Skip to main content

Posts

Showing posts with the label Smaranam (Remembrances) / நினைவில் கொள்ளுதல் (Articles)

“கிருஷ்ணனை நினைக்கும் இரு வழிகள் — பக்தியின் வழி, பகையின் வழி.”

  பகவத்கீதையில் (4.10) பகவான் கூறுகிறார்: வீத–ராக–பய–க்ரோதா மன் மயா மாம் உபாஷ்ரிதா: பஹவோ க்ஞான–தபஸா பூதா மத்–பாவம் ஆகதா: “பற்று, பயம், கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, என்னில் முழுமையாக ஆழ்ந்து, என்னிடம் சரணடைந்து, என்னைப் பற்றிய அறிவால் பலர் இதற்கு முன்பு தூய்மையடைந்துள்ளனர். இவ்விதமாக, அவர்களனைவரும் என்னிடம் உன்னத பிரேமையுடைவராயினர்.” இரு வழிகளில் கிருஷ்ணரை இடையறாது நினைக்க முடியும். ஒன்று, ஒரு பக்தனாக மற்றது, ஒரு பகைவனாக. ஒரு பக்தன் அவனுடைய அறிவினாலும், தவத்தினாலும், பயம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டு ஒரு தூய பக்தனாகிறான். அவ்வாறே ஓர் எதிரியும் கிருஷ்ணரைப் பற்றிய பகை உணர்ச்சியுடன் நினைத்த போதிலும், அவரையே இடையறாது நினைத்துத் தூய்மையடைகிறான். இது பகவத் கீதையில் (9.30) பகவானால் பின்வருமாறு உறுதி செய்யப்படுகிறது: அபி சேத் சதுராசாரோ பஜந்தே மாம் அனன்ய - பாக் ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ: “ஒருவன் மிகவும் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பானாயின், அவனைப் புனிதமானவனாகவே கருத வேண்டும். ஏனெனில் அவன் தக்க முறையில் நிலைபெற்றுள்ளான...

பக்குவமான கிருஷ்ண உணர்வு

  சேதஸா ஸர்வ – கர்மாணி மயி ஸன்ன்யஸ்ய மத் – பர : பு த் தி – யோக ம் உபாஷ் ரித்ய மச் – சித்த : ஸததம் ப வ மொழிபெயர்ப்பு எல்லாச் செயல்களிலும் என்னையே சார்ந்து , எனது பாதுகாப்பின் கீழ் எப்போதும் செயல்படுவாயாக . இத்தகு பக்தித் தொண்டில் என்னைப் பற்றிய உணர்வில் ஆழ்ந்துவிடு . பொருளுரை :  கிருஷ்ண உணர்வில் செயல்படுபவன் , உலகின் எஜமான னைப் போன்று செயல்படுவதில்லை . அவன் ஒரு சேவகனைப் போன்று , பரம புருஷரின் முழுமையான வழிகாட்டுதலின் கீழ் செயல்பட வேண்டும் . சேவகனுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் ஏதும் கிடையாது . அவன் எஜமானரின் கட்டளைப்படி மட்டுமே செயல்படுகின்றான் . உன்னத எஜமானருக்காகத் தொண்டு செய்யும் சேவகன் , இலாப நஷ்டங்களினால் பாதிக்கப்படுவ தில்லை . அவன் தனது கடமையை பகவானது கட்டளையின்படி நம்பிக்கை யுடன் நிறைவேற்றுகிறான் . அர்ஜுனன் கிருஷ்ணருடைய சொந்த வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்தான் , ஆனால் கிருஷ்ணர் இல்லாதபோது ஒருவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தற்போது விவாதிக்கலாம் . இந்தப் புத்தகத்தில் கிருஷ்ணரால் ...