Skip to main content

Posts

Showing posts with the label Lord Sri Rama / ஶ்ரீ ராமர் (Articles)

பகவான் ஶ்ரீ ராமரின் அவதாரம்

  முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ ராமர் ஒரு மானிட ரூபத்தை ஏற்று பூமியில் அவதரித்தார் . பிரபஞ்ச ஒழுசைகக் காப்பாற்றி , அதன் மூலமாக பிரபஞ்ச ஆட்சிப் பொறுப்பில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காகவே சில அமானுஷ்யமான செயல்களை அவர் புரிந்தார் . சில சமயங்களில் இராவணனையும் , ஹிரண்யகசிபுவையும் போன்ற பெரும் அசுரர்களும் , நாஸ்திகர்களும் மிகவும் பிரபலமடைகின்றனர் . பகவானால் ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குமுறையை எதிர்க்கும் மனோநிலையுடன் , பௌதிக விஞ்ஞானத்தின் உதவியால் அவர்கள் பெறும் பௌதிக முன்னேற்றமே இதற்குக் காரணமாகும் . உதாரணமாக , பௌதிகமான வழிகளின் மூலமாக மற்ற கிரகங்களுக்குச் செல்லும் முயற்சியானது , ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கு முறைக்கு எதிரான ஒரு செயலாகும் . ஒவ்வொரு கிரகத்தின் சூழ்நிலையும் வேறுபட்டதாக உள்ளது . பகவானின் திட்டப்படி வேறுபட்ட பிரிவுகளைச் சேர்ந்த மனிதர்களுக்கு அக்கிரகங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது . ஆனால் , பௌதிக முன்னேற்றத்தின் சிறு வெற்றியால் திமிர் பிடித்தவர்களாக மாறிவிட்ட இறை உணர்வற்ற பௌதிகவாதிகள் சில சமயங்களில் இறைவனே இல்லை என்க...

(ஞானினஸ் தத்வ-தர்சின: தத்துவதர்சிகளால் எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நாம் தேர்ந்தெடுத்துக் படிக்க வேண்டும்.

  அறிஞரென்ற பட்டம் பெற்றிருப்பதால், கல்வியில் முன்னேறியிருப்பதாக காட்டிக் கொள்ளும் நவீன இராட்சஸர்கள், பகவான் ராமச்சந்திரர் பரமபுருஷரல்ல என்றும், அவர் ஒரு சாதாரண மனிதர்தான் என்றும் நிரூபிக்க முயன்றுள்ளனர். ஆனால் கற்றுணர்ந்தவர்களும், ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவர்களும் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; பகவான் ராமச்சந்திரரையும், அவரது செயல்களையும், பரமசத்தியத்தை அறிந்த தத்துவ தரிசிகளால் அளிக்கப்படும் விளக்கங்களுக்கேற்ப மட்டுமே அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். பகவத்கீதையில் (4.34) பகவான் கூறுகிறார்: தத் வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன ஸேவயா உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ-தர்சின: “ஆன்மீக குருவை அடைந்து உண்மையை அறிய முயற்சிசெய். அவருக்குத் தொண்டு செய்து, அவரிடம் அடக்கமாக கேள்வி கேள். தன்னுணர்வு பெற்ற ஆத்மாவான அவர் உண்மையைக் கண்டவராதலால், அவரால் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” ஒருவர் பரம சத்தியத்தைப் பூரணமாக அறிந்த ஒரு தத்துவ தரிசியாக இருந்தால் தான் அவரால் பரமபுருஷரைப் பற்றிய செயல்களை விவரிக்க இயலும். எனவே பல இராமாயண உரைகள் இருந்த போதிலும், அவற்றில் சில அதிகாரப்பூர்வமானவை அ...

ஏகபத்தினி விரதம்

  ஸ்ரீராமன் கடைப்பிடித்த ஏகபத்தினி விரதமும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஜானகி தேவியைத் தவிர வேறு ஒரு மங்கையை மணக்க இராமபிரான் ஒரு போதும் கனவில் கூட நினைத்ததில்லை. சீதாதேவியை வனவாஸத்திற்கு அனுப்பிய பிறகு, வேள்வி செய்ய மனைவி அருகில் இருக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டபோதுகூட சீதா தேவியைப்போல் பொன்னாலான ஒரு உருவை அமைக்கச் செய்து வேள்வியைச் செய்து முடித்தார். அவர் விரும்பியிருந்தால் அந்தச் சமயத்திலாவது வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் உலகத்தில் அவருக்கு இழிசொல் எதுவும் ஏற்பட்டிருக்காது. ஆனால், பகவான் ஸ்ரீராமன் சிறந்த நடத்தைக்கு இலக்கணமாகவும், மாமனிதராகவும் திகழ்ந்தார். பதிவ்ரதா தர்மம் (கற்புநெறி) பெண்களுக்கு விதிக்கப்பட்டிருப்பதுபோல், ஆண்களுக்கும் ஒரு மனைவிக்கொள்கை மிகவும் அவசியம் என்பதைத் தாமே கடைப்பிடித்து உலகிற்குக் காட்டவேண்டி யிருந்தது. ஆண் - பெண் உறவு வெறும் இன்பம் துய்ப்பதற்காக அமைந்தது அன்று. ஆனால், அறவழிப்படி இருவரும் நடப்பதற்காக ஏற்பட்டது அது. அன்னை சீதையை அரக்கன் கவர்ந்து சென்றபின், விவரிக்கும் நிகழ்ச்சிகளிலிருந்து சீதாத...

ஶ்ரீ ராம லிலா ஸ்ரவணம்

  ஶ்ரீ ராம லிலா ஸ்ரவணம் பகவான் ஸ்ரீ ராமர்: பரம புருஷ பகவான் ஸ்ரீ ராமராகத் தோன்றி தமது தூய பக்தரும், அயோத்தியின் அரசருமான தசரத மகாராஜனை தமது தந்தையாக ஏற்றுக் கொண்டார். ஸ்ரீ ராமர் தமது பூரண அம்சங்களுடன் அவதரித்தார். அவரது அம்சங்கள் அனைவரும் அவரது இளைய சகோதரர்களாகத் தோன்றினர். வழக்கம் போல் தர்மத்தைக் காத்து அதர்மத்தை அழிப்பதற்காக, திரேதா யுகத்தின் சித்திரை மாதத்தில், வளர்பிறையின் ஒன்பதாம் நாளன்று பகவான் தோன்றினார். அவர் வாலிபராக இருந்தபொழுது மாமுனிவரான விஸ்வாமித்திரருக்கு உதவும் பொருட்டு சுபாஹு எனும் அரக்கனைக் கொன்றதுடன் முனிவர்களின் அன்றாட கடமைகளுக்கு இடையூறு செய்து வந்த அரக்கியையும் தாக்கினார். பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் ஒத்துழைத்து பொதுமக்களின் நன்மைக்காக செயற்பட வேண்டும். பிராமண முனிவர்கள் பக்குவமான அறிவின் மூலம் மக்களுக்கு ஞானம் புகட்ட முயல்கின்றனர். அத்தகைய முனிவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது க்ஷத்திரியர்களின் கடமையாகும். “ப்ரஹ்மண்ய-தர்மம்” எனப்படும் மனித வர்க்கத்தின் மிகவுயர்ந்த பண்பாட்டைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்ற சீரிய அரசராக பகவான் ஸ்ரீ இராமச்சந்திரர்...