ஒரு சாதுவின் இரண்டாம் நிலைப் பண்புகள் திதிக்ஷவ : காருணிகா : ஸுஹ்ருத : ஸர்வ தேஹினாம் அஜாதசத்ரவ : சாந்தா : ஸாதவ : ஸாது பூஷணா : மொழிபெயர்ப்பு ஸாதுவின் அடையாளங்கள் என்னவென்றால் , அவர் எல்லா வாழும் உயிரினங்களிடம் கொள்ளும் சகிப்புத் தன்மை , கருணை , தோழமை ஆகும் . அவருக்கு எதிரிகள் இல்லை , அவர் அமைதியானவர் , புனித நூல்களைப் பின்பற்றுபவர் . அவரின் எல்லா தனிப் பண்புகளும் விழுமியவை . பொருளுரை மேலே வர்ணிக்கப்பட்டதுபோல , ஸாது என்பவர் பகவானின் பக்தராவார் . அதனால் , அவருடைய அக்கறை பகவானிடம் பக்தித் தொண்டு செய்வது பற்றிய அறிவொளியை மக்களிடம் ஏற்படுத்துவதே ஆகும் . அதுவே அவர் கருணையாகும் . பகவானுக்குப் பக்தித் தொண்டு புரியாத மனித வாழ்வு பாழ் என்று அவர் அறிவார் . ஒரு பக்தர் நாடு முழுவதும் பயணம் செய்து , வீடு வீடாகச் சென்று , “ கிருஷ்ண உணர்வு கொள் , பகவான் கிருஷ்ணரின் பக்தராக இருங்கள் . உங்கள் மிருக மனப்பாங்கை நிறைவு செய்வதால் உங்கள் வாழ்வைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள் . மனித வாழ்வு என்பது தன்னை உணர்தலுக்காக அல்லது கிருஷ்ண உணர்வு ...