Skip to main content

Posts

ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம்

  ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம் வழங்கியவர் :- பில்வமங்கள டாகுர்   பதம் 1 வ்ரஜே ப்ரசித்தம் நவநீத சோரம் கோபாங்கனானாம் ச துகூல சௌரம் அனேக ஜன்மார்ஜித பாப சௌரம் சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி மொழிபெயர்ப்பு விருந்தாவனத்தில் வெண்ணை திருடுவதில் பிரசித்தி பெற்றவரும் ,   கோபியர்களின் ஆடைகளை திருடியவரும் , தன்னிடம் சரணடைந்த   பக்தர்களின் பல கோடி வருடங்களாக சேர்த்து வைத்திருந்த பாவங்களைத் திருடுபவரும் ,   திருடர்களில் எல்லாம் முதன்மையான திருடனுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன் .   பதம் 2 ஸ்ரீராதிகாயா ஹ்ருதயஸ்ய சௌரம் நவாம்புத ஷ்யாமல காந்தி சௌரம் பதாஸ்ரீதானாம் ச சமஸ்த சௌரம் சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி   மொழிபெயர்ப்பு ஸ்ரீமதி ராதாராணியின் இதயத்தைத் திருடியவரும் ,   புத்தம் புதிய இருண்ட மழை மேகத்தின் காந்தியைத் திருடியவரும் ,   தமது தாமரைப் பாதத்தில் சரண் அடைந்தவர்களின் பாவங்களையும் துன்பங்களையும் திருடும் திருடர்கள் ...