இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச்செய்தல்
இரண்யகசிபு கடுந்தவங்களினால் பிரம்மதேவரை மகிழ்வித்து தான் விரும்பிய வரங்களைப் பெற்றான். இந்த வரங்களைப் பெற்ற பின், கிட்டத்தட்ட முழுமையாக அரிக்கப்பட்டிருந்த அவனது உடல், முழு அழகும், தங்கத்தைப் போன்ற பளபளப்பும் கொண்ட ஓருடலாகப் புதுப்பிக்கப்பட்டது. ஆயினும், தன் சகோதரனைக் கொன்ற பகவான் விஷ்ணுவை மறக்கமுடியாமல் தொடர்ந்து அவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இரண்யகசிபு பத்துத் திசைகளையும் மூவுலகங்களையும் வென்று, தேவர்கள், அசுரர்கள் ஆகிய அனைத்து ஜீவராசிகளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான்.
இந்திரனின் இருப்பிடம் உட்பட எல்லா இடங்களுக்கும் அதிபதியாக மாறிய அவன், மிகவும் ஆடம்பரமாக வாழ்வை அனுபவிக்கத் துவங்கி வெறிபிடித்தவனானான். பகவான் விஷ்ணு, பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் ஆகியோரைத் தவிர மற்றெல்லா தேவர்களும் அவனது கட்டுப்பாட்டிற்கு அடிபணிந்து அவனுக்கு சேவை செய்யத் துவங்கினர். ஆனால் இவ்வளவு பௌதிக சக்தியை அவன் பெற்றிருந்த போதிலும், எப்பொழுதும் வேத விதிகளை மீறுவதில் பெருமை கொண்டு திமிர் பிடித்தவனாக இருந்ததால் அவன் திருப்தியடையாதவனாகவே இருந்தான். அனைத்து பிராமணர்களும் அவனிடம் அதிருப்தியடைந்து திடமனதுடன் அவனைச் சபித்தனர். இறுதியில் பிரபஞ்சத்திலுள்ள தேவர்கள் மற்றும் முனிவர்கள் முதலான அனைத்து ஜீவராசிகளும் இரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி பரம புருஷரிடம் பிரார்த்தனை செய்தனர்.
தேவர்களையும் பிற ஜீவராசிகளையும், இரண்யகசிபுவால் உருவாக்கப்பட்ட பயங்கரமான சூழ்நிலைகளிலிருந்து தாம் காப்பாற்றுவதாகப் பகவான் விஷ்ணு தேவர்களுக்கு அறிவித்தார். இரண்யகசிபு அனைத்து தேவர்களையும், வேதங்களைப் பின்பற்றுபவர்களையும், பசுக்களையும், பிராமணர்களையும், மற்றும் சாதுக்களையும் துன்புறுத்துபவனாகவும் பரமபுருஷரிடம் பகைமை கொண்டவனாகவும் இருந்ததால், இயல்பாகவே மிக விரைவில் அவன் கொல்லப்பட்டுவிடுவான் என்பது நிச்சயம். தன் சொந்த மகனும், மிகச் சிறந்த ஒரு வைஷ்ணவருமான (மஹா-பாகவதர்) பிரகலாதரைச் சித்திரவதை செய்வதுதான் அவனுடைய கடைசிச் செயலாகும். அதன்பிறகு அவனுடைய வாழ்வு முடிந்துவிடும். பரமபுருஷரால் தேவர்களுக்கு இவ்வாறு உறுதியளிக்கப்பட்டபொழுது, இரண்யகசிபுவின் கொடுமைகள் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்பதை அறிந்து அனைவரும் திருப்தியடைந்தனர்.
இரண்யகசிபுவின் தெய்வப் புதல்வரான பக்தப் பிரகலாதன்
பிரகலாத மகாராஜன் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவின் வழிபாட்டில் ஈடுபட்டிருந்ததால், அவர் தன் தந்தையின் உத்தரவுகளை நிறைவேற்றவில்லை. இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவது போல், இரண்யகசிபு தன் மகனான பிரகலாத மகாராஜனைப் பாம்பால் கடிக்கச் செய்தும், யானைகளின் பாதங்களுக்கிடையில் தள்ளியும் அவரைக் கொல்ல முயன்றான். எனினும், அதில் அவன் வெற்றி அடையவில்லை.
இரண்யகசிபுவின் குருவான சுக்ராச்சாரியருக்குச் சண்டன், அமர்க்கன் என்ற இரு மகன்கள் இருந்தனர். பிரகலாத மகாராஜன் கல்வி கற்பதற்காக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அந்த ஆசான்கள் சிறுவனான பிரகலாதருக்கு அரசியல், பொருளாதாரம் முதலான மற்ற பௌதிக விஷயங்களைப் போதிக்க முயன்றனர். ஆனால் அவர்களது போதனைகளை அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, தொடர்ந்து அவர் ஒரு தூய பக்தராகவே இருந்தார். பிரகலாத மகாராஜன் நண்பன், பகைவன் என்ற வேறுபாட்டை ஒருபோதும் விரும்பியதில்லை. அவர் ஆன்மீக நாட்டம் உடையவர் என்பதால், அனைவரிடமும் சமமாக நடந்துகொண்டார்.
