Skip to main content

Posts

ஒரு சாதுவின் பண்புகள் மற்றும் செயல்பாடுகள் (பகுதி 1)

 ஒரு சாதுவின் முதன்மைப் பண்புகள்  மயிஅனந்யேன பாவேன பக்திம் குர்வந்தி யே த்ருடாம் மத் க்ருதே த்யக்தகர்மாணஸ் த்யக்த ஸ்வஜன பாந்தவா : மொழிபெயர்ப்பு அம்மாதிரி ஸாது விலகிச் செல்லாமல் பகவானிடம் கடும் உறுதியுடன் கூடிய பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார் . பகவானுக்காக அவர் உலகத்தில் குடும்ப உறவுகள் மற்றும் நட்பு பாராட்டுபவர்கள் போன்ற பிற தொடர்புகளை ஒதுக்கி விடுகிறார் . பொருளுரை துறவு வாழ்வில் இருப்பவர் , ஸந்யாஸி , ஸாது என்றும் அழைக்கப்படுகிறார் . ஏனென்றால் , அவர் எல்லாவற்றையும் தன் வீடு , தன் வசதி , தன் நண்பர்கள் , தன் உறவினர்கள் மற்றும் தன் நண்பர்கள் , குடும்பத்திற்கான தனது கடமைகள் , இவற்றைத் துறக்கிறார் . அவர் பரம புருஷ பகவானின் பொருட்டு இவற்றைத் துறக்கிறார் . சந்நியாசி பொதுவாக வாழ்வின் துறவு நெறியில் இருப்பவர் . ஆனால் அவர் துறவு அவரது ஆற்றல் , சிறந்த தவத்துடன் பகவானின் தொண்டில் செயல்பட்டால் மட்டுமே வெற்றியடையும் . அதனால் பக்திம் குர்வந்தி யே த்ருடாம் என்று இங்கு கூறப்படுகிறது . ஸாது என்பவர் பகவானின் ...

பக்தித் தொண்டின் உன்னதம்

  யமாதிபிர் யோக-பதை: காம-லோப-ஹதோ முஹு: முகுந்த-ஸேவயா யத்வத் ததாத்மாத்த ந ஸாம்யதி மொழிபெயர்ப்பு   யோக முறையைக் கொண்டு புலனடக்கத்தைப் பயில்வதால், ஒருவர் ஆசை மற்றும் காமம் ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து விடுபடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் ஆத்மாவை திருப்திப்படுத்துவதற்கு இது போதுமானதல்ல. ஏனெனில் இது (திருப்தி) பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டினால் மட்டுமே அடையப்படுவதாகும்.   பொருளுரை யோகம் புலன்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமர்தல், சிந்தித்தல், உணர்தல், விரும்புதல், மனதைக் குவித்தல், தியானம் செய்தல், இறுதியாக தெய்வீகத்தில் ஐக்கியமாகி விடுதல் ஆகிய தேகாப்பியாசங்களைக் கொண்ட யோக முறையைப் பயில்வதால், புலன்களைக் கட்டுப்படுத்த முடியும். புலன்கள் விஷமுள்ள பாம்புகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை அடக்குவதற்காகவே யோக முறை உள்ளது. மாறாக புலன்களை அடக்கும் மற்றொரு முறையை நாரதர் சிபாரிசு செய்கிறார். இது பரம புருஷ பகவானாகிய முகுந்தனின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடும் முறையாகும். புலன்களை செயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதைவிட பகவானின் பக்தித் தொண்டு முறை நடைமு...

ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 12.3.44

 

பத்மபுராணம் 4. பாதாளகண்டம் 84.30

 

பக்தி யோகம்

  பரம புருஷ பகவான் இங்கு எல்லா நன்மைகளுக்கும் எல்லா இன்பத்திற்கும் தேக்கிடமாக வர்ணிக்கப்படுகிறார் . நன்மையின் வழியில் அமைந்தால் ஒழிய ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிட்டாது . அதனால் , ஒருவரின் உடல் , மனம் , செயல்பாடுகள் அனைத்தும் பகவானின் தொண்டில் அமையும் பொழுது , அவர் நன்மையின் மிகவும் உயர்ந்த முழு நிலையில் இருக்கிறார் . கர்தம முனிவர் கூறுகிறார் : “ உங்களுடைய பிரபுத்துவம் எல்லாவற்றிற்கும் தேக்கிடமாகும் என்பதை நன்மையின் முறையான வழக்குச் சொல்லால் புரிந்துகொள்ள முடியும் , உங்களை நேருக்குநேர் , கண்ணோடு கண் பார்க்கும் அனுபவத்தின் மூலம் பார்வையின் முழுமை அடையப் பெற்றது .” இந்தக் கூற்றுகள் தூய பக்தியான நிலையாகும் ; ஒரு பக்தனுக்கு , புலன்களின் முழுமை என்பது பகவானின் தொண்டில் ஈடுபடலாகும் . பார்க்கும் ஆற்றல் பகவானின் அழகைப் பார்ப்பதில் ஈடுபடும்பொழுது முழுமையடைகிறது ; கேட்கும் ஆற்றல் , பகவானின் புகழைக் கேட்கும்பொழுது முழுமையடைகிறது ; சுவைக்கும் ஆற்றல் , பிரஸாதம் உண்பதில் மகிழும்போது முழுமையடைகிறது . எல்லாப் புலன்களும் ...