அறியாமை" ஓரு காரணமாக ஏற்றுக்கொள்ள படுவதில்லை ************************* நாம் அனைவரும் ஜட இயற்கையின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நமது நிலையினை கயிற்றினால் கட்டப்பட்ட குதிரை அல்லது காளையைப் போன்றதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஓட்டுநர் கயிற்றை இழுப்பதற்கு தகுந்தாற்போல அந்த விலங்கு செல்லும். அதற்கு சுதந்திரம் என்பதே கிடையாது. நாம் சுதந்திரமானவர்கள் என்று கருதி, “கடவுள் இல்லை. கட்டுப்படுத்துபவரும் இல்லை. நாம் விரும்பியதைச் செய்யலாம்” என்று கூறுவதெல்லாம் அறியாமையே. அறியாமையினால் நாம் பல பாவ காரியங்களைச் செய்கின்றோம். ஒருவன் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு அறியாமை வழியல்ல என்பதை நடைமுறை அனுபவத்தில் இருந்து நாம் அறிகிறோம். உதாரணமாக, ஒரு குழந்தை நெருப்பைத் தொடும்போது, குழந்தை அறியாமையில் தொடுகிறதே என்று நினைத்து, நெருப்பு குழந்தையைச் சுடாமல் விடுவதில்லை. குழந்தையாக இருந்தாலும் வயதானவராக இருந்தாலும், நெருப்பைத் தொட்டால் கண்டிப்பாகச் சுடும். எந்தவித மன்னிப்பும் கிடையாது. அதைப் போலவே, தெரிந்தோ தெரியாமலோ கடவுளின் சட்டத்திற்கு எதிராகச் செயல்...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more