Skip to main content

Posts

Showing posts with the label Guru / குரு (Articles)

கல்லாலான ஒரு படகு

  தேஷாம் குபத - தேஷ்ட்ரூணாம் பததாம் தமஸி ஹி அத: யே ஸ்ரத்தத்யுர் வசஸ் வை மஜ்ஜந்தி அஸ்ம-ப்லவா இவ மொழிபெயர்ப்பு (முந்திய சுலோகத்தில் விவரிக்கப்பட்டதுபோல்) அறியாமையில் விழுந்துவிட்டவர்களும், மக்களை அழிவுப் பாதையில் தவறாக வழிநடத்திச் செல்பவர்களுமான தலைவர்களும், குருட்டுத்தனமாக அவர்களைப் பின்பற்றுபவர்களும், உண்மையில் கல்லினால் செய்யப்பட்ட ஒரு படகில் ஏறிக் கொள்பவர்களைப் போன்றவர்களாவர். கல்லாலான ஒரு படகு மிதக்க முடியாமல் அதிலுள்ள பயணிகளுடன் நீரில் மூழ்கிவிடும். அதுபோலவே, மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வோரும் நரகத்திற்கே செல்வார்கள். பொருளுரை ஸ்ரீமத் பாகவதம் (11.20.17) பின்வருமாறு குறிப்பிடுகிறது: ந்ரு-தேஹம் ஆத்யம் ஸுலபம் ஸுதுர்லபம் ப்லவம் ஸுகல்பம் குரு-கர்ண-தாரம் பந்தப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் அறியாமை எனும் கடலில் விழுந்துவிட்டோம். ஆயினும் ஒரு சிறந்த படகைப் போன்றுள்ள இந்த மனித உடலானது, அறியாமை எனும் இக்கடலைக் கடப்பதற்குச் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது, கப்பல் தலைவனைப்போல் செயற்படும் ஓர் ஆன்மீக குருவினால் வழிநடத்தப்படு...

நாரத முனிவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி ஹரி நாம சங்கீர்த்தனம்

  ஸ்வர - ப்ரஹ்மணி நிர்பாத - ஹ்ரிஷீகேச - பதாம்புஜே அகண்டம் சித்தம் ஆவேஸ்ய லோகான் அனுசரன் முனி: மொழிபெயர்ப்பு இசையின் ஏழு சப்த ஸ்வரங்களான ஸ,ரி,க,ம,ப,த,நி என்பவை இசைக் கருவிகளில் உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் சாம வேதத்திலிருந்து தான் முதன்முதலாக அவை வந்தன. மாமுனிவரான நாரதர் பரமபுருஷரின் லீலைகளை விவரித்து சப்தங்களை எழுப்புகிறார். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே / ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்பது போன்ற திவ்யமான ஓசைகளின் மூலமாக, அவர் தமது மனதை பகவானின் தாமரைப் பாதங்களில் பதியச் செய்கிறார். இவ்விதமாக அவர் புலன்களின் நாயகரான ரிஷிகேசரை நேருக்கு நேராக தரிசிக்கிறார். ஹர்யஸ்வர்களைக் கடைத்தேற்றிய பிறகு, நாரத முனிவர், பகவானின் தாமரைப் பாதங்களில் எப்பொழுதும் மனதைப் பதித்தவராய், எல்லாக் கிரக அமைப்புக்களிலும் தொடர்ந்து சஞ்சரிக்கலானார். பொருளுரை மாமுனிவரான நாரதரின் மகிமை இங்கு விவரிக்கப்படுகிறது. அவர் பகவானின் லீலைகளைப் பற்றி எப்பொழுதும் பாடியபடி, இழிவடைந்த ஆத்மாக்களை மீட்டு பரமபுருஷரிடம் கொண்டு சேர்க்கிறார். இது தொடர்பாக, ஸ்ரீல பக்தி விநோத தாகுரர் பின்வருமாறு பாடியுள்ள...

