Skip to main content

Posts

Showing posts with the label Kirtanam / கீர்த்தனம் (Articles)

வேத சடங்குகளை விட ஹரி நாம சங்கீர்த்தனம் முக்கியமானது.

  பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதாலேயே மிகவுயர்ந்த வெற்றியைச் சுலபமாக ஒருவனால் அடைந்துவிட முடியும் என்பதால், பல வேதக் கிரியைகள் இருப்பதும் அவற்றால் மக்கள் கவரப்படுவதும் ஏன் என்று ஒருவர் கேட்கக்கூடும்.  பகவத்கீதை (15.15) பின்வருமாறு கூறுகிறது, வேதைஸ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்ய: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை அணுகுவதே வேதக் கல்வியின் உண்மையான நோக்கமாகும். துரதிர்ஷ்டவசமாக, வேத யக்ஞங்களின் பகட்டில் மதிமயங்கியுள்ள அறிவிலிகள், ஆடம்பரமாக யாகங்கள் செய்யப்படுவதைக் காண விரும்புகின்றனர். வேத மந்திரங்கள் ஓதப்படுவதையும், இத்தகைய சடங்குகளுக்கு ஏராளமான பொருள் செலவிடப்படுவதையும் இவர்கள் விரும்புகின்றனர். சில சமயங்களில் இத்தகைய புத்தியற்ற மனிதர்களை திருப்திப்படுத்துவதற்காக நாம் வேதக் கிரியைகளை அணுஷ்டிக்க வேண்டியுள்ளது. பிருந்தாவனத்தில், பெரிய கிருஷ்ண பலராமர் ஆலயம் ஒன்றை சமீபகாலத்தில் நாம் நிறுவினோம். அப்பொழுது உள்ளூர் பிராமணர்களால் நடத்தப்பட்ட வேதக் கிரியைகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டது. ஏனெனில் பிருந்தாவன வாசிகள், குறிப்பாக ஸ்மார்த்த - பிராமணர்கள் ஐரோப்பியர்களையும், அமெரிக...

ஹரே கிருஷ்ண ஸங்கீர்த்தன இயக்கத்தின் காலம்

கலியுகம் களங்கள் நிறைந்ததாகும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3.51) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: கலேர் தோஷ - நிதே ராஜன் அஸ்தி ஹி ஏகோ மஹான் குண: கீர்த்னாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத் இக்கலியுகம் அளவற்ற குற்றங்கள் நிறைந்ததாகும். உண்மையில், இது கடலளவு குற்றங்களைக் கொண்டுள்ளது. (தோஷ - நிதி). ஆனால் ஒரு வாய்ப்பு, ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்: ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதாலேயே, கலியுகத்தின் களங்கத்திலிருந்து ஒருவர் விடுபட்டு, அவரது சுயமான ஆன்மீக உடலில், அவர் பரம பதத்தைச் சென்றடைய முடியும், இதுவே கலியுகத்தில் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பமாகும். கிருஷ்ணர் தோன்றிபோது, அவரது கட்டளைகளை அவர் கொடுத்தார். மேலும் கிருஷ்ணரே, ஒரு பக்தராக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவாக தோன்றியபோது, கலியுகக் கடலை கடப்பதற்கான வழியை அவர் நமக்குக் காட்டினார். அதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பாதையாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தோன்றியபோது, இந்த சகாப்தத்தின் ஸங்கீர்த்தன இயக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இந்த சகாப்தம் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ள...

பரமபுருஷரைத் துதிக்கும் முறையே கீர்த்தனம் எனப்படுகிறது,

  அஹம் ச காயம்ஸ் தத் - வித்வான் ஸ்த்ரீபி : பரிவ்ருதோ கத : ஞாத்வா விஸ்வ - ஸ்ருஜஸ் தன் மே ஹேலனம் சேபுர் ஓஜஸா யாஹி த்வம் சூத்ரதாம் ஆக நஷ்ட - ஸ்ரீ : க்ருத - ஹேலன : மொழிபெயர்ப்பு நாரதமுனிவர் தொடர்ந்து கூறினார் : அவ்விழாவிற்கு அழைக்கப்பட்டதால் நானும் அதில் கலந்து கொண்டேன் . நான் பெண்களால் சூழப்பட்டபடி தேவர்களின் பெருமைகளை வாத்தியத்துடன் பாட ஆரம்பித்தேன் . இதனால் பிரபஞ்ச விவகாரங்களின் பொறுப்பாளிகளான பிரஜபாதிகள் ( சக்தி வாய்ந்த தேவர்கள் ), “ நீ இக்குற்றத்தைப் புரிந்ததனால் , அழகை இழந்து உடனே ஒரு சூத்திரனாக ஆகக் கடவாய் ” என்ற சொற்களால் என்னைச் சபித்தனர் . பொருளுரை ஒருவன் பரமபுருஷரின் மகிமைகளையும் , அவரது புனித நாமத்தையும் பாட வேண்டும் ( ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ :) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன . அதாவது , ஒருவன் பகவான் விஷ்ணுவைப் பற்றியும் , அவரது மகிமைகளைப் பற்றியும் பாட வேண்டும் , தேவர்களின் மகிமைகளை அல்ல . துரதிர்ஷ்டவசமாக சில முட்டாள்கள் தேவர்களின் பெயர்களைத் தொகுத்து கீர்த்தனமாகப் பாடும் முறையைக் கண்டு ...

ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண புண்ய-ஷ்ரவண-கீர்தன:

  சூரியனில் இருள் என்னும் கேள்விக்கு இடமில்லாததைப் போலவே, ஆன்மீக உலகிலும் இருள் அல்லது அறியாமை என்னும் கேள்விக்கு இடமே இல்லை. அங்குள்ள அனைவரும் அனைத்து பொருள்களும் ஸுத்த-ஸத்வ நிலையில், தூய்மையான ஸத்வ குணத்தில் இருக்கின்றன(ர்). சாதாரண ஸத்வம் அல்ல, ஸுத்த-ஸத்வம். இந்த பௌதிக உலகில் முக்குணங்கள் உள்ளன–ஸத்வம், ரஜோ, தமோ. இவற்றில் எந்த குணமும் தூய்மையானதல்ல: ஒன்று மற்றொன்றோடு கலந்துள்ளது. அந்த கலவையினால் பல தரப்பட்ட உயிரினங்களைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் ஸுத்த-ஸத்வ, தூய்மையான ஸத்வத்தின் தளத்திற்கு வர வேண்டும். இதற்கான மிகச்சிறந்த வழி, அதிகாரபூர்வமான மூலத்திலிருந்து கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதாகும். இதனை ஸ்ரீமத் பாகவதம் (1.2.17) பின்வருமாறு விளக்குகின்றது: ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண புண்ய-ஷ்ரவண-கீர்தன: ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம் “அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை முறையாகக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தரக்கூடியதாகும். அச்செய்தி களைக் கேட்பதில் ஆர்வத்தை வளர்த்துக்...

காகங்களும் அன்னப் பறவைகளும்

  ந யத் வசஸ் சித்ர-பதம் ஹரேர் யசோ ஜகத்-பவித்ரம் ப்ரக்ருணீத கர்ஹிசித் தத் வாயஸம் தீர்தம் உசந்தி மானஸா ந யத்ர ஹம்ஸா நிரமந்தி உசிக்-க்ஷயா: மொழிபெயர்ப்பு 🔆🔆🔆🔆🔆🔆🔆 பிரபஞ்சத்தின் முழு சூழ்நிலையையும் தூய்மைப்படுத்தக்கூடியவர் பகவான் ஒருவரேயாவார். அவரது பெருமைகளை விவரிக்காத அந்த சொற்கள் காக்கைகளைப் போன்ற கர்மிகளின் தீர்த்தம் என்று புண்ணிய புருஷர்களால் கருதப்படுகின்றன. பூரணத்துவம் பெற்றவர்கள் பரலோகவாசிகளாக இருப்பதால், காக்கைகளுக்குரிய இடத்தில் அவர்கள் எவ்வித இன்பத்தையும் பெறுவதில்லை. பொருளுரை 🔆🔆🔆🔆🔆🔆🔆 காகங்களும் அன்னப் பறவைகளும் மன வேறுபாடு கொண்டவை என்பதால் அவை ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகள் அல்ல. பலனை எதிர்பார்த்து செயற்படுபவர்கள் (கருமிகள்) காகங்களோடு ஒப்பிடப்படுகின்றனர். ஆனால் பூரணத்துவம் பெற்ற புண்ணியவான்கள் அன்னப் பறவைகளோடு ஒப்பிடப்படுகின்றனர். கருமிகள் மதுவிலும், மங்கையிலும், புலன் நுகர்விலும் இன்பம் பெறுவதைப் போலவே, வெளியில் வீசப்படும் குப்பைகள் இருக்கும் இடத்தில் காகங்கள் இன்பம் பெறுகின்றன. காகங்கள் கூடும் இடங்களில் அன்னப் பறவைகள் இன்பம் அடைவதில்லை. மாறாக, பல நிறங்களையும், ...