Skip to main content

ஸர்வஜ்ஞன் / மாதவன் மாண்புகள் (பகுதி 1)


மாதவன் மாண்புகள் (பகுதி 1)

ஸர்வஜ்ஞன்

ஶ்ரீ கிருஷ்ணர் அனைத்தையும் அறியும் பேராற்றல் கொண்டவர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


நமஸ் தஸ்மை பகவதே க்ருஷ்ணாயாகுண்ட- மேதஸே 

ஸ்வ-யோகமாயயாச்சன்ன-மஹிம்னே பரமாத்மனே


மொழிபெயர்ப்பு

பரமபுருஷரும், எல்லையற்ற அறிவு படைத்த பரமாத்மாவும், தமது யோக-மாயையால் தமது மகிமையை மறைத்துக் கொண்டுள்ளவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நமது பணிவான வணக்கங்கள்.


பொருளுரை

பரமபுருஷரை வழிபடுவதால் அடையப்போகும் எதிர்கால இலாபம் ஒருபுறமிருக்க, தான் பகவானின் ஆதரவில் இருப்பதையும், தான் அவரது அடிமை என்பதையும் ஏற்றுக்கொள்ள்ளும் வகையில், ஒவ்வொருவரும் பகவானை வணங்க வேண்டியது மிகவும் முக்கியமான கடமையாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு சிபாரிசு செய்கிறார்:

மன்-மனா பவ மத்-பக்தோ யத்-யாஜீ மாம் நமஸ்குரு 

மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம் ஆத்மானம் மத்-பராயண:

“உன் மனதை எப்பொழுதும் என்னைச் சிந்திப்பதிலேயே ஈடுபடுத்தி, என்னுடைய பக்தனாகி, என்னை வணங்கி வழிபடுவாயாக, என்னில் ஆழமாக ஈடுபட்டு, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.” (பகவத் கீதை 9.34)


(ஸ்ரீமத் பாகவதம் 10.84.22)


ஸ்லோகத்தின் முக்கிய குறிப்புகள்:

  • பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு வணக்கம்: எல்லையற்ற அறிவு படைத்த பரமாத்மாவும், பரமபுருஷருமான பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நமது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்தல்.

  • மறைக்கப்பட்ட மகிமை: பகவான் தனது யோக-மாயை என்னும் சக்தியால், தனது உண்மையான மகிமையை ஜடக் கண்களுக்குத் தெரியாதவாறு மறைத்துக் கொண்டுள்ளார்.

  • முக்கியமான கடமை: ஒருவன் பகவானை வழிபடுவதால் எதிர்காலத்தில் அடையப்போகும் லாபங்களை எதிர்பார்ப்பதைக் காட்டிலும், தான் பகவானின் அடிமை என்பதையும், அவரது ஆதரவில் இருப்பதையும் உணர்ந்து அவரை வணங்குவதே முதன்மையான கடமையாகும்.

  • மனதை ஈடுபடுத்துதல்: “மன்-மனா பவ” - எப்பொழுதும் உனது மனதை பகவானைப் பற்றிய சிந்தனையிலேயே ஈடுபடுத்த வேண்டும்.

  • பக்தித் தொண்டு: பகவானின் பக்தனாகி, அவரைத் தொடர்ந்து வணங்கி வழிபடுவதன் மூலம் ஒருவன் அவரிடம் ஆழமான ஈடுபாடு கொள்கிறான்.

  • உறுதியான இலக்கு: இத்தகைய பக்திப் பாதையில் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பவன், நிச்சயமாக பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடமே சென்றடைவான் என்பது உறுதி.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

உத்வேக கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

திருவிழா குறித்த கட்டுரைகள்

Show more

பிரார்த்தனைகள்

Show more