அங்கீகரிக்கப்பட்ட குரு சீட பரம்பரை மூலம் வரும் நான்கு சம்பிரதாயங்களின் முக்கியத்துவம்

  பாகவத தர்மம், மிகவும் இரகசியமான சமயக் கோட்பாடாகும் (ஸர்வ - குஹ்யதமம், குஹ்யாத், குஹ்யதரம்) என்று பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், “நீ எனக்குப் பிரிய நண்பன் என்பதால், மிகவும் இரகசியமான சமயத்தை உனக்கு நான் விளக்கிக் கொண்டிருக்கிறேன்.” ஸர்வ - தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ: மற்றெல்லாக் கடமைகளையும் விட்டுவிட்டு என்னிடம் சரணடைவாயாக.” இக்கோட்பாட்டைப் புரிந்து கொள்வது மிகவும் அரிது என்றால், இதனால் என்ன பயன்? என்று ஒருவர் கேட்கக் கூடும். இதற்கு யமராஜன் பின்வருமாறு பதிலளித்தார். பிரம்ம தேவர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள் முதலானவர்களின் பரம்பரா முறையைப் பின்பற்றுபவனால் இந்த சமயக் கோட்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். நான்கு சீடப் பரம்பரைகள் உள்ளன: ஒன்று பிரம்ம தேவரிலிருந்து வருகிறது, இரண்டாவது சிவபெருமானிலிருந்து வருகிறது, மூன்றாவது லக்ஷ்மி தேவியிலிருந்து வருகிறது, நான்காவது குமாரர்களிடமிருந்து வருகிறது. பிரம்ம தேவரிலிருந்து வரும் சீடப்பரம்பரை பிரம்ம - சம்பிரதாயம் என்றும், சிவ பெருமானிலிருந்து வருவது ருத்ர - சம்பிரதாய...

குரு என்பவர் யார்?

குரு என்பவர் யார்? 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 தண்ணீரைத் தொடாமல் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது; குரு இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. அத்தகு குருவின் தன்மைகளைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம். ஓம் அக்ஞான-திமிராந்தஸ்ய  ஜ்ஞானாஞ்ஜன - ஷலாகயா சக்ஷுர் உன்மீலிதம் யேன  தஸ்மை ஸ்ரீ-குரவே நம: “நான் அறியாமையின் இருளில் பிறந்தவன், எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.” இந்த ஸ்லோகம், நம்முடைய அறியாமையை நீக்கி உண்மையான ஞானத்தை விருத்தி செய்ய உதவுபவர் ஆன்மீக குரு என்று விளக்குகின்றது. ஆன்மீக குருவின் மூலமாகநாம் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடைய முடியும். ஆன்மீக ஞானத்தை அடைவதற்கு குருவிடம் சரணடைய வேண்டும் என்பது ஸ்ரீமத் பாகவதத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஷ்ரேய உத்தமம் (11.3.21), அதாவது பரம சத்தியத்தைப் பற்றிய திவ்ய ஞானத்தை அறிய விரும்புபவர் ஆன்மீக குருவை அணுக வேண்டும். ஆன்மீக குரு புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் ஆன்மீக குருவின் தகுதிகளை ஸ்ரீல ரூப கோஸ்வாமி தன்னுடைய உபதேசாமிருதம் என்னும் நூலின் முதல் ...

குரு என்றால் என்ன?

  நிருபர்: ஆனால் ஓர் உண்மையான குரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்வதையோ, சொகுசு ஓட்டலில் ஆடம்பரமான அறையில் தங்குவதையோ எவ்வாறு புரிந்துகொள்வது? ஸ்ரீல பிரபுபாதர்: சில வேளைகளில் முதல் தரமான ஓட்டலில் மக்கள் எங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்; ஆனால் பொதுவாக நாங்கள் எங்கள் கோயில்களிலேயே தங்குவது வழக்கம். உலகம் முழுவதும் எங்களுக்கு சுமார் நூறு கோயில்கள் உள்ளன. எனவே, எந்த ஓட்டலுக்கும் செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நிருபர்: நான் உங்களைக் குற்றம் சொல்ல விரும்பவில்லை. உதாரணத்திற்காகத்தான் கூறினேன். உங்களுடைய எச்சரிக்கை மதிப்பு மிக்கதாகும். ஆன்மீக வாழ்வை தேடுவதில் ஆர்வமுடையவர்கள் பலர் உள்ளனர், அதே வேளையில், குரு வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளவர்களும் பலர் உள்ளனர். ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் ஆன்மீக வாழ்க்கை என்ன என்பதை அறியாமல் இருப்பதே இதற்கு காரணமாகும். ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்? நிருபர்: நல்ல கேள்வி, எனக்கு சரியாகத் தெரியாது. ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறியாதபோதிலும், நீங்கள் ‘...