Skip to main content

Posts

Showing posts with the label Anger / கோபம் (Articles)

ஆன்மீகப் பயணம்: கோபத்தால் வீழ்ச்சி அடைவதைத் தடுப்பது எப்படி?

  க்ரோதா த்  ப வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி–விப் ரம: ஸ்ம்ருதி–ப் ரம்ஷா த்  பு த் தி –நாஷோ  பு த் தி –நாஷா த் ப்ரணஷ் யதி கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நினைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான். பொருளுரை:  ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு நமக்கு வழிகாட்டி யுள்ளார்: ப்ராபஞ்சிகதயா பு த் த் யா ஹரி–ஸம்ப ந்தி –வஸ்துன: முமுக்ஷுபி:  பரித்யாகோ  வைராக் யம் ப ல்கு  கத் யதே (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.258) கிருஷ்ண உணர்வை விருத்தி செய்தவன், அனைத்துப் பொருள்களையும் இறைவனின் சேவையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை அறிவான். கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், ஜடப் பொருள்களை தவிர்ப்பதற்கு செயற்கையாக முயற்சி செய்கின்றனர்; அதன் விளைவாக, பௌதிக பந்தத்திலிருந்து அவர்கள் முக்தி பெற விரும்பினாலும், துறவின் பக்குவநிலையை அவர்கள் அடையவில்லை. அதே சமயம், கிருஷ்ண உணர்விலுள்ள பக்தன், எல்லாப் பொருள்களையும் இறைவனின் தொண்டில் எப்படி உபயோகப்படுத்துவது என...

கோபம்

  த்ரி–வித ம் நரகஸ்யேத ம் த் வாரம் நாஷ னம் ஆத்மன: காம: க்ரோத ஸ் ததா  லோப ஸ் தஸ்மாத்  ஏதத் த்ரயம் த்யஜேத் காமம், கோபம், பேராசை ஆகியவை நரகத்திற்குக் கொண்டுச் செல்லும் மூன்று கதவுகளாகும். இவை ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்துவதால், ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் இவற்றைத் துறக்க வேண்டும். பொருளுரை: அசுரத்தனமான வாழ்வின் ஆரம்பம் இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. தனது காமத்தைத் திருப்தி செய்ய ஒருவன் முயல்கின்றான், அவனால் அது முடியாதபோது, கோபமும் பேராசையும் எழுகின்றன. அசுரத்தனமான உயிரினங்களுக்கு வீழ்ச்சியடைய விரும்பாத அறிவுள்ள மனிதன், இந்த மூன்று விரோதிகளையும் துறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும், இவை இந்த பௌதிக பந்தத்திலிருந்து முக்தி பெறுவதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லாதபடி ஆத்மாவைக் கொல்லக்கூடியவை. நரகத்திற்கான மூன்று வாசல்கள் (த்ரி-விதம் நரகஸ்ய த்வாரம்) பகவத் கீதை 16.21-இன் படி, ஒரு மனிதனின் ஆத்மாவை அழிவுப் பாதையில் நடத்தி, நரகத்திற்கு இட்டுச் செல்லும் மூன்று முக்கிய வாயில்கள்: 🔥 காமம்: அத்தியாவசியமற்ற ஆசைகள் மற்றும் புலனின்பங்களை திருப்தி செய்ய ஏங்குவது. 😠 க்ரோதம் : காமம் நிறைவேறா...

கோபத்தை கையாலும் முறை

  துருவ மன்னர் ஒர் முக்தியடைந்த ஆத்மா, ஆதலின் அவர் யாரிடத்தும் சினங்கொள்வதில்லை. ஆயினும் அவர் ஒர்நாட்டை ஆளும் மன்னராதலின் சட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவர் சில நேரம் ஆத்திரமடைவது அவரது கடமையாகிறது. எந்தவிதக் குற்றமும் செய்யாத அவர் சகோதரன் உத்தமன் ஓர் யக்ஷனால் கொல்லப்பட்டான். அதனால் அக்குற்றவாளியைக் கொல்வது (உயிருக்குப்பதில் உயிர்) துருவரின் கடமையாகிறது. ஏனெனில் அவர் ஓர் அரசர். போட்டி என்று வந்தவுடன் துருவ மன்னர் தீவிரமாகப் போராடி யக்ஷர்களைப் போதுமான அளவிற்குத் தண்டித்தார். ஆனால் சினமானது நாம் அதிகப்படுத்தினால் அது அளவின்றி அதிகமாகும் தன்மை உடையதாகும். துருவரின் ஆத்திரம் கரை மீறாத வண்ணம் அவர் தாத்தா மனுவினால் அன்புடன் அமைதிப்படுத்தப்பட்டார். துருவரும் தனது தாத்தாவின் எண்ணம் என்ன என்பதைப்புரிந்து கொண்டதினால் போரை உடனே நிறுத்தினார். சுலோகத்திலுள்ள "ஸ்ருதேன பூயஸா" அதாவது "தொடர்ந்து கேட்பதினால்" என்றும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். பக்தித் தொண்டைப் பற்றித் தொடர்ந்து கேட்பதின் மூலம் பக்தித் தொண்டிற்குத் தீங்கிழைக்கும் ஆத்திரத்தினை அடக்குதல் கூடும். ஸ்ரீல பரீக...