Skip to main content

Posts

Showing posts with the label Srimad Bhagavad Gita / ஶ்ரீமத் பகவத் கீதை ( Articles)

கீதாசாரம்

மத்–கர்ம–க்ரூன் மத்–பரமோ மத் 3 –ப 4 க்த: ஸங்க 3 –வர்ஜித: நிர்வைர: ஸர்வ–பூ 4 தேஷு ய: ஸ மாம் ஏதி பாண்ட 3 வ மொழிபெயர்ப்பு எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக் கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துள்ளானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான். பொருளுரை:  பகவானின் எல்லா ரூபங்களிலும் உயர்ந்தவராக விளங்கும் கிருஷ்ணரை ஆன்மீக வானிலுள்ள கிருஷ்ண லோகத்தில் அணுகுவதற்கும், அந்த உத்தம புருஷருடன் நெருக்கமான உறவு கொள்வதற்கும் எவரேனும் விரும்பினால், அந்த பரமனாலேயே இங்கே கூறப்பட்டுள்ள வழிமுறையை ஏற்றுக்கொள்வது அவசியம். எனவே, இப்பதம் பகவத் கீதையின் ஸாரமாகக் கருதப்படுகின்றது. உண்மையான வாழ்க்கையான ஆன்மீக வாழ்வைப் பற்றி அறியாமல், இயற்கையை ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு ஜடவுலகில் ஈடுபட்டுள்ள கட்டுண்ட ஆத்மாக்களுக்கான நூல் பகவத் கீதை. ஆன்மீக மான பரம புருஷருடனான நித்திய உறவைப் பற்றியும், ஆன்மீக இருப்பைப் பற்...

பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு நாகரீகமாகிவிட்டது.

  பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணர் நேரடியாகத் தோன்றி, மனித சமூகத்தின் நன்மைக்காக அவரது உபதேசங்களை விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரை ஒரு சாதாரண மனிதனென்று நினைக்கும் மூடர்களும், அயோக்கியர்களும், தங்களது புலன் திருப்திக்காக பகவத்கீதையின் உபதேசங்களைத் திரித்துக் கூறுகின்றனர். பகவத்கீதைதயை ஏதோ ஒரு கட்டுக்கதையாகப் பாவித்து அதைத் திரித்துக் கூறுவது இன்றைய புலவர்களுக்கும், அரதியல்வாதிகளுக்கும் ஒரு  நாகரீக மாகிவிட்டது இத்தகைய தப்பான கருத்துரைக்களால், தங்களுடைய வாழ்வை மட் டுமல்லாமல், பிறருடைய வாழ்வையும் இவர்கள் நாசமாக்கிவிடுகின்றனர். ஆனால் கிருஷ்ணர் உண்மையானவர் அல்ல, குருட்சேத்திர யுத்தமும் உண்மையல்ல மற்றும் பகவத்கீதையிலுள்ள விஷயங்களும் உண்மையல்ல என்ற இந்த எதிர் வாதத்தை கிருஷ்ணபக்தி இயக்கம் எதிர்த்து வருகிறது. விஷயம என்னவாக இருப்பினும், வாழ்வில் வெற்றிபெற விரும்புபவர், பகவத்கீதை உண்மையுருவில் என்ற நூலைப் படிப்பதால் அதை அடைய முடியும். குறிப்பாக ஸ்ரீ சைதன்ய மகாபிரபு பகவத்கீதையின் உபதேசங்களை வலியுறுத்தியுள்ளார்; யாரே தேக, தாரே கஹ, ‘கிருஷ்ண’ -உபதேச. வாழ்வில் மிகவுயர்ந்த...

