Skip to main content

Posts

Showing posts with the label Austerity / கடுமையான தவம் (Articles)

ஸ்தித–ப்ரக்ஞன்

  ஆபூர்யமாணம் அசல – ப்ரதிஷ்ட ம் ஸமுத் ரம் ஆப : ப்ரவிஷ ந்தி யத் வத் தத் வத் காமா யம் ப்ரவிஷ ந்தி ஸர்வே ஸ ஷா ந்திம் ஆப்னோதி ந காம – காமீ நதிகள் கடலில் வந்து கலந்தாலும் , கடல் மாறுவதில்லை . அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும் . அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல . பொருளுரை :  பெருங்கடலில் எப்போதும் நீர் நிரம்பியிருந்தாலும் , மழைக்காலத்தில் குறிப்பாக மேன்மேலும் நீரால் நிரம்புகின்றது . ஆயினும் கடல் எப்போதும் போல நிலையாக உள்ளது ; கிளர்ச்சியடைவதோ , தனது கரையைத் தாண்டுவதோ இல்லை . கிருஷ்ண உணர்வில் நிலை பெற்றவனின் விஷயத்திலும் இஃது உண்மையாகிறது . ஜடவுடல் இருக்கும் வரை புலனுகர்ச்சிக்கான ஆசைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் . தனது பூரண நிலையால் , பக்தன் இத்தகு ஆசைகளால் பாதிக்கப்படுவ தில்லை . கிருஷ்ண பக்தனுக்கு எதுவும் தேவையில்லை ; ஏனெனில் , அவனது எல்லா பௌதிகத் தேவைகளையும் இறைவனே பூர்த்தி செய்கிறார் . எனவே , அவன் தன்னில் முழுமையுடைய கடலைப் போன்றவன் . கட...

அளவுக்கதிகமான தவத்திலோ அல்லது அளவுக்கதிகமான புலன் நுகர்விலோ ஈடுபடுபவனால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாது

ஒருவன் தன் மனதைக் கிருஷ்ண உணர்வில் உறுதியாக ஈடுபடுத்தினாலும், மிகவும் சஞ்சலமுள்ள மனமானது திடீரென்று அதன் ஆன்மீக நிலையிலிருந்து வழுவிடக்கூடும். அப்பொழுது ஒருவன் தன் மனதைக் கவனமாக தன் வசப்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான தவத்திலோ அல்லது அளவுக்கதிகமான புலன் நுகர்விலோ ஈடுபடுபவனால் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாது என்று பகவத்கீதை குறிப்பிடுகிறது. சிலசமயம் ஜடப் புலன்களுக்கு ஓரளவு திருப்தியைக் கொடுப்பதால் ஒருவன் தன் மனதைத் தன் வசம் கொண்டுவரக்கூடும். உதாரணமாக, ஒருவர் அதிகமான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளக்கூடும் என்றாலும், அவ்வப்போது போதுமான அளவு மகா-பிரசாதத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளலாம். இதனால் மனம் சஞ்சலப்படாமல் இருக்கும். அதுபோலவே, ஒருவன் பிற பக்தர்களோடு நகைச்சுவை, நீச்சல் போன்றவை மூலம் அவ்வப்போது ஓய்ந்திருக்கலாம். ஆனால் இவை அளவுக்கதிகமாக செய்யப்படுமானால், ஆன்மீக வாழ்வில் பிற்போக்கான நிலை ஏற்படும். தீய உறவு அல்லது மது அருந்துதல் போன்ற பாவச் செயல்களை மனம் விரும்பினால் மனதின் அந்த முட்டாள்தனத்தை ஒருவன் சகித்துக்கொண்டு, பெருமுயற்சியோடு கிருஷ்ண உணர்வைத் தொடரவேண்டும். இதனால் மதிமயக்க அலைகள் விரை...