ஒரு
தன் மகனிடமிருந்து பக்தித் தொண்டைப் பற்றி கேட்ட இரண்யகசிபு, பள்ளிக்கூடத்திலுள்ள யாரோ ஒரு நண்பனால் அவர் தவறாகப் போதிக்கப்பட்டுள்ளார் என்று முடிவு செய்தான். இவ்வாறாகத் தன் மகன் ஒரு கிருஷ்ண உணர்வுள்ள பக்தனாக மாறிவிடாதபடி அவரை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு அந்த ஆசான்களுக்கு இரண்யகசிபு அறிவுரை கூறினான். ஆனால், பிரகலாத மகாராஜன் தங்களுடைய போதனைகளுக்கு எதிராகச் செயல்படுவதன் காரணத்தை அந்த ஆசான்கள் தன்னிடமும் வினவியதைக் கேட்ட பிரகலாதர், "உரிமையாளன் என்ற மனோபாவம் பொய்யானது என்றும், எனவே தான் பகவான் விஷ்ணுவின் ஒரு தூய பக்தனாக மாற முயல்வதாகவும்" அந்த ஆசான்களுக்கு அவர் கற்பித்தார். இந்தப் பதிலைக் கேட்டு கடுங்கோபமடைந்த அந்த ஆசான்கள் பிரகலாதனைத் தண்டித்து, பலவிதமாக அவரைப் பயமுறுத்தினர். அவர்கள் தங்களால் இயன்றளவு சிறப்பாக அவருக்குக் கல்வி புகட்டி, அவரது தந்தையின் முன் கொண்டுவந்து நிறுத்தினர்.
இரண்யகசிபுவும் தன் மகன் பிரகலாதனை அன்புடன் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டு, இதுவரை பிரகலாதன் தன் ஆசான்களிடமிருந்து கற்றதில் சிறப்புடையது எது என்று வினவினான். வழக்கம் போலவே பிரகலாத மகாராஜன் ஸ்ரவணம், கீர்த்தனம் முதலான ஒன்பது பக்தித் தொண்டு முறைகளைப் போற்றத் துவங்கினார். இவ்வாறாக அசுரராஜனான இரண்யகசிபு கடுங்கோபமடைந்து, பிரகலாதனுக்குத் தவறான கல்வியைப் புகட்டியதற்காகச் சண்டனையும், அமர்க்கனையும் தண்டித்தான். பெயரளவேயான அந்த ஆசான்களும், பிரகலாத மகாராஜன் தானாகவே ஒரு பக்தன் என்றும், தங்களுடைய உபதேசங்களை அவர் கேட்பதில்லை என்றும் அந்த அரசனிடம் அறிவித்தனர்.
தங்களிடம் குற்றமில்லை என்பதை அவர்கள் நிரூபித்ததும்
இந்தப் பதிலைக் கேட்டு கோபாவேசமடைந்த இரண்யகசிபு, பிரகலாத மகாராஜனைத் தன் மடியிலிருந்து கீழே தள்ளினான். பிரகலாதன் தன் பெரியப்பனான இரண்யாக்ஷனைக் கொன்ற விஷ்ணுவின் பக்தனாக மாறி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதால், இரண்யகசிபு அவரைக் கொன்றுவிடும்படி தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டான். இரண்யகசிபுவின்
எனவே இரண்யகசிபு தன் மகன் பிரகலாதனிடம் அதிகம் அச்சம் கொண்டு அவரைக் கைது செய்தான். இரண்யகசிபுவின் குருவான சுக்ராச்சாரியரின் இரு மகன்களும் தங்களுடைய சொந்த வழியில் பிரகலாதனுக்குப் போதிக்கத் துவங்கினர். ஆனால் பிரகலாத மகாராஜன் அவர்களது போதனைகளை ஏற்றுய்கொள்ளவில்லை. அந்த ஆசான்கள் வகுப்பறையில் இல்லாத சமயம் பார்த்து, பிரகலாதன் அந்தப் பள்ளிக்கூடத்தில் கிருஷ்ண பக்தியைப் பிரச்சாரம் செய்யத் துவங்கினார். அவரது அந்த உபதேசங்களினால், அசுரர்களின் மகன்களான அவரது பள்ளித் தோழர்கள் அனைவரும் அவரைப் போலவே பக்தர்களாக மாறிவிட்டனர்.
தொடரும்...
நாளை: அசுரத் தோழர்களுக்குப் பிரகலாதரின் உபதேசம்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami




Comments
Post a Comment