Skip to main content

Posts

Showing posts with the label Madhavan Maanbugal / மாதவன் மாண்புகள் (articles)

அதீந்திரியன் / மாதவன் மாண்புகள் (பகுதி 2)

  மாதவன் மாண்புகள் (பகுதி 2) அதீந்திரியன் ஜடப்புலன்களுக்கு அப்பாற்பட்டவன் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 நமோ குண - ப்ரதீபாய குணாத்மச் - சாதனாய ச   குண - வ்ருத்தி - உபவக்ஷ்யாய குண - த்ரஷ்ட்ரே ஸ்வ - ஸம்விதே மொழிபெயர்ப்பு பல்வேறு வகையான பௌதீக மற்றும் ஆன்மீக குணங்களை வெளிப்படுத்தும் ஓ பகவானே ! உமக்கு எமது வந்தனங்கள் . நீர் உம்மைப் பௌதீகக் குணங்களினுள் மறைத்துக் கொள்கின்றீர் ; இருந்தும் அதே குணங்களின் செயல்பாடானது இறுதியில் உமது இருப்பினை அறிவிக்கின்றது . அத்தகு குணங்களுக்கு அப்பால் ஒரு சாட்சியாக நீர் நிற்கின்றீர் . மேலும் நீர் உமது பக்தர்களால் மட்டுமே முற்றிலும் அறியக்கூடியவராக இருக்கின்றீர் . பொருளுரை ' குண ' என்னும் சொல் , ஜட இயற்கையின் அடிப்படைக் குணங்களான சத்துவ , ரஜோ , தமோ குணங்களையும் , புண்ணியச் செயல்கள் மற்றும் ஆன்மீகப் பேற்றின் காரணமாக ஒருவன் வெளிப்படுத்தும் மேன்மைக் குணங்களையும் , அதுபோல் அகப்புலன்களான மனம் , புத்தி என்பன போன்ற பல்வேறு குணங்களைக் குறிப்பிடுகின்றது . ' ப்ரதீபாய ' என்னும் சொல...

ஸர்வஜ்ஞன் / மாதவன் மாண்புகள் (பகுதி 1)

மாதவன் மாண்புகள் (பகுதி 1) ஸர்வஜ்ஞன் ஶ்ரீ கிருஷ்ணர் அனைத்தையும் அறியும் பேராற்றல் கொண்டவர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 நமஸ் தஸ்மை பகவதே க்ருஷ்ணாயாகுண்ட- மேதஸே  ஸ்வ-யோகமாயயாச்சன்ன-மஹிம்னே பரமாத்மனே மொழிபெயர்ப்பு பரமபுருஷரும், எல்லையற்ற அறிவு படைத்த பரமாத்மாவும், தமது யோக-மாயையால் தமது மகிமையை மறைத்துக் கொண்டுள்ளவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நமது பணிவான வணக்கங்கள். பொருளுரை பரமபுருஷரை வழிபடுவதால் அடையப்போகும் எதிர்கால இலாபம் ஒருபுறமிருக்க, தான் பகவானின் ஆதரவில் இருப்பதையும், தான் அவரது அடிமை என்பதையும் ஏற்றுக்கொள்ள்ளும் வகையில், ஒவ்வொருவரும் பகவானை வணங்க வேண்டியது மிகவும் முக்கியமான கடமையாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு சிபாரிசு செய்கிறார்: மன்-மனா பவ மத்-பக்தோ யத்-யாஜீ மாம் நமஸ்குரு  மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மானம் மத்-பராயண: “உன் மனதை எப்பொழுதும் என்னைச் சிந்திப்பதிலேயே ஈடுபடுத்தி, என்னுடைய பக்தனாகி, என்னை வணங்கி வழிபடுவாயாக, என்னில் ஆழமாக ஈடுபட்டு, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.” (பகவத் கீதை 9.34) (ஸ்ரீமத் பாகவதம் 10.84.22) ஸ்லோகத்தின் முக்கிய குறிப்புகள்: ...