விஷயானபிஸந்தாய யச ஐஸ்வர்யமேவ வா அர்ச்சாதாவர்ச்சயேத்யோ மாம் ப்ருதக்பாவ : ஸ ராஜஸ : மொழிபெயர்ப்பு மாறுபட்ட சிந்தனையாளரால் கோவிலில் , உலக இன்பம் , புகழ் , பொருள் இவற்றுக்கான நோக்கங்களுடன் செய்யப்படும் தெய்வ வழிபாடு ரஜோ குணத்தில் செலுத்தப்படும் பக்தியாகும் . பொருளுரை மாறுபட்ட சிந்தனையாளர் எனும் சொல் கவனமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும் . இந்தத் தொடர்பில் உள்ள வடமொழிச் சொற்கள் பிந்ந — த்ருக் மற்றும் ப்ருதக் — பாவ : ஆகும் . மாறுபட்டவர் என்பவர் தன் ஆசையை பகவானின் ஆசையிலிருந்து பிரித்தும் வேறுபடுத்தியும் பார்ப்பவர் ஆவார் . கலப்பட பக்தர்கள் அல்லது ரஜோ மற்றும் தமோ குணத்தில் உள்ள பக்தர்கள் , பகவானின் ஆசை பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுதலாகும் என்று நினைக்கின்றனர் . அம்மாதிரி பக்தர்களின் ஆசை அவர்களின் புலன் நுகர்ச்சிக்காக பகவானிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெறுவதாகும் . இதுவே மாறுபட்டவனின் மனப்பாங்கு ஆகும் . உண்மையில் முந்தைய அத்தியாயத்தில் தூய பக்தி விளக்கப்பட்டுள்ளது . பகவானின் மனமும் பக்தரின் ...