Skip to main content

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

 



ஸ்ரீ-பகவான் உவாச
மய்யா-வேஷ்ய மனோ யே மாம்
நித்ய–யுக்தா உபாஸதே
ஷ்ரத்தயா பரயோபேதாஸ்
தே மே யுக்ததமா மதா:

மொழிபெயர்ப்பு
********************
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: தனது தனிப்பட்ட உருவின் மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன் எப்போதும் எனது வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகவும் பக்குவமானவர்களாக என்னால் கருதப்படுகிறார்கள்.
பொருளுரை
*****************
எவனொருவன் தனது தனிப்பட்ட உருவத்தின் மீது மனதை நிலைநிறுத்தி, பக்தியுடனும் நம்பிக்கையுடனும் தன்னை வழிபடுகின்றானோ, அவனே யோகத்தில் மிகவும் சிறந்தவனாகக் கருதப்படவேண்டும் என்று கிருஷ்ணர் மிகத் தெளிவாக அர்ஜுனனின் கேள்விக்கு இங்கு விடையளிக்கின்றார். இத்தகு கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கு ஜடச்செயல்கள் எதுவும் கிடையாது; ஏனெனில், அனைத்தும் கிருஷ்ணருக்காகச் செய்யப்படுகின்றன. தூய பக்தன் சதா சர்வ காலமும் செயலில் ஈடுபட்டுள்ளான்—சில நேரங்களில் அவன் ஜபம் செய்கின்றான், சில நேரங்களில் கிருஷ்ணரைப் பற்றிய நூல்களைப் படிக்கவோ கேட்கவோ செய்கின்றான், சில நேரங்களில் பிரசாதம் சமைக்கின்றான், சில நேரங்களில் கிருஷ்ணருக்காக ஏதேனும் வாங்குவதற்குச் சந்தைக்குச் செல்கின்றான், சில நேரங்களில் ஆலயத்தை தூய்மை செய்கின்றான், பாத்திரங்களைக் கழுவுகின்றான்—இவ்வாறாக அவன் எதைச் செய்தாலும் சரி, தனது செயல்களை கிருஷ்ணருக்கென அர்ப்பணிக்காமல் நொடிப்பொழுதையும் கழிப்பதில்லை. இத்தகு செயல் பூரண சமாதியில் இருப்பதாகும்

(பகவத் கீதை உண்மையுருவில் 12.2 )



பகவத் கீதை 12.2 - முக்கிய சாராம்சம் 


👑 மிகவும் பக்குவமான யோகி யார்? 

  • பகவானின் கூற்று: புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் மிகத் தெளிவாக இந்த ஸ்லோகத்தில் பதிலளிக்கிறார்.

  • பக்குவத்தின் இலக்கணம்: தனது தனிப்பட்ட உருவத்தின்  மீது மனதை நிலைநிறுத்தி, திவ்யமான நம்பிக்கையுடன் (பரம ஸ்ரத்தையுடன்) எப்போதும் தன்னை வழிபட்டு, தனது வழிபாட்டில் ஈடுபட்டிருப்பவர்களே (நித்ய-யுக்தா உபாஸதே) யோகத்தில் மிகவும் பக்குவமானவர்களாக (யுக்ததமா) கிருஷ்ணரால் கருதப்படுகிறார்கள்.


💖 தூய பக்தனின் செயல்பாடுகள்

  • ஜடச் செயலின்மை: கிருஷ்ண உணர்வில் இருப்பவனுக்கு ஜடச் செயல்கள் (Material activities) எதுவும் கிடையாது. ஏனெனில், அவன் செய்யும் அனைத்தும் கிருஷ்ணருக்காகவே  செய்யப்படுகின்றன.

  • சதாசர்வ காலமும் செயல்: தூய பக்தன் சதா சர்வ காலமும் கிருஷ்ணருக்கான செயலில் ஈடுபட்டுள்ளான்.

  • பக்தனின் எடுத்துக்காட்டுகள்: அவன் நொடிப்பொழுதையும் வீணாக்காமல் கிருஷ்ணருக்காகச் செய்யும் செயல்கள்:

    • ஜபம் செய்தல்.

    • கிருஷ்ணரைப் பற்றிய நூல்களைப் படித்தல்/கேட்டல்.

    • பிரசாதம் சமைத்தல்.

    • கிருஷ்ணருக்காக ஏதேனும் வாங்குவதற்குச் சந்தைக்குச் செல்லுதல்.

    • ஆலயத்தைத் தூய்மை செய்தல் மற்றும் பாத்திரங்களைக் கழுவுதல்.

  • பூரண சமாதி: இவ்வாறு தனது செயல்களை கிருஷ்ணருக்கென அர்ப்பணிக்காமல் நொடிப்பொழுதையும் கழிக்காமல் இருப்பதுவே பூரண சமாதியில்  இருப்பதாகும்.

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 


கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே


ஹரே ராம, ஹரே ராம, 


ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!



ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி



🔆🔆🔆🔆🔆🔆🔆



Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇



🔆🔆🔆🔆🔆🔆🔆



சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...