மொழிபெயர்ப்பு
என் அன்பான பகவானே, உங்களுடைய விருப்பம் இல்லாவிட்டாலும் எங்களுடைய புலன் திருப்திக்காக நீங்கள் இந்த முழுமையான நுட்பமான பூதங்களால் ஆகிய படைப்பை வெளிப்படுத்துகிறீர்கள். உங்களுடைய அகாரணமான கருணை எங்கள் மீது இருக்கட்டும். ஒளி பொருந்திய துளசி இலைகளால் ஆன மாலையால் அலங்கரிக்கப்பட்டு உங்களுடைய அழிவற்ற வடிவத்தில் எங்கள் முன் தோன்றியுள்ளீர்கள்.
இந்த ஜடவுலகம் பகவானின் தனிப்பட்ட விருப்பத்தால் படைக்கப்பட்டதல்ல என்பது இங்கு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது அவருடைய வெளி ஆற்றலால் படைக்கப்பட்டது. ஏனென்றால், வாழும் பொருள்கள் அதை அனுபவிக்க விரும்பின. புலன் நுகர்ச்சியை அனுபவிக்க விரும்பாதவருக்காகவும், உன்னதமான அன்புத் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பவருக்காகவும், கிருண்ண உணர்வு நிலையில் நிலையாக இருப்பவருக்காகவும் இந்த உலகம் படைக்கப்படவில்லை. அவர்களுக்கு புனித உலகம் நிலைத்து இருக்கும், அவர்கள் அங்கு அனுபவிக்கிறார்கள். பரம புருஷ பகவானின் பாத கமலங்களின் பாதுகாப்பைப் பெற்றவர்களுக்கு இந்த ஜடவுலகம் பயனற்றது. ஏனென்றால், இந்த உலகம் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து நிறைந்தது, இது பக்தர்களுக்கானது அல்ல. ஆனால் வாழும் பொருள்களில் தங்களுடைய சொந்தப் பொறுப்பில் ஜடவுலகச் சக்தியின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு ஆகும் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் வேறொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மிகவும் கருணை வாய்ந்தவர். புலன் விருப்பமுள்ள வாழும் பொருள்களுக்கென்று, அவை விரும்பும் வண்ணம் அனுபவிக்க அவரால் தனிப்பட்ட உலகம் படைக்கப்படுகிறது. ஆயினும் அதே சமயத்தில் அவர் தன் தனிப்பட்ட வடிவத்தில் தோன்றுகிறார். பகவான் விருப்பமின்றி இந்த ஜடவுலகத்தைப் படைக்கிறார். ஆனால் அவர் தனிப்பட்ட வடிவில் இறங்கி வருகிறார் அல்லது அவரின் நம்பத்தகுந்த பிள்ளைகளில் ஒருவரை அனுப்புகிறார். அல்லது ஒரு தொண்டன் அல்லது நம்பத்தகுந்த வியாஸதேவர் போன்ற ஆசிரியரை அறிவுரை அளிக்க அனுப்புகிறார். அவரே, பகவத் கீதையில் அவருடைய பேச்சுகள் மூலம் அறுவுறுத்துகிறார். இந்தப் பிரச்சார வேலை படைப்புடன் சேர்ந்து அக்கம் பக்கத்தில் நடக்கிறது. இந்த வேலை ஜடவுலகில் உழலும் தவறாக வழிகாட்டப்பட்ட உயிர்ப் பொருளை பகவானிடம் மீண்டும் வந்து சரணடையச் செய்வதற்காக நடைபெறுகிறது. அதனால் பகவத் கீதையின் கடைசி அறிவுரை இதுவாகும். “ஜடவுலகில் உன்னால் உருவாக்கப்பட்ட தொழில்களையும் விட்டுவிடு, என்னிடம் சரண் அடை. நான் உன்னை எல்லா எதிரிடையான பாவச் செயல்களிலிருந்தும் காப்பாற்றுவேன்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 3.21.20 / பொருளுரை வழங்கியவர்
ஶ்ரீல பிரபுபாதர் )
(பொருளுரை விளக்கம் ):
இந்த வாக்கியங்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையை மிக அழகாக எடுத்துரைக்கின்றன.
- 
இந்த உலகம் (ஜடவுலகம்) பகவானின் விருப்பத்தால் உருவாக்கப்பட்டது அல்ல, ஆனால் வாழும் உயிர்களின் (ஜீவன்களின்) விருப்பத்தால் உருவாக்கப்பட்டது. 
- அவர்கள் புலன்களால் அனுபவிக்க விரும்பியதால், இந்த உலகம் வெளிப்பட்டது. 
- 
ஆனால், பக்தர்கள் — உண்மையான ஆன்மீக சாதகர்களுக்கு, 
 இந்த உலகம் பயனற்றதும், ஆபத்தானதும்.
 ஏனெனில், பக்தர்கள் பகவானின் பாத கமலங்களில் உள்ள பாதுகாப்பையே நாடுகிறார்கள்.
- 
பகவான், கருணையால், தாம் விரும்பாமல் இந்த உலகத்தை உருவாக்கினாலும்,பிறவிப் பந்தத்தில் சிக்கிய ஜீவர்களை மீட்டிட, தாமே ஒரு வடிவத்தில் தோன்றுகிறார்கள் அல்லது தம் தூதர்களை அனுப்புகிறார். 
 (பொதுவாக ஒரு ஆசிரியராக, ஒரு பக்தராக, அல்லது சாஸ்திரங்களின் மூலம்).
- 
பகவத் கீதையில், பகவான் சொல்கிறார்: 
 “உன் கர்மங்களை விட்டுவிட்டு என்னிடம் சரணாக் கொள்; நான் உன்னை அனைத்து பாவங்களிலிருந்தும் காப்பாற்றுவேன்.”
 இது, அவர் எப்போதும் தயையாக இருப்பதை தெளிவாக்குகிறது.
முக்கியமான கருத்து:
- 
இந்த உலகம் பகவானின் ஆனந்தத்துக்காக உருவானது அல்ல,ஆனால் ஜீவர்களின் விருப்பம் காரணமாக உருவானது. 
- 
பகவான் மாயையின் மூலம் உலகத்தை உருவாக்கினார், 
 ஆனால் அவரது கருணையின் மூலம் இந்த உலகத்தில் தோன்றி,
 நம்மை மீட்க முயல்கிறார்.
- 
துளசி மாலையால் அலங்கரிக்கப்பட்ட அவர் நம்மை அருளால் நோக்குகிறார். 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

 
    .jpg)
.png)

Comments
Post a Comment