பகவத் கீதையின் ஐந்து விஷயங்கள்

  பகவத் கீதையினால் தன்னுணர்வு பெற முடியும் என்றால், அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் யாவை? என்னும் கேள்வி இயற்கையாக எழலாம். பகவத் கீதை, ஐந்து அடிப்படை உண்மைகளைத் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்குகின்றது: 1) எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இறைவன் (ஈஸ்வரன்), 2) உயிர்வாழிகள் (ஜீவன்), 3) ஜட இயற்கை (பிரக்ருதி), 4) ஜட இயற்கை தோன்றி மறைவதைக் குறிக்கும் காலம் (காலம்), 5) ஜீவன்களின் செயல் (கர்மா). ஈஸ்வரன் 💐💐💐💐💐💐 எல்லோரையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் இவர், கிருஷ்ணர், பரமாத்மா, அல்லது பிரம்மன் என்று அறியப்படுகிறார். ஜீவன்களும் ஜட இயற்கையும் இவருக்குக் கீழ்படிந்த சக்திகளே. இவரது ஆணையின் கீழ்தான் ஜட இயற்கை செயல்படுகிறது. இயற்கைக்குப் பின்னால் இறைவன் இருப்பதை அறியாதவர்கள், மோட்டார் வாகனத்திற்குப் பின்னால் ஓட்டுநர் இருப்பதை அறியாத குழந்தையைப் போன்றவர்கள். அந்த இறைவன் முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரே, பரம்பொருளை அருவப் பிரம்மனாக அல்லது பரமாத்மாவாக உணர்வதைக் காட்டிலும் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணராக உணர்தலே சிறந்தது. குன்றிய அறிவுடையவர்களே பரம் பொருள் அருவமானது என்று கருது கின்றனர். ஜட ...

ஶ்ரீமத் பகவத்கீதையின் வரலாறு

  ஶ்ரீமத் பகவத்கீதையின் வரலாறு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 ஸ்ரீ-பகவான் உவாச இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் அஹம் அவ்யயம் விவஸ்வான் மனவே ப்ராஹ மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத் மொழிபெயர்ப்பு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 புருஷோத்தமரான முழு முதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரிய தேவனான விவஸ்]வானுக்கு உபதேசித்தேன். விவஸ்]வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர். பொருளுரை 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 பகவத் கீதை, சூரிய கிரகத்திலிருந்து தொடங்கி, அனைத்து கிரகங்களின் மன்னர்களுக்கும் பன்நெடுஞ்காலத்திற்கு முன்பே உபதேசிக்கப்பட்டது என்ற சரித்திரத்தை இங்கு நாம் காண்கிறோம். எல்லா கிரகங்களின் மன்னர்களும் குடிமக்களைக் காக்க வேண்டியவர்கள்; எனவே, மக்களை ஆள்வதற்காகவும் அவர்களை காமம் என்னும் பௌதிக பந்தத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், அரசு குலத்தோர் அனைவரும் பகவத் கீதையின் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வது அவசியம். முழுமுதற் கடவுளுடன் நித்திய உறவை வளர்க்கக் கூடிய ஆன்மீக ஞானத்தைப் பயில்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும். மேலும், எல்லா கிரகங்களிலும் எல்லா ந...

கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும்.

  கிருஷ்ணருடைய உன்னத நிலையை முழுமையாக அறிந்தவர் மட்டுமே. எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும். யோ மாம் அஜம் அனாதிம் ச வேத்தி லோக-மஹேஷ்வரம் அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வ–பாபை: ப்ரமுச்யதே மொழிபெயர்ப்பு ************************ எவனொருவன், என்னைப் பிறப்பற்றவனாகவும், ஆரம்பம் அற்றவனாகவும், எல்லா உலகங்களின் இறைவனாகவும் அறிகின்றானோ, மனிதர்களிடையே குழப்பமற்றவனாக அவன் மட்டுமே, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுகிறான். பொருளுரை *************** ஏழாம் அத்தியாயத்தில்(7.3) கூறப்பட்டுள்ளபடி, மனுஷ்யாணாம் ஸஹஸரேஷூ கஷ்சித் யததி ஸித்தயே-ஆன்மீக உணர்வின் தளத்திற்குத் தம்மை உயர்த்திக் கொள்ள முயல்பவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஆன்ம உணர்வினைப் பற்றிய சற்றும் அறிவற்ற கோடிக்கணக்கான சாதாரண மனிதர்களைவிட அவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். ஆனால் தமது ஆன்மீக நிலையைப் புரிந்து கொள்ள உண்மையிலேயே முயற்சி செய்யும் அத்தகு சிறந்த மனிதர்களில், கிருஷ்ணரே பரம புருஷ பகவான், அவரே எல்லாவற்றின் உரிமையாளர், அவர் பிறப்பற்றவர் என்னும்அறிவு நிலையை வந்தடைபவனே ஆன்மீக உணர்வை அடைந்தவர்களில் மிகவும் வெற்றி பெற்றவனாவான். க...