Skip to main content

Posts

Showing posts with the label Bhagavan / பகவான் (Articles)

பக்தர்களைக் காக்கும் பகவான்

பாண்டவர்கள் தங்களது மனைவியான திரெளபதியுடன் வனவாசத்தில் இருந்தபோது, துர்வாசரும் அவரது சீடர்களும் வனத்திற்குச் சென்று பாண்டவர்களை சந்தித்தனர். சத்திரியர்கள் என்ற முறையில் பாண்டவர்கள் பிராமணர்களை வரவேற்று உபசரிக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் துர்வாசரின் வருகைக்கு முன்னரே உணவருந்தி முடித்திருந்தனர் என்பதால், விருந்தினர்களுக்கு வழங்க அவர்களிடம் உணவு ஏதுமில்லை. குழப்பமடைந்த பாண்டவர்கள் உணவளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குள் ஸ்நானம் செய்து விட்டு வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டனர். பகவான் கிருஷ்ணர் தமது பக்தர்களை எப்போதும் காக்க வேண்டும் என சபதம் கொண்டுள்ளார். எனவே, பாண்டவர்கள் குழப்பத்திலிருந்தபோது கிருஷ்ணர் அங்கே சென்று, “என்ன பிரச்சனை?” என்று வினவினார். அவர்கள் நடந்ததை விளக்கினர். கிருஷ்ணர் திரௌபதி உணவருந்தி விட்டாளா என்பதை விசாரித்தார். அவளும் தான் உண்டு முடித்து விட்டதாகக் கூறினாள். [திரெளபதியிடம் ஒரு அட்சய பாத்திரம் இருந்தது: அவள் உணவருந்தாத வரை அந்த பாத்திரத்திலிருந்து எத்தனை விருந்தினர்கள் வந்தாலும், அவளால் உணவளிக்க முடியும்.] சமையலறையில் சிறிதளவேனும் உணவு உள்ளதா என கிருஷ்ண...

பகவான்

“பக” என்ற சொல்லுக்கு “வளம்” என்று பொருள். “வான்” என்றால் “உடையவர்”. (பகவான்- வளங்கள், சிறப்புக்கள், செல்வங்கள் உடையவர்) படைப்பின் சிறப்புக்களும், பகவானிடம் பொருந்தியுள்ளன. வேதங்களில் கூறப்பட்டுள்ளது போல் (கடோபநிஷத் 2.2.13) “நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான்” ‘நித்ய’ (ஒருமை) பகவான், ‘நித்யானாம்’ (பன்மை) ஜீவாத்மாக்கள் அதாவது உயிர்வாழிகள், ‘நித்ய நித்யானாம்’ - நாம் பலர், கடவுள் ஒருவரே. ஜீவன்கள் எண்ணிலடங்காதவை. “அனந்த” என்றால் “எல்லையற்றவை” இந்த ஜீவன்கள் (உயிர்வாழிகள்) எல்லாம் பரமபுருஷனான பகவானால் பராமரிக்கப்படுகின்றன. சிறிய எறும்பு முதல் பெரிய யானை போன்ற 84,00,000 உயிரின வகைகள் பகவானால் பராமரிக்கப்படுகின்றன. நம்மை அவர் காப்பாற்றமாட்டாரா என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பகவானின் பக்தர்களாயிருந்து அவரது பாதகமலங்களில் சரணடைந்து அவருக்குத் தொண்டாற்றுவதற்காக மற்றெல்லாவற்றையும் துறந்திருப்பவர்கள் நிச்சயமாகக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள். எமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் 350க்கும் மேலான மையங்கள் உள்ளன; கிருஷ்ணர் அவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார். எமது பக்தித் தொண...