Skip to main content

Posts

Showing posts with the label Mind / மனம் (Articles)

மனதைக் கட்டுப்படுத்த எளிய வழி: மூச்சுப் பயிற்சியா அல்லது ஶ்ரீ கிருஷ்ண நாம ஜபமா?

ப்ராணஸ்ய சோதயேந்மார்கம் பூரகும்பகரேசகை:  ப்ரதிகூலேன வா சித்தம் யதா ஸ்திரமசஞ்சலம் மொழிபெயர்ப்பு யோகி பின்வரும் முறையில் சுவாசித்து உயிர் நிலைக் காற்றின் வழியைச் சுத்தமாக்க வேண்டும். முதலில் அவர் மிக ஆழ்ந்து உள்ளிழுக்க வேண்டும், பின்னர் மூச்சைத் தக்க வைக்க வேண்டும், இறுதியாக வெளிவிட வேண்டும். அல்லது அந்த முறையை நேர்மாறாக்கலாம், யோகி முதலில் வெளிவிட்டு, பின்னர் மூச்சை வெளியில் தக்க வைத்து, இறுதியாக உள்ளிழுக்க முடியும். இவ்வாறு செய்யப்படும் போது மனம் உறுதி கொண்டு, வெளிப்புறத் தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது. பொருளுரை இத்தகைய சுவாசிக்கும் பயிற்சிகள் மனதைக் கட்டுப்படுத்தவும் அதைப் பரம புருஷ பகவான் மேல் ஈடுபடுத்தவும் செய்யப்படுகின்றன. ஸ வை மன: க்ருஷ்ண பதாரவிந்தயோ: பக்தராகிய அம்பரீஷ மஹாராஜா தன் மனதை ஒரு நாளின் 24 மணி நேரமும் கிருஷ்ணரின் பாத கமலங்களில் ஈடுபடுத்தி இருந்தார். கிருஷ்ண உணர்வு முறை என்பது ஹரே கிருஷ்ண என்பதை உச்சரிப்பதும் கவனமாக அந்த ஒலியைக் கேட்பதுமாகும். இதனால் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதாகக் கூறமுடியாத கிருஷ்ணருடைய பெயரினை உச்சரிக்கும் ஒலி அதிர்வின் மீது நம் மனமானது நிறுத்தப்ப...

மனம் என்பது நமது முந்தைய பிறவிகளின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் பாதுகாத்து வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கு

  கனவுகளில் நாம் சில நேரம் காண்பவை நாம் இதற்கு முன்பு அறியாத ஒரு செய்தியாக இருக்கும். சிலநேரங்களில் கனவில் நாம் வானில் பறப்பதுபோல் இருக்கம். ஆயினும் இதற்கு முன்பு நாம் பறந்ததில்லை. நமது முற்பிறவியில் நாம் தேவனாகவோ அல்லது விண்வெளி வீரனாகவோ வாழ்ந்து வானில் பறந்திருக்கிறோம் என்பதே இதன் உட்பொருள். நமது அடிமனதில் இந்த எண்ணம் புதைந்திருக்கிறது. அதனால் அது திடீரென்று தன்னை வெளிப்படுத்துக் கொள்கிறது. இது ஆழத்திலுள்ள நீர் கொந்தளித்து மேற்பகுதிக்கு வந்து நீர்க்குமிழிகளாகத் தோன்றுவதற்கு ஒப்பாகும். சிலநேரங்களில் நாம் கனவில முற்றிலும் புதிய இடங்களுக்கெல்லாம் செல்வதுபோல் காண்கிறோம், நமது முற்பிறப்பின் அநுபவத்திற்கு இதுவே சிறந்த சான்றாகும். இந்த எண்ணம் நமது அடிமனதில் பாதுகாக்கப்படுகிறது. இதுவே நமது கனவில் அல்லது சிந்தனையில் வெளிப்படுகிறது இதனால் மனம் என்பது நமது முந்தைய பிறவிகளின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் பாதுகாத்து வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கு எனலாம். இவ்வாறு நமது முற்பிறப்பிற்கும் இப்பிறப்பிற்கும் இடையிலும், இப்பிறப்பு மற்றும் அடுத்த பிறப்பிற்கும் இடையிலும் ஒரு சங்கிலித் தொடர் இருந்து...

மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய், அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது எனவே . . .

ப்ராருத்வ்யம் ஏனம் தத் அதப்ர - வீர்யம் உபேக்ஷயாத்யேதிதம் அப்ரமத்த குரோர் ஹரேஸ் சரணோபா ஸனாஸ்த்ரோ ஜஹி வ்யவீகம் ஸ்வயம் ஆத்ம - மோஷம் மொழிபெயர்ப்பு அடக்க முடியாத இந்த மனமே உயிர் வாழியின் ஆற்றல் மிகுந்த பகைவனாவான் . ஒருவன் இதனைப் புறக்கணித்தாலோ அல்லது இதற்குச் சந்தர்ப்பம் அளித்தாலோ , இது மேலும் மேலும் வளர்ந்து வெற்றி பெறும் நிலையினை எய்துகிறது . உண்மையன்று என்ற போதிலும் இது மிகவும் வலிவுடையதாகும் . இது ஆத்மாவின் சட்டபூர்வ நிலையினை மறைத்திருக்கிறது . ஒ , மன்னனே ! ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்வது என்னும் ஆயுதத்தினால் இம் மனத்தை மிகுந்த கவனமுடன் வெற்றி கொள்ள முயல்வாயாக . இதனைச் செய்வாயாக . பொருளுரை மனிதனை வெல்லவோ புறக்கணிக்கவோ ஒரே ஒரு எளிமையான கருவிதான் இருக்கிறது . மனம் எப்போதும் நம்மிடம் இதைச் செய் , அதைச் செய் என்று கூறிக்கொண்டிருக்கிறது . எனவே மனதின் கட்டளைகளுக்குப் பணியாதிருக்க நாம் மிக்க தேர்ச்சி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் . படிப்படியாக மனம் ஆத...